டொயோட்டா பிராண்டில் வெளிவரும் முதல் மாருதி கார் இதுதான்!!

டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு வரும் முதல் மாருதி கார் என்ற பெருமையை பலேனோ கார் பெற இருக்கிறது. அடுத்த நிதி ஆண்டில் டொயோட்டா பிராண்டில் பலேனோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்

By Saravana Rajan

டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு வரும் முதல் மாருதி கார் என்ற பெருமையை பலேனோ கார் பெற இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

டொயோட்டா பிராண்டில் வெளிவரும் முதல் மாருதி கார் இதுதான்!!

ஜப்பானிய கார் நிறுவனங்களான டொயோட்டாவும், சுஸுகியும் இந்தியாவில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. மேலும், இரு நிறுவனங்களும் தங்களது சில கார் மாடல்களை பரஸ்பரம் தங்களது பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளன.

டொயோட்டா பிராண்டில் வெளிவரும் முதல் மாருதி கார் இதுதான்!!

இந்த நிலையில், டொயோட்டா பிராண்டில் மாருதி பலேனோ மற்றும் பிரெஸ்ஸா எஸ்யூவி கார் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதேபோன்று, மாருதி பிராண்டில் டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

டொயோட்டா பிராண்டில் வெளிவரும் முதல் மாருதி கார் இதுதான்!!

ரீபேட்ஜ் முறையில் இந்த கார்கள் சிறிய மாறுதல்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்தநிலையில், டொயோட்டா பிராண்டில் முதலாவது மாருதி கார் மாடலாக பலேனோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

டொயோட்டா பிராண்டில் வெளிவரும் முதல் மாருதி கார் இதுதான்!!

அடுத்த நிதி ஆண்டில் டொயோட்டா பிராண்டில் பலேனோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், டொயோட்டா பிராண்டில் செல்லும் பலேனோ காரில் செய்யப்பட இருக்கும் மாற்றங்கள் குறித்தும் முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

டொயோட்டா பிராண்டில் வெளிவரும் முதல் மாருதி கார் இதுதான்!!

ஆண்டுக்கு 25,000 பலேனோ கார்களை மாருதி சுஸுகி கார் நிறுவனம் டொயோட்டா கார் நிறுவனத்துக்கு வழங்க இருக்கிறது. அந்த கார்களில் மாற்றங்களை செய்து டொயோட்டா தனது ஷோரூம்கள் வாயிலாக விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

டொயோட்டா பிராண்டில் வெளிவரும் முதல் மாருதி கார் இதுதான்!!

மாருதி பலேனோ கார்கள் குஜராத்தில் அமைந்துள்ள சுஸுகி ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், டொயோட்டா பிராண்டில் வர இருக்கும் பலேனோ கார்கள் பெங்களூர் அருகே பிடதியில் உள்ள டொயோட்டா கார் ஆலையில் உற்பத்தி செய்யப்படும்.

டொயோட்டா பிராண்டில் வெளிவரும் முதல் மாருதி கார் இதுதான்!!

மாருதி பலேனோ காரை ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வருவதன் மூலமாக டொயோட்டா கார் நிறுவனத்தின் வர்த்தகத்தில் கூடுதல் வலுவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ரீபேட்ஜ் செய்யப்பட இருக்கும் பலேனோ காருக்கு கிடைக்க இருக்கும் வரவேற்பை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Source: Livemint

Most Read Articles
English summary
The Maruti Baleno will be the first cross-badged product from the Suzuki-Toyota collaboration. Suzuki Motor Corp. will supply around 25,000 units of the Baleno hatchback, each year to Toyota. These vehicles will then undergo minor exterior and interior changes, before going on sale during the next fiscal year.
Story first published: Wednesday, August 8, 2018, 10:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X