ஐகோர்ட்டாவது.. மதிக்கிறதாவது.. ஜாலியாக சுற்றி சர்ச்சையில் சிக்கிய குட்கா அமைச்சர்..

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பைக்கில் ஹெல்மெட் போடாமல் போன சம்பவம் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழக அரசு பொதுமக்களை ஹெல்மெட் போட வலியுறுத்தி வரும் நிலையில் அமைச்சரே ஹெல்மெட் போ

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பைக்கில் ஹெல்மெட் போடாமல் போன சம்பவம் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழக அரசு பொதுமக்களை ஹெல்மெட் போட வலியுறுத்தி வரும் நிலையில் அமைச்சரே ஹெல்மெட் போடாமல் பைக்கில் சென்றது ஆதாரத்துடன் சிக்கியுள்ளது.

ஐகோர்ட்டாவது.. மதிக்கிறதாவது.. ஜாலியாக சுற்றி புதிய சர்ச்சையில் சிக்கிய குட்கா அமைச்சர்..

தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் விஜயபாஸ்கர். இவர் மீது ஏற்கனவே குட்கா ஊழல் சம்பந்தமாக புகார் உள்ளது. மேலும் இவர் வீட்டில் நடந்த ரெய்டிலும் இவர் பரபரப்பாக பேசப்படும் நபரானார்.

ஐகோர்ட்டாவது.. மதிக்கிறதாவது.. ஜாலியாக சுற்றி புதிய சர்ச்சையில் சிக்கிய குட்கா அமைச்சர்..

இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போதே அமைச்சர் பதவியில் இருந்தவர். அப்பொழுது ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர் என்ற நிலையில் இவர் இருந்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

ஐகோர்ட்டாவது.. மதிக்கிறதாவது.. ஜாலியாக சுற்றி புதிய சர்ச்சையில் சிக்கிய குட்கா அமைச்சர்..

மேலும் இவர் டாக்டராக இருப்பதால் இவருக்கு சுகாதாரத்துறை பதவி வழங்கப்பட்டது. ஏற்கனவே குட்கா வழக்கு, ரெய்டு என அடிக்கடி செய்திகளில் அடிபடும் இவர் தற்போது புதிதாக ஒரு வில்லங்கத்திலும் சிக்கியுள்ளார்.

ஐகோர்ட்டாவது.. மதிக்கிறதாவது.. ஜாலியாக சுற்றி புதிய சர்ச்சையில் சிக்கிய குட்கா அமைச்சர்..

விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். இவர் இன்று தொகுதி மக்களை நேரில் சந்தித்து மக்களின் குறைகளை கேட்க நேரில் சென்றார். அதற்காக அவர் பைக்கில் பயணித்தார்.

ஐகோர்ட்டாவது.. மதிக்கிறதாவது.. ஜாலியாக சுற்றி புதிய சர்ச்சையில் சிக்கிய குட்கா அமைச்சர்..

இவர் பைக்கில் செல்லும் போது அவரும் அந்த பைக்கை ஓட்டியவரும் ஹெல்மெட் போடவில்லை. இது தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதன் பின் அங்கிருந்து மக்கள் குறையாக கூறிய சேதமடைந்த சாலை ஒன்றை நேரில் பார்வையிட பைக்கில் ஹெல்மெட் போடாமல் சென்றார்.

ஐகோர்ட்டாவது.. மதிக்கிறதாவது.. ஜாலியாக சுற்றி புதிய சர்ச்சையில் சிக்கிய குட்கா அமைச்சர்..

தமிழக அரசும், ஐகோர்ட்டும் பைக்கில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்துதான் செல்ல வேண்டும், பைக் ஓட்டுபவர்கள் மட்டும் அல்லாமல் பைக்கின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஐகோர்ட்டாவது.. மதிக்கிறதாவது.. ஜாலியாக சுற்றி புதிய சர்ச்சையில் சிக்கிய குட்கா அமைச்சர்..

இந்த நிலையில் தமிழக அமைச்சரே இவ்வாறு பைக்கில் ஹெல்மெட் இல்லாமல் சென்றது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடந்து வருகிறது. சமூக ஆர்வலர்கள் சிலர் அமைச்சரின் இந்த செயலை கண்டித்துள்ளனர்.

ஐகோர்ட்டாவது.. மதிக்கிறதாவது.. ஜாலியாக சுற்றி புதிய சர்ச்சையில் சிக்கிய குட்கா அமைச்சர்..

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் பைக்கில் ஹெல்மெட் போடாமல் போன தம்பதியை போலீசார் ஒருவர் எட்டி உதைத்ததில் பெண் பலியான சம்பவம் குறித்து உங்களுக்கு தெரிந்திருக்கும்.

ஐகோர்ட்டாவது.. மதிக்கிறதாவது.. ஜாலியாக சுற்றி புதிய சர்ச்சையில் சிக்கிய குட்கா அமைச்சர்..

போலீசார் இப்படி தீவிரமாக ஹெல்மெட்டில் கட்டாயம் காட்டி வரும் சூழ்நிலையில் தற்போது அமைச்சர் ஒருவர் ஹெல்மெட் போடாமல் பைக்கில் சென்றது ஆதாரத்துடன் சிக்கியுள்ளது.

ஐகோர்ட்டாவது.. மதிக்கிறதாவது.. ஜாலியாக சுற்றி புதிய சர்ச்சையில் சிக்கிய குட்கா அமைச்சர்..

பைக்கில் செல்வதற்கு ஹெல்மெட் என்பது அடிப்படை பாதுகாப்பு கருவியாகும். ஹெல்மெட்டை பைக்கின் ஒரு பாகம் போலவே கருத வேண்டும். ஹெல்மெட் போடாமல் பைக்கில் ஏறவே கூடாது என்ற பழக்கம் எல்லோருக்கும் வர வேண்டும்.

Image courtesy : THANTHI TV

Most Read Articles
English summary
TN Minister vijayabaskar ride bike without helmet.Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X