மின்னல் வேகத்தில் சீறி பாயும் “ரயில்-18” சென்னையில் தயாரிப்பு…! வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..!

இந்தியாவில் முதன் முறையாக 160 கி.மீ. வேகத்தில் சீறிப்பாயக்கூடிய அதிநவீன வசதிகளை உள்ளடக்கிய “ரயில்-18” எனும் ரயில் பெட்டிகள் தற்போது சென்னையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சதாப்தி ரயிலையும் மிஞ்சும் வேகம் க

இந்தியாவில் முதன் முறையாக 160 கி.மீ. வேகத்தில் சீறிப்பாயக்கூடிய அதிநவீன வசதிகளை உள்ளடக்கிய "ரயில்-18" எனும் ரயில் பெட்டிகள் தற்போது சென்னையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சதாப்தி ரயிலையும் மிஞ்சும் வேகம் கொண்ட இந்த ரயிலில் உள்ள சிறப்பு அம்சங்களையும், திறனையும் கீழே உங்களுக்காக செய்தியாக வழங்கியுள்ளோம்.

மின்னல் வேகத்தில் சீறி பாயும் “ரயில்-18” சென்னையில் தயாரிப்பு…! வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..!

மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே முற்றிலுமாக பொருட்களை தயாரித்து ஏற்றுமதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி சென்னை ஐசிஎஃப் எனப்படும் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் தொழிற்சாலையில் இந்தியாவிலேயே உற்பத்தியாகும் 80 சதவீத மூலப்பொருட்களை கொண்டு "ரயில்-18" என்ற நவீன ரக ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

மின்னல் வேகத்தில் சீறி பாயும் “ரயில்-18” சென்னையில் தயாரிப்பு…! வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..!

இந்த புதிய நவீன ரகத்தில் தயாரிக்கப்பட்ட ரயில்கள் சுமார் 160 கி.மீ. வேகத்தில் பயணிக்கூடியது. இதில் ரயில் இன்ஜின்கள் தனியாக இல்லாமல் பெட்டியோடு சேர்ந்தே இருக்கும்.

மின்னல் வேகத்தில் சீறி பாயும் “ரயில்-18” சென்னையில் தயாரிப்பு…! வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..!

இந்த ரயில்களின் வேகம் என்பது தற்போது செயல்பாட்டில் உள்ள சதாப்தி அதிவிரைவு ரயிலின் வேகத்தை விட அதிகமாகும். இதனால் சதாப்தி ரயில் பயணிப்பதை விட 15 சதவீதம் குறைவான நேரத்தில் இந்த ரயில் பயணிக்கும்.

மின்னல் வேகத்தில் சீறி பாயும் “ரயில்-18” சென்னையில் தயாரிப்பு…! வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..!

இந்த ரயில் -18 ரயிலில் மொத்தம் 18 பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் 2 பெட்டிகள் உயர் வகுப்பு பெட்டிகளாகவும், 14 பெட்டிகள் சாதாரண பெட்டிகளாகவும் இணைக்கப்பட்டுள்ளது. முன்புறமும், பின்புறமும் 2 பெட்டிகள் லோகோ பைலட்டிற்காக இணைக்கப்படுகின்றன.

மின்னல் வேகத்தில் சீறி பாயும் “ரயில்-18” சென்னையில் தயாரிப்பு…! வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..!

இந்த ரயிலில் மொத்தம் 1,128 பேர் பயணிக்கலாம். இதில் இலவச வை-பை வசதி, பயணி செல்ல வேண்டிய இடத்தை ரயில் நெருங்கும் முன் அவருக்கு எச்சரிக்கையூட்டும் வசதி, ஜிபிஎஸ் அடிப்படையில் பயணிகளுக்கு ரயிலின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளும் வசதி,

மின்னல் வேகத்தில் சீறி பாயும் “ரயில்-18” சென்னையில் தயாரிப்பு…! வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..!

நவீன கழிப்பறை வசதி, நவீன உணவு தயாரிப்பு கூடம் மற்றும் உணவு வினியோகிக்கும் பகுதிகள் அடங்கிய பெட்டி பொருத்தப்பட்டுள்ளது.

மின்னல் வேகத்தில் சீறி பாயும் “ரயில்-18” சென்னையில் தயாரிப்பு…! வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..!

மிக முக்கியமாக இந்த ரயிலில் பாதுகாப்பு வசதிக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ரயிலில் நடக்கும் குற்றங்கள், அசம்பாவிதங்களை தடுக்கவும், கண்காணிக்கவும் முடியும்.

மின்னல் வேகத்தில் சீறி பாயும் “ரயில்-18” சென்னையில் தயாரிப்பு…! வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..!

