பவர்ஃபுல் டாடா டியாகோ ஜேடிபி கார் சோதனை ஓட்டம்- ஸ்பை படம்!

டாடா டியாகோ கார் மற்றும் டீகோர் கார்களின் பவர்ஃபுல் மாடல்கள் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

By Saravana Rajan

டாடா டியாகோ கார் மற்றும் டீகோர் கார்களின் பவர்ஃபுல் மாடல்கள் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. இந்த கார்கள் கோவையை சேர்ந்த ஜெயேம் எஞ்சினியரிங் நிறுவனத்தின் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ளன.

பவர்ஃபுல் டாடா டியாகோ ஜேடிபி கார் சோதனை ஓட்டம்- ஸ்பை படம்!

இந்த நிலையில், டாடா டியாகோ ஜேடிபி மாடல் ஒன்று சாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் சோதனையில் இருந்த அந்த காரின் ஸ்பை படம் ஆட்டோமொபைல் இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன.

பவர்ஃபுல் டாடா டியாகோ ஜேடிபி கார் சோதனை ஓட்டம்- ஸ்பை படம்!

டாடா டியாகோ ஜேடிபி கார் மாடலுக்கான விசேஷ அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில், அந்த கார் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் லோகோ, பம்பர் உள்ளிட்டவை அடையாளம் மறைக்கப்பட்டுள்ளன.

பவர்ஃபுல் டாடா டியாகோ ஜேடிபி கார் சோதனை ஓட்டம்- ஸ்பை படம்!

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த டாடா டியாகோ ஜேடிபி மாடலில் க்ரில்லில் ஜேடிபி பிராண்டு லோகோ பொருத்தப்பட்டு இருந்தது. அத்துடன், கருப்பு வண்ண கூரை, ரியர் வியூ கண்ணாடியில் கருப்பு- சிவப்பு வண்ண ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.

பவர்ஃபுல் டாடா டியாகோ ஜேடிபி கார் சோதனை ஓட்டம்- ஸ்பை படம்!

பக்கவாட்டில் உள்ள ஃபெண்டர் ஸ்கூப்பிலும் ஜேடிபி பிராண்டு லோகோ பதிக்கப்பட்டு இருந்தது. இந்த காரில் 15 அங்குல 6 ஸ்போக்ஸ் அலாய் வீல்களுடன் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனால், சோதனை ஓட்டத்தில் உள்ள மாடலில் சக்கரங்கள் தெளிவாக தெரியவில்லை.

பவர்ஃபுல் டாடா டியாகோ ஜேடிபி கார் சோதனை ஓட்டம்- ஸ்பை படம்!

பின்புறத்தில் ஸ்பாய்லர், டியூவல் டிப் சைலென்சர்கள் ஆகியவை இந்த காருக்கு தனித்துவத்தை அளித்தன. இந்த காரின் பின்புறத்திலும் ஜேடிபி லோகோ பொருத்தப்பட்டு இருந்தது.

பவர்ஃபுல் டாடா டியாகோ ஜேடிபி கார் சோதனை ஓட்டம்- ஸ்பை படம்!

உட்புறத்தில், கருப்பு வண்ண இன்டீரியர் பாகங்களும், சிவப்பு வண்ண அலங்காரமும் செய்யப்பட்டுள்ளன. இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் ஆடியோ சிஸ்டம் ஆகியவை முக்கியமானது. ஸ்போர்ட்ஸ் கார்களில் இருப்பது போல இந்த பவர்ஃபுல் டியாகோ காரில் அலுமினிய பெடல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பவர்ஃபுல் டாடா டியாகோ ஜேடிபி கார் சோதனை ஓட்டம்- ஸ்பை படம்!

டாடா நெக்ஸான் காரில் பயன்படுத்தப்படும் அதே 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின்தான் டாடா டியாகோ ஜேடிபி மாடலில் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 109 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

பவர்ஃபுல் டாடா டியாகோ ஜேடிபி கார் சோதனை ஓட்டம்- ஸ்பை படம்!

இந்த சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் காருக்கு வலு சேர்க்கும் விதத்தில், இதன் சஸ்பென்ஷனின் இறுக்கம் அதிகரிக்கப்பட்டு, வலுவூட்டப்பட்டுள்ளது. காரின் கிரவுண்ட் கிளியரன்ஸும் சற்று குறைக்கப்பட்டு இருக்கிறது.

பவர்ஃபுல் டாடா டியாகோ ஜேடிபி கார் சோதனை ஓட்டம்- ஸ்பை படம்!

மாருதி பலேனோ ஆர்எஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ, ஃபியட் அபார்த் புன்ட்டோ உள்ளிட்ட பவர்ஃபுல் ஹேட்ச்பேக் கார்களுடன் இந்த புதிய டாடா டியோகா ஜேடிபி மாடல் போட்டி போடும். போட்டியாளர்களைவிட விலை குறைவாக இருக்கும் என்பதும் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க காரணம்.

Source: Overdrive

Most Read Articles
English summary
Tata Motors' upcoming hot-hatch version of the Tiago – the Tiago JTP, has been caught testing on public roads.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X