18 ஆண்டுக்கு பின் வென்ற நீதி! உயிருடன் இல்லாத நபருக்கு 4.60 லட்சம் இழப்பீடு வழங்க டாடாவுக்கு உத்தரவு

முறையாக சேவை வழங்காதது தொடர்பாக டாடா நிறுவனம் மீது வாடிக்கையாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். ஆனால் வழக்கு தொடர்ந்தவர் உயிரிழந்த பின்புதான் தீர்ப்பே வந்துள்ளது.

முறையாக சேவை வழங்காதது தொடர்பாக டாடா நிறுவனம் மீது வாடிக்கையாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். ஆனால் வழக்கு தொடர்ந்தவர் உயிரிழந்த பின்புதான் தீர்ப்பே வந்துள்ளது. அதில், ரூ.4.60 லட்சம் இழப்பீடு வழங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

18 ஆண்டுக்கு பின் வென்ற நீதி! உயிருடன் இல்லாத நபருக்கு 4.60 லட்சம் இழப்பீடு வழங்க டாடாவுக்கு உத்தரவு

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பான கான்கார்டு மோட்டார்ஸ் ஆகியவை இணைந்து, 4,58,853 ரூபாயை வாடிக்கையாளருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

18 ஆண்டுக்கு பின் வென்ற நீதி! உயிருடன் இல்லாத நபருக்கு 4.60 லட்சம் இழப்பீடு வழங்க டாடாவுக்கு உத்தரவு

தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் அகர்வால், உறுப்பினர் ஸ்ரீஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச்தான் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. இதுதவிர வழக்கு செலவிற்காக 10 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

18 ஆண்டுக்கு பின் வென்ற நீதி! உயிருடன் இல்லாத நபருக்கு 4.60 லட்சம் இழப்பீடு வழங்க டாடாவுக்கு உத்தரவு

''புகார்தாரருக்கு (பட்வாட்கர்) உண்மையிலேயே கார் டெலிவரி செய்யப்பட்டு விட்டது என்பதை நிரூபணம் செய்வதற்கான போதிய ஆவணங்கள் இல்லை. கார் உற்பத்தியாளர், டீலரின் சேவையில் குறை இருப்பதாக கருதுகிறோம்'' என தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம், தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

18 ஆண்டுக்கு பின் வென்ற நீதி! உயிருடன் இல்லாத நபருக்கு 4.60 லட்சம் இழப்பீடு வழங்க டாடாவுக்கு உத்தரவு

கான்கார்டு மோட்டார்ஸ் என்ற நிறுவனம் மஹாராஷ்டிராவில் செயல்பட்டு வருகிறது. மும்பையை சேர்ந்தவரான பட்வாட்கர் என்பவர்தான், கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2000மாவது ஆண்டு மே மாதத்தில், டாடா இன்டிகா கார் ஒன்றை, கான்கார்டு மோட்டார்ஸில் வாங்கினார்.

18 ஆண்டுக்கு பின் வென்ற நீதி! உயிருடன் இல்லாத நபருக்கு 4.60 லட்சம் இழப்பீடு வழங்க டாடாவுக்கு உத்தரவு

மே மாதம் 15ம் தேதிக்குள் கார் டெலிவரி செய்யப்பட்டு விடும் என கான்கார்டு மோட்டார்ஸ் தெரிவித்தது. ஆனால் மே மாதம் 26ம் தேதிதான் காரை டெலிவரி செய்தனர். இதனால் காரை டெலிவரி எடுத்து கொள்ள பட்வாட்கர் வெளிப்படையாக மறுப்பு தெரிவித்து விட்டார்.

18 ஆண்டுக்கு பின் வென்ற நீதி! உயிருடன் இல்லாத நபருக்கு 4.60 லட்சம் இழப்பீடு வழங்க டாடாவுக்கு உத்தரவு

சாலையில் இயங்கும் அளவிற்கு கார் தரமான கண்டிஷனில் வேறு இல்லை. அதாவது காரில் எலக்ட்ரிக்கல் பிரச்னைகள் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. காரை டெலிவரி எடுக்க, பட்வாட்கர் மறுப்பு தெரிவித்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

18 ஆண்டுக்கு பின் வென்ற நீதி! உயிருடன் இல்லாத நபருக்கு 4.60 லட்சம் இழப்பீடு வழங்க டாடாவுக்கு உத்தரவு

எனினும் டீலர்ஷிப்பை சேர்ந்த பணியாளர்கள், பட்வாட்கரின் ஒப்புதல் இல்லாமலேயே, காரை அவரது வீட்டில் டெலிவரி செய்து விட்டனர். ஆனால் கார் டெலிவரி செய்யப்பட்டு விட்டது என்பதற்கான ரசீதில் பட்வாட்கர் கையொப்பமிடவே இல்லை.