பயணிகள் தாங்கள் கொண்டு வரும் பொருட்களை பாதுகாப்பாக வைக்கும் இட வசதி சாதாரண ரயில் பெட்டிகளை காட்டிலும் இதில் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. ரயில் முழுவதும் ஏசி பொருத்தப்பட்டுள்ளது.

மின்னல் வேகத்தில் சீறி பாயும் “ரயில்-18” சென்னையில் தயாரிப்பு…! வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..!

இந்த ரயிலை மின்சார ரயில் போல இரண்டு புறங்களில் இருந்து இயக்கலாம். இதற்காக இரண்டு புறங்களிலும் ஓட்டுநருக்கான கேபின் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில் பெட்டிகளில் மெட்ரோ ரயில்களில் உள்ளது போல தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.

மின்னல் வேகத்தில் சீறி பாயும் “ரயில்-18” சென்னையில் தயாரிப்பு…! வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..!

மேலும் ரயில் முழுவதும் சீல் செய்யப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணத்தின் போது யாரும் தவறி விழவோ அல்லது கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ளவோ முடியாது.

மின்னல் வேகத்தில் சீறி பாயும் “ரயில்-18” சென்னையில் தயாரிப்பு…! வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..!

இந்த ரயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் இணைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டிருக்கும். தற்போது உள்ள ரயில்களில் உள்ளது போல ஒரு பெட்டிக்கும் மற்றொரு பெட்டிக்கும் இடையே பாலம் போன்ற வடிவமைப்பு இருக்காது. இதனால் பயணிகள் இந்த ரயிலில் எங்கு வேண்டுமானாலும் ஏறி இறங்கலாம். ரயில் பெட்டிக்கும் ரயில் பயணத்தில் இருக்கும் போதே ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு சுலபமாக சென்று வரலாம்.

மின்னல் வேகத்தில் சீறி பாயும் “ரயில்-18” சென்னையில் தயாரிப்பு…! வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..!

மேலும் இந்த ரயிலில் உடல் ஊனமுற்றவர்கள் சுலபமாக ஏறி இறங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களை ஏற்றி இறக்கவும், ரயிலுக்குள் அவர்கள் ஒரு இடத்திருந்து மற்றொரு இடத்திற்கு செல்லவும் வீல் சேர் வசதியும் இதில் உள்ளது. மேலும் ஊனமுற்றவர்கள் பயன்படுத்தும் வகையிலான கழிவறை வசதிகளும் இதில் உள்ளது.

மின்னல் வேகத்தில் சீறி பாயும் “ரயில்-18” சென்னையில் தயாரிப்பு…! வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..!

இந்த ரயிலில் முற்றிலும் எல்இடி விளக்குகளை கொண்டு லைட்டிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த ரயிலில் பொருத்தப்பட்டுள்ள சீட்கள் ரயில் செல்லும் திசைகளுக்கு ஏற்ப சுழற்றிக்கொள்ளும் வசதியை பெற்றுள்ளது.

மின்னல் வேகத்தில் சீறி பாயும் “ரயில்-18” சென்னையில் தயாரிப்பு…! வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..!

இந்த ரயிலில் பொருட்கள் வைக்கும் பகுதி விமானங்களில் உள்ளது போன்ற வடிவமைப்பை பெற்றுள்ளது. இதனால் பொருட்கள் பாதுகாப்பாகவும், அதிக பொருட்களை பெறும் வசதியையும் பெற்றுள்ளது.

மின்னல் வேகத்தில் சீறி பாயும் “ரயில்-18” சென்னையில் தயாரிப்பு…! வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..!

இந்த ரயிலில் சாதாரண ரயிலை விட சிறப்பான சஸ்பென்ஸன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு ஸ்மூத்தான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்கும். இந்த ரயிலில் இரண்டு பகுதியிலும் ஏரோ டைனமிக் வடிவிலான முகப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் முழுவதும் பக்கவாட்டு பகுதியில் நீளமான ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மின்னல் வேகத்தில் சீறி பாயும் “ரயில்-18” சென்னையில் தயாரிப்பு…! வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..!

இந்த ரயில்களில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி கதவுகளின் கண்ட்ரோல் முழுவதும் டிரைவர் கேபினிலேயே இருக்கும். இந்த கதவும் ரயிலின் வேகம் 0 கி.மீ.ல் இருந்தால் மட்டுமே திறக்கும். அதே போல ரயிலின் அனைத்து கதவுகளும் சில் ஆன பின்புதான் ரயில் புறப்பட முடியும். அதற்கு ஏற்ற வகையில்தான் இதன் தொழிற்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மின்னல் வேகத்தில் சீறி பாயும் “ரயில்-18” சென்னையில் தயாரிப்பு…! வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..!

