இந்தியாவில் 5வது பெரிய கார் நிறுவனமாக உருவெடுத்துள்ளது டொயோட்டா நிறுவனம்

இந்தியாவில் ஏப்ரல் மாதம் 13,037 வாகனங்களை விற்பனை செய்து 5வது பெரிய கார் நிறுவனமான டொயோட்டா உருவெடுத்துள்ளது. ஹோண்டா நிறுவனம் விற்பனை வீழ்ச்சியால் பின்னடைவை சந்தித்துள்ளது.

By Balasubramanian

ஜப்பான் நாட்டை சேர்ந்த டொயோட்டா கார் நிறுவனம் இந்தியாவில் அதிக அளவில் கார் விற்பனையில் ஈடுபட்டுகிறது.

இந்தியாவில் 5வது பெரிய கார் நிறுவனமாக உருவெடுத்துள்ளது டொயோட்டா நிறுவனம்

அந்நிறுவனத்தின் எட்டியோஸ், லிவா, இன்னோவா, பார்ட்யூனர் ஆகிய கார்கள் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்திய யாரீஸ் என்ற செடன் ரக காரையும் மக்கள் ஆர்வமாக புக் செய்து வருகிறனர்.

இந்தியாவில் 5வது பெரிய கார் நிறுவனமாக உருவெடுத்துள்ளது டொயோட்டா நிறுவனம்

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஏப்ரல் மாத கார் விற்பனை குறித்த விபரங்கள் வெளியனது. அதில் டொயோட்டா நிறுவனம் ஹோண்டா நிறுவனத்தை வீழ்த்தி இந்தியாவின் 5வது பெரிய கார் நிறுவனமாக வளர்ந்துள்ளது.

இந்தியாவில் 5வது பெரிய கார் நிறுவனமாக உருவெடுத்துள்ளது டொயோட்டா நிறுவனம்

ஏப்ரல் மாத கார் விற்பனை அறிக்கையின் படி டொயோட்டா நிறுவனம் 13,037 கார்களை விற்பனை செய்துள்ளது. அதே நேரத்தில் ஹோண்டா நிறுவனம் 9143 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

இந்தியாவில் 5வது பெரிய கார் நிறுவனமாக உருவெடுத்துள்ளது டொயோட்டா நிறுவனம்

இதன் மூலம் டொயோட்டா நிறுவனம் 5.64 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. அனால் ஹோண்டா நிறுவனம் 36 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. டொயோட்டாவின் இந்த வளர்ச்சிக்கு எட்டியோஸ், லிவா, இன்னோவா, பார்ட்யூனர் ஆகிய கார்களின் விற்பனை தான் கை கொடுத்துள்ளது.

இந்தியாவில் 5வது பெரிய கார் நிறுவனமாக உருவெடுத்துள்ளது டொயோட்டா நிறுவனம்

ஹோண்டா அமேஸ் காரின் விற்பனை வீழ்ச்சி ஹோண்டா நிறுவனத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் விரைவில் புதிய ஹோண்டா அமேஸ் காரை அந்நிறுவனம் களமிறக்கவுள்ளது.

இந்தியாவில் 5வது பெரிய கார் நிறுவனமாக உருவெடுத்துள்ளது டொயோட்டா நிறுவனம்

இது குறித்து ஹோண்டா நிறுவன விற்பனை அதிகாரி ராஜேஷ் கோயல் கூறியபோது : "ஏப்ரல் மாதம் நாங்கள் திட்டமிட்ட படி தான் விற்பனை நடந்ததுள்ளது. இந்த மாதம் அமேஸ் காரின் புதிய மாடலை களம் இறக்குகிறோம். தொடர்ந்து ஆடுத்த ஆண்டு சிட்டி, மற்றும் டபிள்யூ.ஆர் -வி கார்களின் புதிய மாடலும் விற்பனை வருகிறது. அது எங்களின் விற்பனையை அதிகரிக்கும். " என கூறினார்.

இந்தியாவில் 5வது பெரிய கார் நிறுவனமாக உருவெடுத்துள்ளது டொயோட்டா நிறுவனம்

டொயோட்டாவின் வளர்ச்சி குறித்து அந்நிறுவன அதிகாரி ஒருவர் கூறும் போது: "இந்த மாதம் எங்கள் நிறுவனத்திற்கு கொண்டாட்ட மாதமாக அமைந்துள்ளது. விற்பனை வளர்ச்சி பெற்று வரும் நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள யாரீஸ் காரின் விற்பனையும் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுள்ளது. இது எங்களுக்கு பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது." என கூறினார்.

இந்தியாவில் 5வது பெரிய கார் நிறுவனமாக உருவெடுத்துள்ளது டொயோட்டா நிறுவனம்

டொயோட்டா நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள யாரீஸ் காரின் விலை ரூ 8.75 லட்சத்தில் இருந்து ரூ14.07 லட்சம் வரை ஷோரூம்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்தியாவில் 5வது பெரிய கார் நிறுவனமாக உருவெடுத்துள்ளது டொயோட்டா நிறுவனம்

தற்போது பார்ட்யூனர், இன்னோவா க்ரைட்டா, ஆகிய கார்கள் வலுவான எண்ணிக்கையில் விற்பனையாககி வரும் நிலையில் யாரீஸ் விற்பனை டொயோட்டா நிறுவனத்தை அடுத்தபடிக்கு எடுத்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #டொயோடோ #toyota
English summary
Toyota beats Honda to become 5th largest carmaker in India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X