ஃபார்ச்சூனர் Vs என்டெவர் ஆப் ரோட்டில் சிறந்த கார் எது?

டொயோட்டா ஃபார்ச்சூனர், மற்றும் என்டெவர் காரில் எது சிறந்த ஆப் ரோடு கார் என்பதை பார்க்க ஒரு போட்டி ஒன்று நடந்துள்ளது. இந்த போட்டியில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் தான் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு க

By Balasubramanian

டொயோட்டா ஃபார்ச்சூனர், மற்றும் என்டெவர் காரில் எது சிறந்த ஆப் ரோடு கார் என்பதை பார்க்க ஒரு போட்டி ஒன்று நடந்துள்ளது. இந்த போட்டியில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் தான் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு கார்களும் ஓரே மாதிரியான உதிரிபாங்களை கொண்டுள்ளபோது ஃபார்ச்சூனர் மட்டும் வெற்றி பெறுவதற்கான காரணம் என்ன வாருங்கள் கீழே உள்ள செய்தியில் இது குறித்து தீவிரமாக அலசலாம்.

ஃபார்ச்சூனர் Vs என்டெவர் ஆப் ரோட்டில் சிறந்த கார் எது?

எஸ்.யூ. வி கார் சந்தையில் டொயோட்டா பார்ட்டியூனர், மற்றம் ஃபோர்டு என்டெவர் ஆகிய கார்களுக்கு தான் கடும் போட்டியே. இந்த இரண்டு கார்களிலும் லுக், ஆப்ஷன்கள், இன்ஜின் திறன் என பெரும்பாலான வசதிகள் ஒரே மாதிரியான வசதிகளை கொண்டது. அதனால் தான் இந்த கடும் போட்டி நிலவுகிறது.

ஃபார்ச்சூனர் Vs என்டெவர் ஆப் ரோட்டில் சிறந்த கார் எது?

எல்லா ஆப்ஷன்களும் ஒன்றாக இருக்கும் போது போட்டி வைத்து பார்ப்பது தானே சிறந்தது. அந்த வகையில் பார்ட்டியூனர் மற்றும் என்டெவர் கார்களில் இது ஆப் ரோட்டில் சிறந்தது என்பதை பார்க்க போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

ஃபார்ச்சூனர் Vs என்டெவர் ஆப் ரோட்டில் சிறந்த கார் எது?

அதாவது ஒரு பகுதியில் ஒர் உள்ளே இறங்கி ஏறக்கூடிய வகையில் குழி தோண்டி அந்த குழிக்கு உள்ளே மற்றொரு சிறிய குழி தோண்டி காரை பெரிய குழிக்குள் இறக்கி அதற்குள் இருக்கும் சிறிய குழியை பலகை மூலம் கடந்து பின் பெரிய குழியில் இருந்து வெளியே வருவது தான் போட்டி

ஃபார்ச்சூனர் Vs என்டெவர் ஆப் ரோட்டில் சிறந்த கார் எது?

முதலில் குழியில் இறங்கிய என்டெவர் கார் சிறிய குழியையும் லாவகமாக கடந்து விடுகிறது. ஆனால் குழியில் இருந்து வெளியே வரும் போது முதலில் அப்பகுதியில் இருந்த மணற்திட்டு காரின் முகப்பு பாகத்தில் உள்ள அடிப்பகுதியில் தட்டுகிறது. பின்னர் அதன் மணற் திட்டு பெயர்த்து எடுக்கப்படுகிறது.

ஃபார்ச்சூனர் Vs என்டெவர் ஆப் ரோட்டில் சிறந்த கார் எது?

அதன் பின் கார் கார் ஏற முயற்சிக்கும் போது காரின் முகப்பு பகுதி மட்டும் வெளியே வந்து பின் பகுதி வெளியே வர முடியாமல் திணறுகிறது. இந்த கார் ஆல் வீல் டிரைவாக இருந்தாலும் காரின் முகப்பு பகுதியில் கிரிப் கிடைக்காததால் வெளியே வர முடியாமல் திணறுகிறது.

ஃபார்ச்சூனர் Vs என்டெவர் ஆப் ரோட்டில் சிறந்த கார் எது?

பல்வேறு முயற்சிகள் செய்தும் காரை குழியில் இருந்து வெளியே எடுக்க முடியாததால் இசுசூ டி மேக்ஸ், வி கிராஸ் காரை அப்பகுதிக்கு கொண்டுவந்து டோ செய்து காரை இழுக்கின்றனர். இதன் பின் தான் கார் குழியில் இருந்து வெளியே வருகிறது.

ஃபார்ச்சூனர் Vs என்டெவர் ஆப் ரோட்டில் சிறந்த கார் எது?

அதன் பின் டொயொட்டா பார்ட்டியூனர் கார் கொண்டு வரப்படுகிறது. அந்த கார் சுலபமாக இந்த குழியை கடந்து விடுகிறது. இதன் மூலம் மட்டும் நாம் என்டெவரை விட பார்ட்டியூனர் கார் தான் ஆப் ரோடு டிரைவிங்கிற்கு பெஸ்ட் என்ற முடிவிற்கு நாம் வந்து விட கூடாது. முதலில் இந்த டெஸ்ட் நடந்த வீடியோவை நீங்கள் கீழே பாருங்கள்.

இந்த போட்டியில் பங்கேற்ற இரண்டு கார்களையும் நாம் முதலில் பார்க்க வேண்டும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது புதிய என்டெவர் கார் மற்றும் பழைய மாடல் பார்ட்டியூனர் கார். இதில் பார்ட்டியூனர் காருக்கு 220 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது. அதே போல என்டெவர் காருக்கு 225 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது.

ஃபார்ச்சூனர் Vs என்டெவர் ஆப் ரோட்டில் சிறந்த கார் எது?

ஆனால் அங்கு பயன்படுத்தப்பட்ட பார்ட்டியூனர் காரில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முகப்பு பகுதியில் பம்பர்கள் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் காரின் ஸ்டாக் குவாலிட்டியில் உள்ள கிரவுண்ட் கிளியரன்ஸை விட அதிகமாக அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸ் கிடைக்கும் படி இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஃபார்ச்சூனர் Vs என்டெவர் ஆப் ரோட்டில் சிறந்த கார் எது?

கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ள கார்கள் ஒரே மாதிரியாக தான் செயல்படும் இவ்வளவு வித்தியாசனங்கள் வரவாய்ப்பில்லை ஒரு வேலை என்டெவர் காரிலும் இது போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் அந்த காரும் இந்த டாஸ்கை எளிதாக முடித்திருக்கும்.

டிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Toyota Fortuner sails through but Ford Endeavour gets stuck: We explain why. Read in Tamil
Story first published: Saturday, May 26, 2018, 11:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X