மேலும் இந்த கதவுகளுக்கு கீழே சில ஆட்டோமெட்டிக் ஸ்லைடு படிக்கட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இது எதிர்பாராத விதமாக யாரும் ரயிலில் ஏறும்போதோ இறங்கும்போதோ தவறி கீழேயோ அல்லது தண்டவாளத்திலேயோ விழுவதை தவிர்க்கும்.

மின்னல் வேகத்தில் சீறி பாயும் “ரயில்-18” சென்னையில் தயாரிப்பு…! வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..!

மேலும் இந்த ரயிலில் அனைத்து பெட்டிகளிலும் எமர்ஜென்ஸி லிவர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவசர காலங்களில் பயணிகள் பயணத்தின் போது அந்த லிவரை பயன்படுத்தி ரயிலை உடனடியாக நிறுத்த முடியும். மேலும் இந்த ரயிலில் புதிய வசதியாக டாக் பேக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் அவசர காலங்களில் பயணிகள் ரயிலில் உள்ள டிரைவர் உட்பட ஊழியர்களுடன் பேச முடியும். இதற்காக மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மின்னல் வேகத்தில் சீறி பாயும் “ரயில்-18” சென்னையில் தயாரிப்பு…! வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..!

இந்த ரயிலில் அதிநவீன பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது ரயில் எவ்வளவு வேகத்தில் அதிகபட்ச வேகத்தில் செல்லும் போது பிரேக் பிடித்தாலும் ரயிலுக்கு எந்த வித சேதாரமும் இன்றி சாதாரண ரயில் எவ்வளவு தூரம் சென்று நிற்குமோ அதற்கு முன்னதாகவே ரயிலை நிறுத்தி விடுகிறது.

மின்னல் வேகத்தில் சீறி பாயும் “ரயில்-18” சென்னையில் தயாரிப்பு…! வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..!

ரயில் பயணத்தை குறைப்பதற்கு இந்த அஸிலரேஷன் செயல்பாடும் டீ ஆஸிலரேஷன் செயல்பாடும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ரயில் பயண அனுபவத்தை போன்று இதுவரை இந்தியாவில் வேறு எங்கும் ரயில் பயண அனுபவத்தை பெற்றிருக்க முடியாது.

மின்னல் வேகத்தில் சீறி பாயும் “ரயில்-18” சென்னையில் தயாரிப்பு…! வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..!

இந்த ரயில் இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை தயாரிக்க ஐசிஎஃப் 18 மாதங்கள் எடுத்துக்கொண்டது. இதற்காக சுமார் ரூ.100 கோடி செலவிடப்பட்டுள்ளது.

மின்னல் வேகத்தில் சீறி பாயும் “ரயில்-18” சென்னையில் தயாரிப்பு…! வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..!

இதே ரயிலை வெளிநாடுகளில் தயாரித்து இந்தியாவிற்கு வாங்குவது என்றால் அதற்காக அரசு குறைந்த பட்சம் ரூ.200 கோடி செலவு செய்து சுமார் 4 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என ஐசிஎஃப் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மின்னல் வேகத்தில் சீறி பாயும் “ரயில்-18” சென்னையில் தயாரிப்பு…! வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..!

இந்த ரயில் வரும் அக். 29ம் தேதி ரயில்வே வாரியத்திடம் சோதனை ஓட்டத்திற்காக ஒப்படைக்கப்படுகிறது. அதன்பின் இதன் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் சான்றிதழ் பெறப்படும்.

மின்னல் வேகத்தில் சீறி பாயும் “ரயில்-18” சென்னையில் தயாரிப்பு…! வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..!

அவ்வாறு இந்த ரயில் பாதுகாப்பானது என்ற சான்றிதழ் வந்துவிட்டால் இந்த ரயிலை ரயில்வே வாரியம் படிப்படியாக செயல்பாட்டிற்கு கொண்டு வந்துவிடும். தற்போது உள்ள ரயில்கள் எல்லாம் மெதுவாக "ரயில் -18" ரயில்களாக மாறும்.

மின்னல் வேகத்தில் சீறி பாயும் “ரயில்-18” சென்னையில் தயாரிப்பு…! வைபை, சிசிடிவி என ஏராளமான வசதிகள்..!

தற்போது உள்ள ரயில்களில் உள்ள வசதிகளை விட இந்த ரயில்களில் அதிக வசதிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த ரயிலை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் தகுதியும் உள்ளது. இந்தியாவின் தேவை போக மீதம் தயாரிக்கப்படும் ரயில்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்த "ரயில்-18" ரயிலின் தயாரிப்பு இந்திய ரயில்வே தொழிற்நுட்ப வல்லுநர்களின் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

Most Read Articles
English summary
Train 18 with new features made in chennai icf. Read in Tamil
Story first published: Thursday, October 25, 2018, 17:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X