ரெனால்ட் க்விட் காரை விரட்டியடித்த டாட்டா டியாகோ...

கடந்த ஏப்ரல் மாத அறிக்கையின் படி டாட்டா டியாகோ கார் விற்பனை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் அதற்கு போட்டியாளராக ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் காரின் விற்பனை சரிந்துள்ளது.

By Balasubramanian

கடந்த ஏப்ரல் மாத அறிக்கையின் படி டாட்டா டியாகோ கார் விற்பனை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் அதற்கு போட்டியாளராக ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் காரின் விற்பனை சரிந்துள்ளது.

ரெனால்ட் க்விட் காரை விரட்டியடித்த டாடா டியாகோ...

டாடா நிறுவனத்தின் கார்கள் தற்போது வேகமாக விற்பனையாகி வருகின்றன. ஏப்ரல் மாத விற்பனையில் டாடா நிறுவனம் நல்ல முன்னேற்றத்தை அடைந்தது. தொடர்ந்து அதன் தயாரிப்பு தரம் குறித்து மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் உள்ளதால் மக்கள் அதை விரும்பி வாங்க துவங்கியுள்ளனர்.

ரெனால்ட் க்விட் காரை விரட்டியடித்த டாடா டியாகோ...

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் டாடா நிறுவனத்தின் டியாகோ கார் ரெனால்ட் க்விட் காரின் விற்பனையை முந்தியுள்ளது. குறைந்த விலையில் சிறந்த கார் என்று மக்கள் மனதில் பெயரெடுத்துள்ள க்விட் காரின் விற்பனையை டியாகோ சரித்துள்ளது.

ரெனால்ட் க்விட் காரை விரட்டியடித்த டாடா டியாகோ...

ஏப்ரல் மாத அறிக்கையின் படி டாடா நிறுவனம் 7,071 டியாகோ கார்களை விற்பனை செய்துள்ளது. இது தான் டாடா நிறுவனத்தில் அதிகமாக விற்பனையாகும் கார். அதே நிலையில் ரெனால்ட் நிறுவனம் 5792 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

ரெனால்ட் க்விட் காரை விரட்டியடித்த டாடா டியாகோ...

க்விட்டை விட குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளதால் மட்டும் டியாகோ கார் இந்த வளர்ச்சியை எட்டவில்லை. டியாகோ காரை விட ஹூண்டாய் இயான் கார்கள் விலை குறைவாக உள்ளன. ஆனால் அந்த கார் கடந்த ஏப்ரல் மாதம் வெறும் 4,663 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

ரெனால்ட் க்விட் காரை விரட்டியடித்த டாடா டியாகோ...

டாடா நிறுவனத்தின் விலை நிர்ணயமும், காரின் திறனும் தான் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதாவது டாடா நிறுவனம் ஆல்டோ கே10 காரை விட அதிக விலையிலும், க்விட் காரை விட குறைந்த விலையிலும் டியாகோ காருக்கான விலையை நிர்ணயத்துள்ளது.

ரெனால்ட் க்விட் காரை விரட்டியடித்த டாடா டியாகோ...

மேலும் இந்த விலை செலிரியோ காரை விட அதிக விலையிலும் வேகன் ஆர் காரை விட குறைந்த விலையிலும் உள்ளது. இது இடைப்பட்ட விலையில் இந்தியர்களை சற்று கவர்ந்துள்ளது என்றே கூறலாம். மேலும் டியாகோ காரின் திறன் என்பது நீங்கள் எதிர்பார்க்காத அளவில் அதிகமாக உள்ளது.

ரெனால்ட் க்விட் காரை விரட்டியடித்த டாடா டியாகோ...

அதாவது ஆல்டோ கே10, க்விட், செலிரியோ, வேகன் ஆர் கார்களை விட டியாகோ கார்கள் பலம் வாய்ந்தது. டியாகோ கார் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

ரெனால்ட் க்விட் காரை விரட்டியடித்த டாடா டியாகோ...

டியாகோவில் டீசல் இன்ஜின் கார்கள் 1.1 லிட்டர் 3 சிலிண்டர் டர்போசார்ஜ் டீசல் இன்ஜினுடன் 69 பிஎச்பி பவரையும் 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்த விலையில் உள்ள டீசல் கார்களில் டியாகோவிற்கு போட்டியாக வேறு கார்களும் இல்லை.

ரெனால்ட் க்விட் காரை விரட்டியடித்த டாடா டியாகோ...

அதேபோல் பெட்ரோல் வேரியன்டில் வேகன் ஆர், செலிரியோ ஆகிய கார்கள் 1 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாருடன் 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க்திறனையும் மட்டுமே வழங்ககூடிய காராக இது உள்ளது.

ரெனால்ட் க்விட் காரை விரட்டியடித்த டாடா டியாகோ...

இதில் ஆச்சரிபயப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் தற்போது உள்ள டியாகோ காரை விட அதிக பவருடனான வேரியண்ட்டை அறிமுகப்படுத்த முடிவு செய்த டாடா நிறுவனம் கடந்த 2018 ஆட்டோ எஸ்போவில் டியாகோவி ஜேடிபி என்ற காரை அறிமுகம் செய்தது. விரைவில கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனால்ட் க்விட் காரை விரட்டியடித்த டாடா டியாகோ...

டியாகோ ஜே.டி.பி காரை பொருத்தவரை 1.2 லிட்டர் டர்போசார்ஜ் பெட்ரோல் இன்ஜின், 108 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இதன் விலை சுமார் 6.5 லட்சத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 100 பிஎச்பிக்கு ம் அதிகமான திறனை வெளிப்படுத்தக்கூடிய கார்களின் குறைந்த விலை கார் டியாகோவின் ஜே.டி.பி வேரியன்ட் கார் தான்.

Most Read Articles
English summary
Tata Tiago OUTSELLS the cheaper, smaller Renault Kwid. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X