டாடா ஹேரியர் 7 சீட்டர் எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

டாடா ஹேரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலின் சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட எக்ஸ்க்ளூசிவ் படங்கள் கிடைத்துள்ளன. 5 சீட்டர் ஹேரியர் எஸ்யூவியைவிட சில மாற்றங்களை டி பில்லர் பகுதியில் காண முடிகிறது.

டாடா ஹேரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலின் சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட எக்ஸ்க்ளூசிவ் படங்கள் மற்றும் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா ஹேரியர் 7 சீட்டர் எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

கடந்த பிப்ரவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் டாடா எச்5எக்ஸ் என்ற கான்செப்ட் எஸ்யூவி தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தப்பட்டு ஹேரியர் என்ற பெயரில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில், 5 சீட்டர் மாடலுக்கு ரூ.30,000 முன்பணத்துடன் புக்கிங் ஏற்கப்பட்டு வருவதுடன், ஜனவரியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

டாடா ஹேரியர் 7 சீட்டர் எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

இந்த நிலையில், டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் அடிப்படையிலான 7 சீட்டர் மாடல் தற்போது தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. 5 சீட்டர் ஹேரியர் எஸ்யூவியைவிட சில டிசைன் மாற்றங்களுடன் இந்த 7 சீட்டர் மாடல் வித்தியாசத்தை பெற்றிருக்கிறது.

டாடா ஹேரியர் 7 சீட்டர் எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

காரின் நீளம் அதிகரிக்கப்பட்டு இருப்பதுடன், டி பில்லர் பகுதி டிசைனிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. தற்காலிகமான டெயில் லைட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளன. ரூஃப் ஸ்பாய்லரும் இடம்பெற்றிருக்கின்றன. சுறா துடுப்பு வடிவிலான ஆன்டென்னாவும் இடம்பெற்றிருப்பதை காண முடிகிறது.

டாடா ஹேரியர் 7 சீட்டர் எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

ஸ்டீல் வீல்கள் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. டாடா ஹேரியர் 5 சீட்டர் மாடலைப் போன்ற முன்புற டிசைனில்தான் 7 சீட்டர் மாடலும் வரும் என்று தெரிகிறது. மொத்தத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும் அளவுக்கு பிரம்மாண்ட தோற்றத்தை பெற்றிருக்கிறது.

டாடா ஹேரியர் 7 சீட்டர் எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவி லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் உருவாக்கப்பட்ட ஒமேகா பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் டிசைனஅ 2.0 டிசைன் கொள்கையில் வடிவமைக்கப்படும் முதல் மாடல் என்ற பெருமையையும் பெறுகிறது.

டாடா ஹேரியர் 7 சீட்டர் எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

டாடா ஹேரியர் எஸ்யூவியின் 5 சீட்டர் மாடல் டிசைன் பலராலும் சிலாகித்து கூறப்பட்டு வரும் நிலையில், அதனை 7 சீட்டர் மாடலும் தக்க வைக்கும் என்று நம்பலாம். மேலும், முக்கோண வடிவிலான அறையில் ஹெட்லைட் கொடுக்கப்பட்டு இருப்பதும், பானட்டை ஒட்டி எல்இடி பகல்நேர விளக்குகளும் இடம்பெற்றிருக்கின்றன.

டாடா ஹேரியர் 7 சீட்டர் எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியில் ஃபியட் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் 2.0 லிட்டர் க்ரையோடெக் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 5 சீட்டர் மாடலில் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் விதத்திலும், 7 சீட்டர் மாடலில் 170 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் விதத்திலும் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஹூண்டாய் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் 6 ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

டாடா ஹேரியர் 7 சீட்டர் எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

டாடா ஹேரியர் 5 சீட்டர் மாடல் ஜனவரியில் விற்பனைக்கு வரும் நிலையில், 7 சீட்டர் ஹேரியர் எஸ்யூவி அடுத்த ஆண்டு பிற்பகுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி500, டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும். இந்த எஸ்யூவியின் விலை போட்டியாளர்களைவிட குறைவாக இருக்கும் என்பதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Most Read Articles
English summary
Tata Motors is all set to launch the Harrier SUV in the India market in early 2019. Tata Motors has already commenced the production of Harrier and the first SUV has been rolled out of the Pune plant.
Story first published: Saturday, November 3, 2018, 10:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X