இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

நீங்கள் சாலையில் வாகனங்களில் செல்லும் போது விபத்து ஏற்பட்டால் அதில் இருந்து அதிக பாதுகாப்பாக இருப்பதற்கு விபத்தில் அதிக பாதுகாப்புடன் இருக்கும் வாகனத்தில் பயணித்தால் ஒரளவு விபத்து ஏற்பட்டால் அதன் மூல

உலகில் இந்தியா ஆட்டோமொபைலுக்கான முக்கியமான சந்தையாக மாறி வருகிறது. உலகில் உள்ள பல்வேறு புதிய வகை தொழிற்நுட்பங்கள் அடங்கிய கார்கள் இந்தியாவிலும் விற்பனையாகின்றன.

இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

ஆட்டோமொபைல் சந்தை பெரிதாகி வருகிறது என்றால் மக்கள் அதிகமாக ஆட்டோமொபைல்களை பயன்படுத்த துவங்கி விட்டனர் என்று அர்த்தம். அப்படியானால் ரோட்டில் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது.

இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

ரோட்டில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமானால் விபத்திற்கான வாய்ப்புகளும் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் ஆண்டிற்கு ஆண்டு விபத்துக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக நடந்து வருகிறது.

இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

கடந்தாண்டு செப்., மாதம் போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கையில் 2017ம் ஆண்டு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஏற்படும் 55 விபத்துக்களில் சராசரியாக 17 பேர் பலியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பலியாபவர்கள் பெரும்பாலும் 18-35 வயதிற்குட்பட்டவர்கள் எனவும், 2016ஐ விட 2017ம் ஆண்டு ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கைகள் 4.1 சதவீதம் குறைவு என்றும், ஆனால் விபத்தில் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை 3.2 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

நிலைமை இப்படி இருக்கையில் நீங்கள் சாலையில் வாகனங்களில் செல்லும் போது விபத்து ஏற்பட்டால் அதில் இருந்து அதிக பாதுகாப்பாக இருப்பதற்கு விபத்தில் அதிக பாதுகாப்புடன் இருக்கும் வாகனத்தில் பயணித்தால் ஒரளவு விபத்து ஏற்பட்டால் அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளின் இருந்து தப்பிக்க முடியும்.

இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

இப்படி பாதுகாப்பான கார் என்றால் அது விலை அதிகமாக உள்ள கார்கள்தான் என்று பலர் கருதுவார்கள். அது தவறு. விலை குறைந்த காரிலும் அதிக பாதுகாப்பு அடங்கிய கார்கள் உள்ளன. இந்த பாதுகாப்பு என்று தேசிய அளவில் விபத்து சோதனை நடத்தப்பட்டு அந்தந்த கார்கள் எவ்வளவு பாதுகாப்பானது என்று சான்று வழங்கப்படும்.

இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

இந்த சோதனையின் போது காரில் மனிதர்கள் போன்ற பொம்மையை அமர வைத்து காரை வேண்டும் என்றே ஒரு கடினமான பொருளின் மீது மோத விட்டு அதன் மூலம் காருக்கும், காருக்குள் இருக்கும் பொம்மைக்கும் ஏற்படும் சேதத்தை கணக்கிட்டு இந்த ரேட்டிங் வழங்கப்படுகிறது.

இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

இந்த செய்தியில் நாம் ரூ.10 லட்சத்திற்கு குறைவாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் அதிக விபத்து பாதுகாப்பு சோதனையான என்சிஏபி ரேட்டிங் பெற்ற கார்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

டாடா நெக்ஸான்

இந்திய ரோடுகளில் இந்த கார்கள் விபத்தில் சிக்கிய போது அதிக இடங்களில் காருக்குள் இருந்தவர்களுக்கு சிறு கீறல் கூட விழாமல் காத்திருக்கிறது. இந்த கார் என்சிஏபி கிராஷ் டெஸ்டில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது.

இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

இந்த காரில் பாதுகாப்பு அம்சம் என முன்பக்க சீட்டில் இரண்டு ஏர் பேக்குகள், டபுள் ப்ரிடென்ஸனர் சீட்பெல்ட்கள், ஐஎஸ்ஓ அன்சோரேஜஸ், ஐஎஸ்ஓ பிக்ஸ் ஆகிய வசதிகள் உள்ளன.

இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பு ரேங்கிங்கில் 17க்கு 13.56 ஐயும், சிறுவர்கள் பாதுகாப்பிற்கான ரேங்கிங்கில் 49க்கு 25 மார்க்கையும் பெற்றுள்ளது.

இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

மாருதி சுசூகி விட்டாரா பிரெஸ்ஸா

புதிய மாடல் மாருதி சுசூகி விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் என்சிஏபி க்ராஷ் டெஸ்டில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக ட்யூயல் ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஐஎஸ்ஒ பிக்ஸ் ஆகிய வசதிகள் உள்ளது. இந்த காரில் பெரியவர்களுக்கு சிறப்பாக பாதுகாப்பு வசதி உள்ளது.

குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 2 ஸ்டார்கள் மட்டுமே பெற்றுள்ளது. இதற்கு காரணம் சோதனையில் போது 18 மாத குழந்தை போன்ற பொம்மைக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டது. 3 வயது குழந்தைக்கு பாதிப்புகள் குறைவாக இருந்தன.

இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

இந்த கார் 1.3 லிட்டர் டர்போ டீசல் பவர் பிளான்ட் உடன் 89 பிஎச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இது 5 ஸ்பீடு ஏஎம்டி/ஏஜிஎஸ் கியர் பாக்ஸ்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.7.58 லட்சம் ஆகும்.

இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

ரெனோ டஸ்டர்

ரெனோ டஸ்டர் கார் இந்திய மார்கெட்டில் கடந்த 2012ம் ஆண்டு முதல் விற்பனையாகிறது. இந்த கார் என்சிஏபி கிராஷ் டெஸ்டில் 3 ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்தியாவில் தற்போது இந்த ரக கார்களில் டஸ்டர் தான் சிறந்த விற்பனையில் உள்ளது.

இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

இந்த காரில் பாதுகாப்பு அம்சமாக டிரைவர் ஏர் பேக் மட்டுமே உள்ளது. எனினும் இதன் வலுவான கட்டமைப்பு இந்த ரேட்டிங்கை பெற வைத்துள்ளது.

இந்த கார் 1.5 லிட்டர் டீசல் கார்கள் இரண்டு வித ட்யூன்களில் வெளியாகிறது. 84 பிஎச்பி/200 என்எம் டார்க் மற்றும் 108 பிஎச்பி/240 என்எம் டார்க் ஆகியன உள்ளன. பெட்ரோல் காரை பொறுத்தவரை 1.6 லிட்டர் இன்ஜின் உடன் 102பிஎச்பி 145 என்எம் டார்க் உடன் வருகிறது. இதன் விலை ரூ 7.95 லட்சம்

இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

ஃபோக்ஸ்வேகன் போலோ

இந்த போலோ கார் முதல் டெஸ்ட்டில் 0 ஸ்டார் ரேட்டிங்தான் பெற்றது. இரண்டாவது டெஸ்டில்தான் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. ஜெர்மன் தொழிற்நுட்ப கலைஞர்கள் முதலில் இந்த காரில் இருந்த பிரச்னைகளை சரி செய்ததால் இந்த ரேட்டிங்கை பெற்றுள்ளது.

இந்த காரில் இப்பொழுது ட்யூயல் ஏர் பேக்குகள், பேஸிக் மாடலிலேயே உள்ளது. இந்த கார் 999 சிசி 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 75 பிஎச்பி பவர் மற்றும் 95 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

இதன் டீசல் கார் 89 பிஎச்பி பவர் மற்றும் 230 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. இந்த போலோ கார் பெட்ரோல் வேரியன்ட் ரூ.5.53 லட்சம் என்ற விலையிலும், டீசல் வேரியன்ட் ரூ.7.04 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகிறது.

இது போன்ற செய்திகளை உங்கள் மொபைலில் உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!

இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

டொயோட்டா எட்டியோஸ் லிவா

உலகில் பல்வேறு நாடுகளில் வலிமையான கார்களை டொயோட்டா நிறுவனம்தான் வெளியிட்டு வருகிறது. அந்நிறுவனத்தின் ஹில்லக்ஸ் கார் வலிமையான காராக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அந்த கார் விற்பனையில்லை.

இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

அந்நிறுவனம் வெளியிடும் எட்டியோஸ் லிவா கார்கள் இந்தியாவில் பாதுகாப்பு சோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங் உடன் குறைந்த விலை காராக இந்த கார் உள்ளது. இந்த காரில் பாதுகாப்பு வசதியாக ட்யூயல் ஏர் பேக்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

எட்டியோஸ் கார்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்கள் உள்ளன. இந்த கார் 1.2 லிட்டர் இன்ஜின் உடன் 79 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. டீசல் வேரியன்ட் 67 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

இந்த இரண்டு கார்களும் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் வேரியன்ட் விலை ரூ.5.48 லட்சம் மற்றும் டீசல் வேரியன்ட் ரூ.6.76 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனையாகிறது.

இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

மஹிந்திரா எக்ஸ்யூவி 500

மஹிந்திரா நிறுவனம் இந்த காரை கடந்த 2011ம் ஆண்டு வெளியிட்டது. இந்த கார் மோனாக்யூ சேஸிஸ் என்ற சேஸில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மற்ற சேஸிஸை காட்டிலும் வலிமையானதாக பார்க்கப்படுகிறது.

இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

இந்த கார் க்ராஷ் டெஸ்டில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்த காரில் 6 ஏர் பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன், எலெக்ட்ரானிக்ஸ் ஸ்டெபிலிட்டி ப்ரோகிராம், ட்ராக்ஷன் கண்ட்ரோல், ஹில் டிசென்ட் கண்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

இந்த கார் 2.2 லிட்டர் எம்ஹாக் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் உடன் 155 பிஎச்பி மற்றும் 360 என்எம் டார்க் திறனுடன் வெளியாகிறது. இது 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்களுடன் விற்பனையாகிறது. இதன் விலை பெட்ரோல் வேரியன்ட் ரூ.12.39 லட்சம் மற்றும் டீசல் வேரியன்ட் ரூ.15.50 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது.

இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

ஹூண்டாய் க்ரெட்டா

கொரிய நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட ஹூண்டாய் க்ரெட்டா மாடல் எஸ்யூவி மார்கெட்டில் சிறப்பாக விற்பனையை பெற்று வருகிறது. இந்த கார் க்ராஷ் டெஸ்டில் 4 ஸ்டார்களை பெற்றுள்ளது.

இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

இந்த காரில் டுயல் ஏர் பேக் பாதுகாப்பு அம்சமாக உள்ளது. இந்த காரின் பெட்ரோல் வேரியன்ட் 1.6 லிட்டர் 4 சிலிண்டர் இன்ஜின் உடன் 123 பிஎச்பி மற்றும் 151 என்எம் டார்க் திறனுடன் விற்பனையாகிறது.

இதன் டீசல் வேரியன்ட் 89 பிஎச்பி பவர் மற்றும் 126 என்எம் டார்க் திறனுடன் வருகிறது. இது 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

இந்த காரின் பெட்ரோல் வேரியன்ட் ரூ.9.43 லட்சம் மற்றும் டீசல் வேரியன்ட் ரூ.9.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

ஃபோர்டு அஸ்பயர்

ஃபோர்டு நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஸ்பயர் காரின் ஃபேஸ்லிப்டட் வெர்ஷனை வெளியிட்டது. இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பு ரேட்டிங்கில் 3 ஸ்டார்களை பெற்றுள்ளது.

இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

இந்த கார் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டிஐவிசிடி பெட்ரோல் டிராகன் சீரிஸ் இன்ஜினை பெற்றுள்ளது. இது 96 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். டீசல் வேரியன்ட் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டிடிசிஐ இன்ஜினை பெற்றுள்ளது. 123 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

இந்த கார்கள் ரூ.8.49 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகிறது. இந்த கார்களின் அனைத்து வேரியன்ட்களிலும், டுயல் ஏர் பேக்ஸ், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் வசதி பாதுகாப்பு அம்சங்களாக உள்ளன.

இந்த காரில் பயணித்தால் எமன் கூட உங்களை எளிதாக நெருங்க முடியாது..!

இந்த பட்டியலில் உள்ள கார்களில் நீங்கள் இந்திய சாலைகளில் பயணித்தால் குறைந்த விலை கார்களிலும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்ட அனுபவத்தை பெறலாம். இந்த கார்கள் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள். மேலும் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் நிறைந்த ரூ.10 லட்சத்திற்குட்பட் கார்கள் இருந்தால் அதையும் கமெண்டில் தெரிவிக்கலாம்.

உங்கள் மொபைலில் டெலிகிராம் செயலி இருக்கிறதா? உடனடியாக இங்கே கிளிக் செய்து எங்களுடன் இணையுங்கள்..!

Most Read Articles
மேலும்... #ஆட்டோ டிப்ஸ்
English summary
Top safest cars in india under 10 lakhs. Read in Tamil
Story first published: Monday, November 19, 2018, 13:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X