டாடா ஹேரியர் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவி XE, XM, XT மற்றும் XZ ஆகிய 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். ரூ.16 லட்சம் முதல் ரூ.21 லட்சம் இடையிலான விலையில் இந்த 4 வேரியண்ட்டுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இ

புத்தாண்டில் புதிய டாடா ஹேரியர் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த எஸ்யூவியின் வேரியண்ட் விபரங்களும், அதில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் விபரமும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரங்களை தெரிந்து கொண்டால், இந்த காரை முன்பதிவு செய்வது எளிதாக இருக்கும் என்ற எண்ணத்தில் முக்கிய வசதிகளை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

டாடா ஹேரியர் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவி XE, XM, XT மற்றும் XZ ஆகிய 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். ரூ.16 லட்சம் முதல் ரூ.21 லட்சம் இடையிலான விலையில் இந்த 4 வேரியண்ட்டுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த எஸ்யூவியின் பேஸ் மாடலிலேயே அதிக வசதிகள் நிரம்பி கிடக்கின்றன. ஒவ்வொரு வேரியண்ட்டிலும் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை பார்க்கலாம்.

டாடா ஹேரியர் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

டாடா ஹேரியர் எக்ஸ்இ வேரியண்ட் (பேஸ் மாடல்) வசதிகள் விபரம்

இந்த ஆரம்ப ரக மாடலில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 16 அங்குல ஸ்டீல் சக்கரங்கள், எல்இடி டெயில் லைட்டுகள், பவர் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள் ஆகியவை வெளிப்புறத்தில் முக்கிய அம்சங்களாக உள்ளன.

டாடா ஹேரியர் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

4 விதமான நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் ஓட்டுனர் இருக்கை, மேனுவல் ஏசி சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள், 4 அங்குல மல்டி இன்பர்மேஷன் டிஸ்ப்ளே, சென்ட்ரல் லாக்கிங் வசதி

இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்,, பார்க்கிங் சென்சார்கள், குறிப்பிட்ட வேகத்தில் தானாக கதவுகள் தாழிட்டுக் கொள்ளும் வசதி, சீட் பெல்ட் ரிமைன்டர் வசதிகள் உள்ளன.

டாடா ஹேரியர் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

டாடா ஹேரியர் எக்ஸ்எம் வேரியண்ட் (நடுத்தர விலை மாடல்) வசதிகள் விபரம்

பேஸ் மாடலில் இருக்கும் வசதிகளுடன் சேர்த்து கூடுதலாக முன்புறத்தில் பனி விளக்குகள், ஃபாலோ மீ ஹெட்லைட், ரியர் வைப்பர், பூட் ரூம் லைட், ரியர் பார்சல் டிரே, 7.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

டாடா ஹேரியர் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

இந்த வேரியண்ட் முதல்தான் ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங் மற்றும் ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று டிரைவிங் மோடுகள் உள்ளிட்ட வசதிகளை பெற முடியும்.

டாடா ஹேரியர் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

டாடா ஹேரியர் எக்ஸ்டி வேரியண்ட் (உயர்வகை மாடல்) வசதிகள் விபரம்

மேற்கண்ட இரண்டு வேரியண்ட்டுகளில் உள்ள முக்கிய வசதிகளுடன் கூடுதலாக ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், டியூவல் ஃபங்ஷன் எல்இடி பகல்நேர விளக்குகள், 17 அங்குல அலாய் சக்கரங்கள், ரியர் டீஃபாகர் வசதி, புஷ் பட்டன் ஸ்டார்ட், 8 விதமான நிலைகளில் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதிகள் உள்ளன.

டாடா ஹேரியர் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

தவிரவும், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், வீடியோ பிளேபேக் வசதி, வாய்ஸ் கன்ட்ரோல், ஆன்ட்ராய்டு ஆட்டோ, கப் ஹோல்டருடன் கூடிய பின் இருக்கைக்கான ஆர்ம் ரெஸ்ட், பவர் ஃபோல்டிங் சைடு மிரர்கள், ரிவர்ஸ் கேமரா ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன.

டாடா ஹேரியர் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

டாடா ஹேரியர் எக்ஸ்இசட் (விலை உயர்ந்த மாடல்) வேரியண்ட்டின் வசதிகள் விபரம்

அனைத்து வசதிகளும் பொருந்திய இந்த டாப் வேரியண்ட்டில் கூடுதலாக ஸினான் எச்ஐடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், முன்புற பனி விளக்குகள் மற்றும் கார்னரிங் விளக்குகள், 7.0 அங்குல மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே, 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 60: 40 என்ற விகிதத்தில் மடக்கக்கூடிய பின் இருக்கைகள், சாதாரண சாலை, ஈரப்பதம் மிக்க சாலை மற்றும் கரடுமுரடான சாலைகளுக்கு ஏற்ப மாற்றுவதற்கான டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.

டாடா ஹேரியர் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

இந்த எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஹோல்டு மற்றும் ஹில் டிசென்ட் கன்ட்ரோல் வசதிகள் உள்ளன. கார் கவிழ்வதை தவிர்க்கும் ரோல் ஓவர் மிட்டிகேஷன் வசதி, கார்னரிங் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹைட்ராலிக் பிரேக் அசிஸ்ட் ஆகிய வசதிகள் உள்ளன.

டாடா ஹேரியர் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

எஞ்சின்

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 138 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வசதியுடன் வருகிறது. 2 வீல் டிரைவ் மாடலில் மட்டுமே வருகிறது. 4 வீல் டிரைவ் ஆப்ஷன் பின்னர் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

டாடா ஹேரியர் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

வண்ணத் தேர்வுகள்

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவி கலிஸ்ட்டோ காப்பர், ஏரியல் சில்வர், தெர்மிஸ்ட்டோ கோல்டு, ஆர்கஸ் ஒயிட் மற்றும் டெலிஸ்ட்டோ க்ரே ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும்.

Most Read Articles
English summary
The Tata Harrier will be available in a choice of four variants: XE, XM, XT & XZ.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X