இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ வாகனங்கள் வெளிநாட்டிற்கு விற்பனை...?

டாடா நிறுவனம் இந்திய ராணுவமும் இணைந்து எந்த அனைத்து கால நிலைகளிலும், அனைத்து தளங்களிலும் மிக சிறப்பாக வேலை செய்யும், ராணுவ வாகனங்களை வடிவமைத்துள்ளனர். விரைவில் இந்த வாகனங்கள் இந்திய ராணுவ பயன்பாட்டிற்

By Bala

டாடா நிறுவனமும், இந்திய ராணுவமும் இணைந்து, அனைத்து கால நிலைகளிலும், அனைத்து தளங்களிலும் மிக சிறப்பாக இயங்கும், ராணுவ வாகனங்களை வடிவமைத்துள்ளனர். விரைவில் இந்த வாகனங்கள் இந்திய ராணுவ பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. மேலும் சில வெளிநாடுகளும் இந்த வாகனத்தை டாடா நிறுவனம் மூலம் வாங்க முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம் வாருங்கள்.

இந்தியாவில் தயாரிக்கும் ராணுவ வாகனங்கள் வெளிநாட்டிற்கு விற்பனை.. ?

டாடா மோட்டார்ஸ் நிறுவனமும், இந்திய ராணுவமும் இணைந்து, இந்திய ராணுவத்திற்காக புதிய ரக வாகனத்தை தயாரித்துள்ளனர். இந்த வாகனத்தை அதிக அளவில் ராணுவ பயன்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம், இந்தியாவின் ராணுவ பலத்தை அதிகரிக்க புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளனர்.

இந்தியாவில் தயாரிக்கும் ராணுவ வாகனங்கள் வெளிநாட்டிற்கு விற்பனை.. ?

டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது, புனேவில் உள்ள பிம்ஸ்டெக் ராணுவ தலைமையகத்தில், இந்த வாகனங்களை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இது 4X4 மைன் புரோடெக்டெட் வாகனம் (எம்பிவி) மற்றும் டபிள்யூஎச்ஏபி 8X8 இன்ஃபேன்ட்ரி காம்பேட் வாகனம் (ஐசிவி) ரகத்தை சேர்ந்தது.

இந்தியாவில் தயாரிக்கும் ராணுவ வாகனங்கள் வெளிநாட்டிற்கு விற்பனை.. ?

இதில் டாடா டபிள்யூஎச்ஏபி 8x8 வாகனம், இந்தியாவின் முதல் இன்ஃபேன்டரி காம்பேக்ட் ரக வாகனமாகும். இது அனைத்து கால நிலைகளிலும், மணல், தார், பாறை, சகதி என அனைத்து விதமான மேற்பரப்புகளிலும், எவ்வித தடங்கலும் இல்லாமல் பயணிக்கும். போர் காலங்களில், எதிரிகளை நேரடியாக குண்டுகள் மூலம் தாக்கும் வசதியும், இந்த வாகனத்தில் இருக்கிறது.

இந்தியாவில் தயாரிக்கும் ராணுவ வாகனங்கள் வெளிநாட்டிற்கு விற்பனை.. ?

மேலும் இந்த வாகனம் வெடிகுண்டுகளில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளும் திறன் கொண்டது. இந்த வாகனத்திற்கு அடியில் வெடி குண்டுகள் வெடித்தால் கூட வாகனத்திற்கும், வாகனத்திற்கு உள்ளே இருப்பவர்களுக்கும் எந்த வித சேதாரமும் ஏற்படாது.

இந்தியாவில் தயாரிக்கும் ராணுவ வாகனங்கள் வெளிநாட்டிற்கு விற்பனை.. ?

இந்த ஐசிவியில் பேலிஸ்டிக் பாதுகாப்பு வசதிகளும் உள்ளன. மேலும் இந்த வாகனம் குறைந்த பராமரிப்புகளை கொண்டுள்ளது. இந்த வாகனத்தில், 10+2 என்ற அடிப்படையில், ராணுவ வீரர்கள் பயணம் செய்ய முடியும்.

இந்தியாவில் தயாரிக்கும் ராணுவ வாகனங்கள் வெளிநாட்டிற்கு விற்பனை.. ?