18 ஆண்டுக்கு பின் வென்ற நீதி! உயிருடன் இல்லாத நபருக்கு 4.60 லட்சம் இழப்பீடு வழங்க டாடாவுக்கு உத்தரவு

டெலிவரி ரசீதில் கையொப்பமிட பட்வாட்கர் மறுத்து விட்ட போதும், காரை மீண்டும் ஏன் திரும்ப எடுத்து கொள்ளவில்லை என்பதற்கான போதிய காரணங்களையும், தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், டீலர்ஷிப் நிர்வாகம் தெரிவிக்கவில்லை.

18 ஆண்டுக்கு பின் வென்ற நீதி! உயிருடன் இல்லாத நபருக்கு 4.60 லட்சம் இழப்பீடு வழங்க டாடாவுக்கு உத்தரவு

எனவே காரை டெலிவரி கொடுக்கும்போது பின்பற்ற வேண்டிய வழக்கமான நடைமுறைகளை டீலர்ஷிப் பின்பற்றாதது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

18 ஆண்டுக்கு பின் வென்ற நீதி! உயிருடன் இல்லாத நபருக்கு 4.60 லட்சம் இழப்பீடு வழங்க டாடாவுக்கு உத்தரவு

ஆனால் மறுபக்கம் டாடா மோட்டார்ஸ் நிறுவனமோ, ''காரில் இருந்த சிறு சிறு குறைபாடுகள் எல்லாம் நீக்கப்பட்டு, பட்வாட்கருக்கு டெலிவரி செய்யப்பட்டு விட்டது. ஆனால் அதற்கான எழுத்துப்பூர்வ ஒப்புதலை பட்வாட்கரிடம் இருந்து பெற டீலர்ஷிப் பணியாளர்கள் தவறி விட்டனர்'' என தெரிவித்தது.

18 ஆண்டுக்கு பின் வென்ற நீதி! உயிருடன் இல்லாத நபருக்கு 4.60 லட்சம் இழப்பீடு வழங்க டாடாவுக்கு உத்தரவு

ஆனால் இந்த வாதத்தை தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே தீர்ப்பு தற்போது பட்வாட்கருக்கு சாதகமாக வந்துள்ளது. ஆனால் இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், தற்போது பட்வாட்கர் உயிருடன் இல்லை. அவர் இறந்துவிட்டார் என்பதுதான்.

18 ஆண்டுக்கு பின் வென்ற நீதி! உயிருடன் இல்லாத நபருக்கு 4.60 லட்சம் இழப்பீடு வழங்க டாடாவுக்கு உத்தரவு

இதுபோன்ற சேவை குறைபாடான சம்பவங்கள் இந்தியாவில் அடிக்கடி நடைபெறுகின்றன. ஆனால் இதற்கு ஒட்டுமொத்தமாக டாடா மோட்டார்ஸை மட்டும் குறை சொல்லி விட முடியாது. ஏனெனில் டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள், ஒரு சில கொள்கைகளை வகுத்து கொண்டு செயல்படுகின்றன.

18 ஆண்டுக்கு பின் வென்ற நீதி! உயிருடன் இல்லாத நபருக்கு 4.60 லட்சம் இழப்பீடு வழங்க டாடாவுக்கு உத்தரவு

வாடிக்கையாளர்கள் திருப்தி என்பது அதில் முக்கியமானது. ஆனால் ஒரு சில டீலர்ஷிப்கள் செய்யும் தவறால், டாடா மோட்டார்ஸ் என்ற பிராண்டின் இமேஜ் ஒட்டுமொத்தமாக டேமேஜ் ஆகிவிடுகிறது.

Most Read Articles

டாடா நிறுவனம் சமீபத்தில் லான்ச் செய்த டியாகோ என்ஆர்ஜி காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Tata Motors Ordered to Pay Rs 4.6 Lakhs As Compensation To Indica Customer. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X