2018 செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்.. மாருதி சுஸுகி, ஹூண்டாய் ஆதிக்கம்..

2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் வழக்கம் போல மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2018 செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்.. மாருதி சுஸுகி, ஹூண்டாய் ஆதிக்கம்..

மாருதி சுஸுகி ஸ்விப்ட் (Maruti Suzuki Swift)

2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி ஸ்விப்ட் பெற்றுள்ளது. 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 22,228 மாருதி சுஸுகி ஸ்விப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2018 செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்.. மாருதி சுஸுகி, ஹூண்டாய் ஆதிக்கம்..

மாருதி சுஸுகி ஸ்விப்ட் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு 10க்கும் மேற்பட்ட ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால் இன்றவுளம் இந்தியர்களுக்கு மிக விருப்பமான காராக மாருதி சுஸுகி ஸ்விப்ட் திகழ்ந்து வருகிறது. இது ஹேட்ச்பேக் வகையை சேர்ந்த காராகும்.

2018 செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்.. மாருதி சுஸுகி, ஹூண்டாய் ஆதிக்கம்..

இந்த சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2018 ஆட்டோ எக்ஸ்போவில் மூன்றாவது தலைமுறை ஸ்விப்ட் காரை மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்தது. இதில், முந்தைய மாடல்களை காட்டிலும் பல்வேறு கூடுதல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

2018 செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்.. மாருதி சுஸுகி, ஹூண்டாய் ஆதிக்கம்..

மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto)

2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்களின் பட்டியலில் 2வது இடத்தை பிடித்திருக்கும் கார் மாருதி சுஸுகி ஆல்டோ. மொத்தம் 21,719 ஆல்டோ கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

MOST READ: சைக்கிளில் வந்தவருக்கு 'ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட்' அபராதம்!! வலுக்கட்டாயமாக பணத்தை பிடுங்கிய போலீசார்

2018 செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்.. மாருதி சுஸுகி, ஹூண்டாய் ஆதிக்கம்..

இந்திய மார்க்கெட்டில் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி ஆல்டோ உள்ளது. நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் மாருதி சுஸுகி ஆல்டோ கார் ஓடி கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

2018 செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்.. மாருதி சுஸுகி, ஹூண்டாய் ஆதிக்கம்..

மாருதி சுஸுகி 800 காரின் வாரிசாக கருதப்படும் ஆல்டோ காரானது, 800 சிசி, 1.0 லிட்டர் ஃபார்மெட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில், 1.0 லிட்டர் மாடலான மாருதி சுஸுகி ஆல்டோ கே10 ஃபன் டூ டிரைவ் ஹேட்ச்பேக் காராகும்.

2018 செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்.. மாருதி சுஸுகி, ஹூண்டாய் ஆதிக்கம்..

மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire)

2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான 3வது கார் மாருதி சுஸுகி டிசையர். கடந்த மாதத்தில் 21,296 டிசையர் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்திய மார்க்கெட்டில் மிகவும் வெற்றிகரமான காம்பேக்ட் செடான் வகை கார்களில் ஒன்று மாருதி சுஸுகி டிசையர்.

2018 செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்.. மாருதி சுஸுகி, ஹூண்டாய் ஆதிக்கம்..

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் ஒரு சில முறை மாருதி சுஸுகி டிசையர் முதலிடத்தை பிடிக்கவும் செய்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் முதல் முறையாக முதலிடத்தை பிடித்த காம்பேக்ட் செடான் வகை கார் இதுதான்.

MOST READ: ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு நூதன தண்டனை வழங்கும் தமிழக போலீசார்

2018 செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்.. மாருதி சுஸுகி, ஹூண்டாய் ஆதிக்கம்..

ஸ்விப்ட் காரை போன்று டிசையர் காரையும் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு ஃபார்மெட்களிலும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2018 செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்.. மாருதி சுஸுகி, ஹூண்டாய் ஆதிக்கம்..

மாருதி சுஸுகி பலினோ (Maruti Suzuki Baleno)

2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்களின் பட்டியலில் 4வது இடத்தை பிடித்திருக்கும் கார் மாருதி சுஸுகி பலினோ. மொத்தம் 18,631 பலினோ கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

2018 செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்.. மாருதி சுஸுகி, ஹூண்டாய் ஆதிக்கம்..

இந்தியாவின் முதன்மையான கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியிடம் இருந்து வெளிவரும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்று பலினோ. மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரத்யேகமான நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக பலினோ கார் விற்பனை செய்யப்படுகிறது.

