பெங்களூரில் முக்காடு போட்டு சுற்றும் டாடா ஹேரியர் - எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!!

டாடா ஹேரியர் எஸ்யூவி பெங்களூரில் வைத்து தொடர்ந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அங்க அடையாளங்கள் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், டாடா ஹேரியர் எஸ்யூவி தொடர்ந்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட

டாடா ஹேரியர் எஸ்யூவியின் புரோட்டோடைப் மாடல் பெங்களூரில் வைத்து தொடர்ந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று பெங்களூரில் வைத்து சோதனை செய்யப்பட்டு கொண்டிருந்த டாடா ஹேரியர் எஸ்யூவியின் பிரத்யேக படங்கள் டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு கிடைத்துள்ளன. அந்த படங்கள் மற்றும் விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பெங்களூரில் முக்காடு போட்டு சுற்றும் டாடா ஹேரியர் - எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!!

அங்க அடையாளங்கள் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், டாடா ஹேரியர் எஸ்யூவி தொடர்ந்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆய்வில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் புரோட்டோடைப் மாடலில் மாறுதல்கள் செய்யப்பட்டு தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தப்படும்.

பெங்களூரில் முக்காடு போட்டு சுற்றும் டாடா ஹேரியர் - எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!!

மிக பிரம்மாண்டமான தோற்றத்திலான எஸ்யூவி மாடலாக பின்புறம் தோற்றமளிக்கிறது. தற்காலிக ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. வலிமையான பம்பர் அமைப்பு, ரூஃப் ஸ்பாய்லர் உள்ளிட்டவற்றை காண முடிகிறது.

பெங்களூரில் முக்காடு போட்டு சுற்றும் டாடா ஹேரியர் - எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!!

இதில், ஹைலைட்டாக 19 அங்குல அலாய் வீல்கள் மிக பிரம்மாண்டமாக இருக்கிறது. பின்புறத்தில் ஸ்கிட் பிளேட் பொருத்தப்பட்டு இருக்கும் என்பதை கணிக்க முடிகிறது. ஆனால், முழுமையாக மூடப்பட்டிருப்பதால், பெரும்பாலான அம்சங்களை யூக அடிப்படையிலேயே சொல்ல முடியும்.

பெங்களூரில் முக்காடு போட்டு சுற்றும் டாடா ஹேரியர் - எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!!

டாடா ஹாரியர் எஸ்யூவி 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் வருகிறது. இதில், 5 சீட்டர் மாடல் ஹேரியர் என்ற பெயரில், முதலில் விற்பனைக்கு வர இருக்கிறது. அடுத்து 7 சீட்டர் மாடல் வேறு பெயரில் வர அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

பெங்களூரில் முக்காடு போட்டு சுற்றும் டாடா ஹேரியர் - எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!!

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியானது லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி உருவாக்கப்பட்ட L550 பிளாட்ஃபார்மின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒமேகா (Optimal Modular Efficient Global Advanced) பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரில் முக்காடு போட்டு சுற்றும் டாடா ஹேரியர் - எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!!

ஒரே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருப்பதால், லேண்ட்ரோவர் டிஸ்கவரி காரில் இருக்கும் ஸ்டீயரிங் அமைப்பு, சஸ்பென்ஷன் உள்ளிட்டவை இந்த காரில் பயன்படுத்தப்பட இருக்கிறது. வீல்பேஸ் கூட ஒன்றுதான். ஹேரியர் விலையை குறைக்கும் விதத்தில், கட்டுமானப்பொருட்கள் தரம் வித்தியாசப்படும்.

பெங்களூரில் முக்காடு போட்டு சுற்றும் டாடா ஹேரியர் - எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!!

இந்த மாடலானது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் கொாள்கையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் முதல் மாடல். எதிர்காலத்தில் டாடா கார்களின் டிசைன் எப்படி இருக்கும் என்பதற்கு முன்னோட்டமாக இந்த மாடல் அமையும். டாடா கார்களுக்கு உரிய சிறப்பான இடவசதியையும் அளிக்கும்.

பெங்களூரில் முக்காடு போட்டு சுற்றும் டாடா ஹேரியர் - எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!!

ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்தான் டாடா ஹேரியர் எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஜீப் காம்பஸ் எஸ்யூவியிலும் இதே எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

பெங்களூரில் முக்காடு போட்டு சுற்றும் டாடா ஹேரியர் - எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!!

அதேநேரத்தில், டாடா H7X என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் 7 சீட்டர் மாடலில் இதே எஞ்சின் 175 பிஎச்பி பவரை அளிக்கும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கும். ஹூண்டாய் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மாடலிலும் வருகிறது.

பெங்களூரில் முக்காடு போட்டு சுற்றும் டாடா ஹேரியர் - எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!!

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியில் ஃப்ளோட்டிங் ரக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பிரீமியம் ஆடியோ சிஸ்டம், உயர்தரமான அப்ஹோல்ஸ்ட்ரி,லெதர் இருக்கைகள், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி போன்ற பல சிறப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கும். பாதுகாப்பு வசதிகளிலும் ஹேரியர் மிகச் சிறப்பான மாடலாக இருக்கும்.

பெங்களூரில் முக்காடு போட்டு சுற்றும் டாடா ஹேரியர் - எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!!

அடுத்த ஆண்டு முதல் பாதியில் இந்த புதிய டாடா ஹேரியர் எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா, ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களுடன் 5 சீட்டர் மாடல் போட்டி போடும். போட்டியாளர்களுக்கு மிக சவாலான பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று நம்பலாம்.

பெங்களூரில் முக்காடு போட்டு சுற்றும் டாடா ஹேரியர் - எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!!

டாடா H7X என்ற 7 சீட்டர் மாடல் அடுத்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவியானது டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும் வகையில் பிரிமியம் எஸ்யூவி மாடலாக இருக்கும். ரூ.25 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Here are some exclusive spy photos and details about new Tata Harrier SUV.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X