மீண்டும் ஒரு டாடா நெக்ஸான் கார் விபத்தில் சிக்கியது... இந்த முறையும்... !!

காஷ்மீரில் டாடா நெக்ஸான் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. வழக்கம்போல் இந்த காரில் பயணித்த உரிமையாளரும் சிறு காயமின்றி உயிர் தப்பியதுடன், டாடா நெக்ஸான் காரின் பில்டு குவால்ட்டியை புகழ்ந்

By Saravana Rajan

காஷ்மீரில் டாடா நெக்ஸான் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. வழக்கம்போல் இந்த காரில் பயணித்த உரிமையாளரும் சிறு காயமின்றி உயிர் தப்பியதுடன், டாடா நெக்ஸான் காரின் பில்டு குவால்ட்டியை புகழ்ந்து ஃபேஸ்புக்கில் பதிவு போட்டுள்ளார்.

மீண்டும் ஒரு டாடா நெக்ஸான் கார் விபத்தில் சிக்கியது... இந்த முறையும்... !!

டாடா கார்கள் விபத்தில் சிக்குவது தொடர்கதையாக இருந்த போதிலும், பயணிப்பவர்கள் உயிர் பிழைத்து வருவது ஆறுதலான விஷயமாக இருந்து வருகிறது. மேலும், காரிலிருந்து உயிர் பிழைத்து குறித்து மட்டுமின்றி, அதன் பில்டு குவால்ட்டி குறித்தும் உரிமையாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகளையும் போட்டு வருகின்றனர்.

மீண்டும் ஒரு டாடா நெக்ஸான் கார் விபத்தில் சிக்கியது... இந்த முறையும்... !!

இந்த நிலையில், காஷ்மீரை சேர்ந்த சுரிந்தர் ஷான் என்பவர் டாடா நெக்ஸான் உரிமையாளர்களுக்கான ஃபேஸ்புக் பக்கத்தில் தனது டாடா நெக்ஸான் கார் விபத்தில் சிக்கியது குறித்த படங்களுடன் தகவல்களை பதிவு செய்துளார்.

மீண்டும் ஒரு டாடா நெக்ஸான் கார் விபத்தில் சிக்கியது... இந்த முறையும்... !!

அதில்," நேற்று ஜம்முவிலிருந்து தோடாவிற்கு எனது டாடா நெக்ஸான் காரில் சென்று கொண்டிருந்தேன். பட்டோ அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக, 20 அடி பள்ளத்தில் எனது கார் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் காயமின்றி தப்பிவிட்டேன். கடவுளுக்கும், டாடா நெக்ஸான் காரின் சிறப்பான பில்டு குவாலிட்டிக்கும் நன்றி," என்று பதிவு செய்துள்ளார்.

மீண்டும் ஒரு டாடா நெக்ஸான் கார் விபத்தில் சிக்கியது... இந்த முறையும்... !!

இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், டாடா நெக்ஸான் காரின் பில்டு குவாலிட்டி குறித்தும் புகழ்ந்து வருகின்றனர். ஏற்கனவே கோவாவை சேர்ந்த டாடா நெக்ஸான் கார் உரிமையாளரான ஸ்ரீஜித் குமார் தனது குடும்பத்தினருடன் சென்றபோது விபத்தில் சிக்கியது.

மீண்டும் ஒரு டாடா நெக்ஸான் கார் விபத்தில் சிக்கியது... இந்த முறையும்... !!

எதிரில் வேகமாக வந்த வாகனத்துடன் மோதாமல் இருக்க, சாலையோரம் திருப்பியபோது, முன்சக்கர டயர் பஞ்சராகி கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஸ்ரீஜித்குமார் மற்றும் பயணித்தவர்கள் காயமின்றி தப்பினர். வலுவான கட்டமைப்பு காரணமாக உயிர் தப்பியதாக அவர் பதிவு செய்திருந்தார்.

மீண்டும் ஒரு டாடா நெக்ஸான் கார் விபத்தில் சிக்கியது... இந்த முறையும்... !!

இதுமட்டுமின்றி, டாடா டியாகோ கார்களும் விபத்தில் சிக்கி, பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய சம்பவங்கள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின்றன.

மீண்டும் ஒரு டாடா நெக்ஸான் கார் விபத்தில் சிக்கியது... இந்த முறையும்... !!

டாடா கார்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாவதாக பலர் கருதி, டாடா கார்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சந்தேகம் எழுப்பி வருகின்றனர். எனினும், பிற கார்களைவிட டாடா கார்கள் எப்போதுமே வலிமையான கட்டமைப்புடன் தயாரிக்கப்படுவது அதன் எடையை வைத்தே உணர்ந்து கொள்ள முடியும்.

மீண்டும் ஒரு டாடா நெக்ஸான் கார் விபத்தில் சிக்கியது... இந்த முறையும்... !!

அதேபோன்று, புதிதாக வரும் டாடா கார்கள் நவீன பாதுகாப்பு தொழில்நுட்ப அம்சங்களுடன் வருகின்றன. டாடா கார் உரிமையாளர்களே காரின் கட்டுமானத் தரத்தை உணர்ந்து பதிவு செய்கின்றனர். ஆனால், பிற கார் பிராண்டுகளின் உரிமையாளர்கள் இந்த விஷயத்தில் அதிக அக்கறை கொள்ளாமல் இருப்பதாக கருத முடிகிறது.

மீண்டும் ஒரு டாடா நெக்ஸான் கார் விபத்தில் சிக்கியது... இந்த முறையும்... !!

ஏனெனில், டாடா கார்கள் மோசம் என்ற பிம்பம் பொதுவாக இருந்தது. இதனால், டாடா கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களை இழிவாக பார்க்கும் நிலையும் பொதுவெளியில் உள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் தங்களது நேரடி அனுபவத்தை வைத்து உடைக்க முயல்வது இதன்மூலமாக தெரிய வருகிறது. இது உளவியல் ரீதியிலான விஷயமும் அடங்கியிருக்கிறது.

மீண்டும் ஒரு டாடா நெக்ஸான் கார் விபத்தில் சிக்கியது... இந்த முறையும்... !!

மார்க்கெட்டில் உள்ள பிற கார்களைவிட தற்போது டாடா கார்களின் கட்டுமானத் தரமும், பாதுகாப்பு அம்சங்களும் சிறந்ததாக இருப்பதை இதுபோன்ற பதிவுகள் மூலமாக தொடர்ந்து உண்மையாக்கப்பட்டு வருவதாகவே சமூகவலைத்தளங்களில் எடுத்துக் கொள்ளப்பட்டு வருவது விமர்சனங்கள் மூலமாக தெரிய வருகிறது.

Picture Credit:Nexon Owners Club

Most Read Articles
English summary
Tata Nexon Topples With Passengers Inside — Here's What Happened To The SUV
Story first published: Wednesday, April 25, 2018, 15:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X