இந்த வாகனம் எல்லா சூழ்நிலைக்கும், அனைத்து மேற்பரப்புகளிலும் பயணிக்கும் என்பதால், இதை போர்காலங்களில் பயன்படுத்த முடியும். இந்த ஐசிவி வாகனத்தை, டாடா மோட்டார்ஸ் மற்றும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுமம் ஆகியவை இணைந்து வடிவமைத்துள்ளன.

இந்தியாவில் தயாரிக்கும் ராணுவ வாகனங்கள் வெளிநாட்டிற்கு விற்பனை.. ?

இந்த 8x8 வாகனமானது, போர் வாகனம், சிபிஆர்என் (கெமிக்கல்,பயலாஜிக்கல், ரேடியோலாஜிக்கல், நியூக்லியர்) வாகனம், மீட்பு மற்றும் சப்ஃபோர்ட் வாகனம், மருத்துவ மீட்பு வாகனம், இன்ஜினியர் ஸ்குவார்டு வாகனம், மோர்ட்டார் கேரியர், கமெண்டர் வாகனம், ஆண்டி டேங்க் கைடடு மிஷல் வாகனம் என்ற பல்வேறு வேரியண்ட்களில் இந்த வாகனம் தயாரிக்கப்படுகிறது.

இந்தியாவில் தயாரிக்கும் ராணுவ வாகனங்கள் வெளிநாட்டிற்கு விற்பனை.. ?

அதே நேரத்தில் டாடா 4x4 வாகனமானது, மைன் ப்ரூப் ட்ரூப் போக்குவரத்து வாகனம் ஆகும். இதனை எஸ்கார்ட் பாதுகாப்பு வாகனமாகவோ அல்லது சட்ட அமலாக்க சிறப்பு வாகனமாகவோ பயன்படுத்த முடியும்.

இந்தியாவில் தயாரிக்கும் ராணுவ வாகனங்கள் வெளிநாட்டிற்கு விற்பனை.. ?

இது எம்பிவி ரக வாகனமாக உள்ளது. அதிக கிரவுண்ட் க்ளியரன்ஸ், அதிக பவர் ஆகியவற்றுடன் எடை விகித வாகனமாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் அதிவேகத்தில் பயணிக்க முடியும்.

இந்தியாவில் தயாரிக்கும் ராணுவ வாகனங்கள் வெளிநாட்டிற்கு விற்பனை.. ?

மேலும் டாடா நிறுவனம் பிம்ஸ்டெக் உடன் மியான்மர் நாட்டிற்கு டாடா செனான் ஜிஎஸ் 800 வாகனத்தையும், மியான்மர் மற்றும் தாய்லாந்து நாட்டிற்கு டாடா 2.5டி எல்பிடிஏ 715 4X4 வாகனத்தையும், டாடா 5டி எல்பிடிஏ 1628 4x4 வாகனத்தை நேபாளுக்கும், மிஷன் ஸ்பெஷிபிக், லாகிஸ்டிக் வாகனத்தை ஐநா அமைதி மிஷனுக்கும் விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கும் ராணுவ வாகனங்கள் வெளிநாட்டிற்கு விற்பனை.. ?

தற்போது டாடா நிறுவனம் தங்களது ராணுவ வாகன தயாரிப்பு திறனை டபிள்யூஎச்ஏபி 8X8 ஐசிவி மற்றும் 4x4 மைன் பாதுகாப்பு வாகனம் ஆகியவற்றின் மூலம் அதிகரித்துள்ளது. இவை இரண்டும் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. வருங்காலத்தில் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும். மேலும் வேறு சில நாடுகளும், டாடா நிறுவனத்திடம் இருந்து இந்த வாகனத்தை பெற முயற்சித்து வருகின்றனர்.

Most Read Articles

டாடா நிறுவனம் ஏற்கனவே தான் தயாரித்த டாடா சபாரி ஸ்டோர்ம் காரில் சிறிது மாற்றம் செய்து ராணுவத்திற்கு விற்பனை செய்தது. தற்போது ராணுவ அதிகாரிகள் அந்த காரில் தான் பயணம் செய்து வருகின்றனர். அந்த காரின் ரெகுலர் மாடல் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Tata motors showcases two indigenously built defence vehicles. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X