டிரக்கில் மோதி தீப்பிடித்த டாடா ஹெக்ஸா கார்... அதிவேகத்தால் நடந்த பயங்கரம்!!

மும்பையில், அதிவேகத்தில் சென்ற டாடா ஹெக்ஸா கார் சாலையை சுத்தப்படுத்தும் டிரக் மீது மோதி பயங்கர விபத்தில் சிக்கியது. அந்த டாடா ஹெக்ஸா கார் மணிக்கு 120 கிமீ வேகத்தில் வந்தபோது டிரக்கில் மோதியதாக போலீசார

By Saravana Rajan

மும்பையில், அதிவேகத்தில் சென்ற டாடா ஹெக்ஸா கார் சாலையை சுத்தப்படுத்தும் டிரக் மீது மோதி பயங்கர விபத்தில் சிக்கியது. இதில், இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

டிரக்கில் மோதி தீப்பிடித்த டாடா ஹெக்ஸா கார்... அதிவேகத்தால் நடந்த பயங்கரம்!!

அதிவேகத்தில் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து ஏற்கனவே பலமுறை செய்திகள் வழங்கி இருக்கிறோம். அதற்கு சான்றாக சில விபத்து சம்பவங்களின் அடிப்படையிலான செய்திகளையும் தந்து வந்துள்ளோம். அந்த வரிசையில், மும்பையில் நடந்துள்ள டாடா ஹெக்ஸா கார் விபத்து அதிவேகத்தின் ஆபத்தை மீண்டும் ஒருமுறை பாடம் கற்பித்துள்ளது.

டிரக்கில் மோதி தீப்பிடித்த டாடா ஹெக்ஸா கார்... அதிவேகத்தால் நடந்த பயங்கரம்!!

மும்பை கார்பரேஷனுக்கு சொந்தமான டிரக் ஒன்று நேற்றுமுன்தினம் அதிகாலை சாலையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இருந்தது. தூய்மைப்படுத்தும் பணிகளின்போது அந்த டிரக் மெதுவாகவே இயக்கப்படும்.

டிரக்கில் மோதி தீப்பிடித்த டாடா ஹெக்ஸா கார்... அதிவேகத்தால் நடந்த பயங்கரம்!!

இந்த நிலையில், அந்த சாலையில் அதிவேகத்தில் வந்த டாடா ஹெக்ஸா கார் அந்த டிரக்கின் பின்புறத்தில் அதிவேகத்தில் மோதியது. இந்த பயங்கர விபத்தில் கார் அப்பளம் போல உருக்குலைந்தது. கார் மோதிய வேகத்தில் தீப்பிடித்துக் கொண்டது.

டிரக்கில் மோதி தீப்பிடித்த டாடா ஹெக்ஸா கார்... அதிவேகத்தால் நடந்த பயங்கரம்!!

உடனடியாக அந்த சாலையில் சென்றவர்கள் உள்ளே இருந்தவர்களை மீட்க போராடினர். அப்போது காரில் இருந்த இரண்டு இளைஞர்களில் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்றொருவர் இடிபாடுகளில் சிக்கியதால் தீயில் கருகி உயிரிழந்தார்.

டிரக்கில் மோதி தீப்பிடித்த டாடா ஹெக்ஸா கார்... அதிவேகத்தால் நடந்த பயங்கரம்!!

இந்த பயங்கர விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காரை ஓட்டியது கல்யாண் பகுதியை சேர்ந்த சாஹர் (21) என்று தெரிய வந்துள்ளது. அவருக்கு பக்கத்தில் அவரது நண்பர் சச்சின் சுபாஷ்(23) அமர்ந்து வந்துள்ளார்.

டிரக்கில் மோதி தீப்பிடித்த டாடா ஹெக்ஸா கார்... அதிவேகத்தால் நடந்த பயங்கரம்!!

விபத்தில் சிக்கிய டாடா ஹெக்ஸா கார் மணிக்கு 120 கிமீ வேகத்தில் வந்ததாக போலீசார் கூறினர். அப்போது மெதுவாக இயக்கப்பட்ட டிரக்கை கணிக்க முடியாமல் ஓட்டுனர் மோதி விட்டதாக தெரிய வந்துள்ளது.

டிரக்கில் மோதி தீப்பிடித்த டாடா ஹெக்ஸா கார்... அதிவேகத்தால் நடந்த பயங்கரம்!!

சாலைத் தடுப்பில் இருந்த கேபிளில் இருந்து தீப்பொறிகள் ஏற்பட்டு காரில் தீப்பற்றியதற்கு காரணமாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் காரில் பற்றிய முழுமையாக அணைக்கப்பட்ட பின்னரே சச்சினின் உடல் மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டிரக்கில் மோதி தீப்பிடித்த டாடா ஹெக்ஸா கார்... அதிவேகத்தால் நடந்த பயங்கரம்!!

டாடா ஹெக்ஸா கார் மிகச் சிறந்த கட்டுமானம் பெற்றிருந்தாலும், இவ்வளவு அதிவேகத்தில் செல்லும்போது ஏர்பேக், கட்டுமானத் தரம் போன்றவை கைகொடுக்காது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி இருக்கிறது.

டிரக்கில் மோதி தீப்பிடித்த டாடா ஹெக்ஸா கார்... அதிவேகத்தால் நடந்த பயங்கரம்!!

மேலும், நகரச் சாலைகளில் ஓட்டும்போது இந்தளவு வேகத்தில் ஓட்டுவதும் எந்தநேரத்திலும் விபத்தை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்து கொள்ளலாம். எந்த நேரத்தில் வாகனங்கள் அல்லது பாதசாரிகள் குறுக்கே வருவார்கள் என்பதை கணிக்க முடியாத விஷயம்.

டிரக்கில் மோதி தீப்பிடித்த டாடா ஹெக்ஸா கார்... அதிவேகத்தால் நடந்த பயங்கரம்!!

நாம் ஏற்கனவே சொன்னது போல், இரவு நேரங்களில் போதிய பார்வை திறன் இருக்காது என்பதுடன், காலியாக இருக்கும் சாலைகளில்தான் அதிக கவனத்துடன் செல்ல வேண்டும். அந்த நேரத்தில்தான், பாதசாரிகள் அல்லது வாகனங்கள் வேகமாக கடக்க முயலும் என்பதையும் மனதில் வைக்கவும்.

டிரக்கில் மோதி தீப்பிடித்த டாடா ஹெக்ஸா கார்... அதிவேகத்தால் நடந்த பயங்கரம்!!

எவ்வளவு அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட காராக இருந்தாலும், மிதமான வேகத்தில் இயக்குவதன் மூலமாகவே, இதுபோன்ற பயங்கர விபத்துக்களை தவிர்க்க முடியும். குறிப்பாக, இரவு நேரத்தில் அதிவேகத்தில் செல்வது ஆபத்தை இரட்டிப்பாக்கும்.

Source: DNA

Most Read Articles
English summary
Tata Hexa SUV rams into BMC cleaning machine in Mumbai.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X