2018 செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்.. மாருதி சுஸுகி, ஹூண்டாய் ஆதிக்கம்..

பலினோ காரின் ஸ்போர்ட்டியர் வெர்ஷனையும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதன் பெயர் பலினோ ஆர்எஸ் (Baleno RS). பலினோ ஆர்எஸ் காரில், 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பூஸ்டர்ஜெட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

MOST READ: நவம்பர் 4ம் தேதி முதல் டாலர் செல்லாது.. இறங்கி அடிக்கும் மோடியால் மிரண்டு போன அமெரிக்கா..

2018 செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்.. மாருதி சுஸுகி, ஹூண்டாய் ஆதிக்கம்..

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Vitara Brezza)

2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலில் 5வது இடத்தை பிடித்திருக்கும் கார் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா. மொத்தம் 14,425 விட்டாரா பிரெஸ்ஸா கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

2018 செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்.. மாருதி சுஸுகி, ஹூண்டாய் ஆதிக்கம்..

இந்திய மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா திகழ்கிறது. தற்போதைய நிலையில் டீசல் ஃபார்மெட்டில் மட்டுமே விட்டாரா பிரெஸ்ஸா காரை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

2018 செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்.. மாருதி சுஸுகி, ஹூண்டாய் ஆதிக்கம்..

என்றாலும் வெகு விரைவில் விட்டாரா பிரெஸ்ஸா காரின் பெட்ரோல் வேரியண்ட்டை மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், விட்டாரா பிரெஸ்ஸா காரின் ஏஎம்டி வெர்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில்தான் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2018 செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்.. மாருதி சுஸுகி, ஹூண்டாய் ஆதிக்கம்..

மாருதி சுஸுகி ஆதிக்கம்

ஆக மொத்தம் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலில் முதல் 5 இடங்களை மாருதி சுஸுகி நிறுவன கார்களே கைப்பற்றியுள்ளன. 6வது இடத்தையும் கூட மாருதி சுஸுகி நிறுவனமே தன்வசப்படுத்தியுள்ளது.

MOST READ: புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் படங்கள், தகவல்கள் வெளியீடு!

2018 செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்.. மாருதி சுஸுகி, ஹூண்டாய் ஆதிக்கம்..

இந்த பட்டியலில் 6வது இடத்தை பெற்றிருக்கும் கார் மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki WagonR). மொத்தம் 13,252 வேகன் ஆர் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் 2020ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

2018 செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்.. மாருதி சுஸுகி, ஹூண்டாய் ஆதிக்கம்..

3 இடங்களை பிடித்த ஹூண்டாய்

2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் 7,8 மற்றும் 9வது இடங்களை ஹூண்டாய் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதன்படி 7வது இடத்தை ஹூண்டாய் ஐ20 காரும் (12,380), 8வது இடத்தை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரும் (11,224) பிடித்துள்ளன.

2018 செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்.. மாருதி சுஸுகி, ஹூண்டாய் ஆதிக்கம்..

9வது இடத்தை ஹூண்டாய் கிரெட்டா பிடித்துள்ளது. மொத்தம் 11,000 கிரெட்டா கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது எஸ்யூவி வகையை சேர்ந்த காராகும்.

2018 செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்.. மாருதி சுஸுகி, ஹூண்டாய் ஆதிக்கம்..

மீண்டும் மாருதி சுஸுகி

2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலில் 10வது மற்றும் கடைசி இடத்தை பிடித்திருக்கும் கார் மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). மொத்தம் 9,208 செலிரியோ கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. இந்த பட்டியலை நீங்கள் கீழே காணலாம்.

Rank Model Sep '18 Sales
1 Maruti Swift 22,228
2 Maruti Alto 21,719
3 Maruti Dzire 21,296
4 Maruti Baleno 18,631
5 Maruti Brezza 14,425
6 Maruti WagonR 13,252
7 Hyundai i20 12,380
8 Hyundai Grand i10 11,224
9 Hyundai Creta 11,000
10 Maruti Celerio 9,208
2018 செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்.. மாருதி சுஸுகி, ஹூண்டாய் ஆதிக்கம்..

வேறு யாருக்கும் இடமில்லை..

2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்களின் பட்டியலில் மாருதி சுஸுகி 7 இடங்களையும், ஹூண்டாய் 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் தவிர வேறு எந்த நிறுவனங்களுக்கும் இந்த பட்டியலில் இடமில்லை.

Most Read Articles

மாருதி சுஸுகி ஸ்விப்ட் 2018 காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Top Selling Cars In September 2018: Maruti Suzuki And Hyundai Dominates In Top-10 List. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more