புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் 10 முக்கிய அம்சங்கள்!!

எஸ்யூவி மார்க்கெட்டில் இந்திய வாடிக்கையாளர்களின் மிக முக்கிய தேர்வுகளில் ஒன்றாக மஹிந்திரா எக்ஸ்யூவி500 விளங்குகிறது. இந்தநிலையில், பல்வேறு மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் புதிய மாடல் விற்பனைக்

By Saravana Rajan

எஸ்யூவி மார்க்கெட்டில் இந்திய வாடிக்கையாளர்களின் மிக முக்கிய தேர்வுகளில் ஒன்றாக மஹிந்திரா எக்ஸ்யூவி500 விளங்குகிறது. இந்தநிலையில், பல்வேறு மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் புதிய மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மாடலில் கவனிக்கத்தக்க புதிய அம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

டிசைன்

டிசைன்

மஹிந்திரா எக்ஸ்யூவியின் பிரம்மாண்டத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில் புதிய க்ரில் அமைப்பு இடம்பெற்றுள்ளது. இது கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், க்ரோம் வில்லைகளுடன் பொருத்தப்பட்ட இந்த க்ரில் அமைப்பும், அதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் ஏர் டேம் அமைப்பும் பிரிமியம் கார் போன்ற தோற்றத்தை தருகிறது.

ஹெட்லைட்டுகள் டிசைனும் புதிது. முகப்புக்கு மிரட்டலான தோற்றத்தை வழங்குவது புதிய பம்பர் அமைப்புதான். பின்புறத்தில் டெயில் லைட்டுகள் மற்றும் பின் கதவு அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.மொத்தத்தில் மாற்றம் வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்.

புதிய அலாய் வீல்கள்

புதிய அலாய் வீல்கள்

விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் 18 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த சக்கரங்களில் 235/60 அளவுடைய டயர்கள் இந்த எஸ்யூவியின் பிரம்மாண்டத்திற்கு வலு சேர்க்கின்றன. விலை குறைவான வேரியண்ட்டுகளில் 17 அங்குல சக்கரங்கள் கொடுக்கப்படுகின்றன

 லெதர் டேஷ்போர்டு

லெதர் டேஷ்போர்டு

இந்த காரில் மென்மையான தொடு உணர்வை தரும் லெதர் டேஷ்போர்டு இடம்பெற்றுள்ளது. இது உட்புறத் தோற்றத்தின் அழகை கூடுதலாக்கி காட்டுகிறது.

லெதர் இருக்கைகள்

லெதர் இருக்கைகள்

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியில் சொகுசு கார்களில் இருப்பது போன்று டேன் லெதர் வண்ண லெதர் இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதில், தையல் டிசைனும் வசீகரத்தை தருகிறது. இது பார்ப்பதற்கு மட்டுமல்ல, அமர்ந்து செல்வதற்கும் மிக சொகுசான அனுபவத்தை தரும்.

ஸ்மார்ட் வாட்ச்

ஸ்மார்ட் வாட்ச்

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் மிக முக்கிய அம்சமாக, ஸ்மார்ட்வாட்ச் என்ற கையில் கட்டிக் கொள்ளக்கூடிய கைக்கடிகாரம் போன்ற சாதனம் வழங்கப்படுகிறது. மஹிந்திரா புளூசென்ஸ் செயலியுடன் இணைந்து செயல்படும் விதத்தில் இது வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஆடியோ சிஸ்டம்

புதிய ஆடியோ சிஸ்டம்

புதிய அர்கமிஸ் ஆடியோ சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஸ்பீக்கர்கள், ட்வீட்டர்களுடன் இயங்கும் இந்த ஆடியோ சாதனம் உயர்தர ஒலி தரத்தை வழங்கும் என்று மஹிந்திரா தெரிவிக்கிறது.

சன்ரூஃப்

சன்ரூஃப்

இந்த காரில் எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் இயங்கும் சன்ரூஃப் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், விரல்கள் அல்லது குழந்தைகள் நிற்கும்போது மாட்டிக் கொள்ளாத வகையில், இதன் கண்ணாடி மூடினால் கூட தானாக விலகும் ஆன்ட்டி பின்ச் தொழில்நுட்ப வசதியும் இடம்பெற்றிருக்கிறது.

 படூல் விளக்குகள்

படூல் விளக்குகள்

இந்த காரில் எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பெயரை தரையில் காட்டும் விதத்தில், லோகோ புரொஜெக்ஷன் லேம்ப்புகள் ரியர் வியூ மிரர்களில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த இரவில் காரிலிருந்து இறங்கும்போது வெளிச்சத்தை தருவதுடன், புதுமையாக காரின் பெயரை காட்டுவது புதுமையான விஷயமாக இருக்கும்.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

மஹிந்திராவின் மேம்படுத்தப்பட்ட புளூசென்ஸ் செயலியுடன் கூடிய புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்று இருக்கிறது. பொழுதுபோக்கு வசதிகள், ஆன்ட்ராய்டு ஆட்டோ, நேவிகேஷன் வசதி, ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அளிக்கிறது.

 எமர்ஜென்ஸி அசிஸ்ட்

எமர்ஜென்ஸி அசிஸ்ட்

விபத்து ஏற்படும்பட்சத்தில், அருகிலுள்ள அவசர உதவி மையத்திற்கு தானியங்கி முறையில் குறுந்தகவல் அனுப்பி உடனடி உதவி கிடைப்பதற்கான பாதுகாப்பு வசதியும் இந்த காரில் இடம்பெற்றிருக்கிறது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் இடம்பெற்றுள்ளன. எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் ஹோல்டு அசிஸ்ட் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

புதிய மஹிந்ததிரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் வந்துள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 153 பிஎச்பி பவரையும்,, 360 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். 2 வீல் டிரைவ் சிஸ்டம் மட்டுமின்றி ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் வழங்கப்படுகிறது. பெட்ரோல் மாடல் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

 இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

வளைவுகளில் திரும்பும்போது அதே திசையில் வெளிச்சத்தை தரும் ஸ்டேட்டிக் பென்டிங் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர ரன்னிங் விளக்குள், புஷ் பட்டன் ஸ்டார்ட், வாய்ஸ் கமாண்ட் வசதி, ஸ்மார்ட் வைப்பர்கள் மற்றும் ஹெட்லைட், க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை அளிக்கிறது மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி.

 விலை விபரம்

விலை விபரம்

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி ரூ.12.32 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து விற்பனைக்கு வந்துள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் புதிய ஜீப் காம்பஸ் ஆகிய இரு கார்களின் மார்க்கெட்டையும் அசைத்து பார்க்கும் விதத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
The new 2018 Mahindra XUV500 was launched at a starting price of Rs 12.32 lakh ex-showroom (Mumbai). The Mahindra XUV500 facelift brings subtle changes to the design and styling, while offering a lot of new features inside. Performance has also been increased.
Story first published: Thursday, April 19, 2018, 11:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X