ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது.. தன் நிறுவனத்தின் காரை பாராட்டியவருக்கு ஆனந்த் மஹிந்திரா பதில்

மஹிந்திரா டியூவி 300 காரை பாராட்டிய வாடிக்கையாளருக்கு, அந்நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா வித்தியாசமாக பதில் அளித்துள்ளார். இதுகுறித்த தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

By Arun

இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பையில், தென்மேற்கு பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. அங்குள்ள சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. அப்படி 4 அடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கி நின்ற சாலையில், மஹிந்திரா டியூவி 300 காரில், ஒருவர் வெற்றிகரமாக பயணம் செய்திருக்கிறார்.

 ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது.. தன் நிறுவனத்தின் காரை பாராட்டியவருக்கு ஆனந்த் மஹிந்திரா பதில்

இதனால் உற்சாகம் அடைந்த அந்த நபர், மஹிந்திரா டியூவி 300 காரை பாராட்டி டிவிட் செய்தார். அத்துடன் இப்படி ஒரு காரை உருவாக்கிய மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார். அந்த டிவிட்டை நீங்கள் கீழே காணலாம்.

இதற்கு ஆனந்த் மஹிந்திரா, பதில் டிவிட் செய்தார். ''இதை கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் எப்போதும் பாதுகாப்பாக இருங்கள். உங்கள் அதிர்ஷ்டத்தை வெகு தொலைவிற்கு தள்ளி விடாதீர்கள். ஏனெனில் இது நிலம், நீர் என இரண்டிலும் பயணிக்கும் வாகனம் கிடையாது'' என அவர் வித்தியாசமாக பதிலளித்துள்ளார்.

எஸ்யூவி வகை கார்களின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் மிகவும் அதிகமாக இருக்கும். அத்துடன் மற்ற கார்களுடன் ஒப்பிடுகையில், ஏர் இன்டேக் சிஸ்டம் உயர்வான இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். அப்படி இருந்தும் கூட, எஸ்யூவி வகை கார்களிலும் தண்ணீர் புகுந்து விடுகிறது.

 ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது.. தன் நிறுவனத்தின் காரை பாராட்டியவருக்கு ஆனந்த் மஹிந்திரா பதில்

காரின் இன்ஜினிற்கு இருக்கும் முக்கியமான எதிரி தண்ணீர்தான். காரின் ஏர் இன்டேக் சிஸ்டம் வழியாக இன்ஜினிற்குள் தண்ணீர் புகுந்து விட்டால், மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் பயணிக்கும்போது, இப்படியான பிரச்னைகள் உண்டாகிறது.

 ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது.. தன் நிறுவனத்தின் காரை பாராட்டியவருக்கு ஆனந்த் மஹிந்திரா பதில்

குறிப்பாக மழை காலங்களில் சாலைகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்கும். அப்படிப்பட்ட இடங்களில் பயணிக்கும்போது, எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் இன்ஜினிற்குள் தண்ணீர் புகுந்து, பெரிய தொகையை செலவு செய்ய நேரிடும்.

 ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது.. தன் நிறுவனத்தின் காரை பாராட்டியவருக்கு ஆனந்த் மஹிந்திரா பதில்

தண்ணீர் தேங்கி நிற்கும் சாலைகளை முதலில் தவிர்த்து விடுவது நல்லது. இல்லாவிட்டால் தண்ணீர் வடியும் வரை காத்திருக்கலாம். ஆனால் தண்ணீர் வடியும் வரை காத்திருப்பது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாததுதான்.

 ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது.. தன் நிறுவனத்தின் காரை பாராட்டியவருக்கு ஆனந்த் மஹிந்திரா பதில்

எனவே தண்ணீர் தேங்கியிருந்தால், அந்த சாலையின் மையப்பகுதியிலேயே பயணிப்பது நல்லது. ஏனெனில் சாலையின் ஓரங்களில்தான் தண்ணீர் அதிகம் தேங்கி நிற்கும். தண்ணீரில் பயணித்து கொண்டிருக்கும்போது, ஒருவேளை கார் நின்று விட்டால், அதனை ஆன் செய்ய முயற்சிக்க வேண்டாம்.

 ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது.. தன் நிறுவனத்தின் காரை பாராட்டியவருக்கு ஆனந்த் மஹிந்திரா பதில்

அந்த சமயத்தில் காரை எடுத்து செல்ல டவ் ட்ரக்கை அழைப்பதே சிறந்தது. ஒருவேளை காரின் டோர் வரை தண்ணீர் இருந்தால், டோரை திறக்க வேண்டாம். ஏனெனில் தண்ணீர் முழுமையாக காருக்கு உள்ளே புகுந்து, இன்டீரியரை வீணடித்து விடும்.

 ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது.. தன் நிறுவனத்தின் காரை பாராட்டியவருக்கு ஆனந்த் மஹிந்திரா பதில்

மழைக்காலங்களில் காரை பராமரிப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். ஆனால் சரியாக பராமரிக்காவிட்டால், பெரிய அளவில் செலவு செய்ய நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் ஒவ்வொரு மழைக்காலத்தின்போதும் ஆயிரக்கணக்கான கார்கள் வீணாகின்றன.

 ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது.. தன் நிறுவனத்தின் காரை பாராட்டியவருக்கு ஆனந்த் மஹிந்திரா பதில்

ஒவ்வொரு மழைக்காலத்திலும், வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட கார்களால் சர்வீஸ் சென்டர்கள் நிரம்பி காணப்படுவது வாடிக்கையாக உள்ளது. அப்படி பாதிக்கப்பட்ட கார்களை சரி செய்வதற்கு சில நிறுவனங்கள் சிறப்பு முகாம்களையும் நடத்துகின்றன.

 ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது.. தன் நிறுவனத்தின் காரை பாராட்டியவருக்கு ஆனந்த் மஹிந்திரா பதில்

சில கார் உற்பத்தி நிறுவனங்கள் மழைக்காலம் தொடங்கும் முன்பாகவே, வெள்ள நீரில் இருந்து கார்களை பாதுகாப்பது எப்படி? என்பது குறித்த டிப்ஸ்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளன.

 ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது.. தன் நிறுவனத்தின் காரை பாராட்டியவருக்கு ஆனந்த் மஹிந்திரா பதில்

முன்னதாக மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர். வாடிக்கையாளர்கள் மற்றும் கார் ஆர்வலர்கள் பலரின் போஸ்ட்களுக்கு ஆனந்த் மஹிந்திரா ரிப்ளை செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mahindra TUV300 is not an amphibious vehicle-Anand Mahindra to TUV300 owner. Read in tamil.
Story first published: Wednesday, June 27, 2018, 17:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X