இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் வச்சிருக்கீங்களா… உங்க பர்ஸ் காலி... சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்கள் விபத்தில் சிக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விபத்தில் சிக்கிய வாகனத்தின் உரிமையாளரே நஷ்டஈடை கட்ட வேண்டும் என்றும், அவர் கட்டவில்லை என்றால் அந்த வாகனத்தை ஏலத்தில் விட்டு அத

By Bala

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்கள் விபத்தில் சிக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விபத்தில் சிக்கிய வாகனத்தின் உரிமையாளரே நஷ்டஈடை கட்ட வேண்டும் என்றும், அவர் கட்டவில்லை என்றால் அந்த வாகனத்தை ஏலத்தில் விட்டு அதன் மூலம் வரும் பணத்தை கொண்டு நஷ்டஈடு கொடுக்கப்பட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த முழு தகவல்களை கீழே காணலாம் வாருங்கள்.

இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் வச்சிருக்கீங்களா… உங்க பர்ஸ் காலி... சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

இந்தியாவில் நடக்கும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தரமான சாலைகள் அமைத்தல், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துதல் என அரசு தொடர்ந்து முயற்சிகளை எடுத்து கொண்டு இருக்கிறது.

இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் வச்சிருக்கீங்களா… உங்க பர்ஸ் காலி... சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

இருந்தாலும் இந்தியாவில் நிகழும் விபத்துக்களில் பாதிக்கப்படுபவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் இந்தியாவில் ஓடும் அத்தனை வாகனங்களுக்கும் காப்பீடு அவசியம் என்ற சட்டம் அமலில் இருக்கிறது.

இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் வச்சிருக்கீங்களா… உங்க பர்ஸ் காலி... சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

இதன் மூலம் எதிர்பாராத வகையில் விபத்துக்கள் நிகழ்ந்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் இழப்பீடு வழங்கப்படும். ஆனால் இன்சூரன்ஸ் வாங்காத வாகனம் விபத்தில் சிக்கினால்?

இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் வச்சிருக்கீங்களா… உங்க பர்ஸ் காலி... சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

இன்சூரன்ஸ் வாங்காத வாகனம் விபத்தில் சிக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த இன்சூரன்ஸ் நிறுவனமும் பொறுப்பேற்காது. இப்படியாக ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. அதில் இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் நிகழ்த்திய விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் வச்சிருக்கீங்களா… உங்க பர்ஸ் காலி... சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் வச்சிருக்கீங்களா… உங்க பர்ஸ் காலி... சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் உரிமையாளரே பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈட்டை வழங்க வேண்டும் என்றும், இதை 3 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும்,

இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் வச்சிருக்கீங்களா… உங்க பர்ஸ் காலி... சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

இல்லாவிட்டால் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை அரசு பறிமுதல் செய்து, அதை ஏலத்தில் விட்டு, அதில் வரும் தொகையை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் வச்சிருக்கீங்களா… உங்க பர்ஸ் காலி... சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

மேலும் இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்கள் விபத்தில் சிக்கினால், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈட்டை விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் உரிமையாளர்களே செலுத்த வேண்டும் என்ற சட்ட திருத்தத்தை கொண்டு வர மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வெளியான 12 வாரங்களுக்குள் இதனை செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் வச்சிருக்கீங்களா… உங்க பர்ஸ் காலி... சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

மேலும் இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் உயிர் சேதம் ஏற்படும் அளவிற்கோ, ரத்த காயம் ஏற்படும் அளவிற்கோ விபத்தில் சிக்கினால் அதை போலீசார் உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் எனவும், விபத்தில் சிக்கிய காரின் உரிமையாளர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் வரை வாகனத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் வச்சிருக்கீங்களா… உங்க பர்ஸ் காலி... சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

விபத்து ஏற்படுத்திய இன்ஸ்சூரன்ஸ் இல்லாத வாகனத்தின் உரிமையாளர் விபத்து நடந்து 3 மாதங்களுக்குள் நஷ்டஈடு வழங்கப்படவில்லை எனில் அந்த வாகனத்தை ஏலத்தில் விட அறிவிக்கப்பட வேண்டும்.

இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் வச்சிருக்கீங்களா… உங்க பர்ஸ் காலி... சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

அந்த அறிவிப்பு வெளியாகி 15 நாட்களுக்குள் அந்த வாகனத்தை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை நஷ்டஈடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் வச்சிருக்கீங்களா… உங்க பர்ஸ் காலி... சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

இந்தியாவில் வாகனம் வைத்திருக்கும் அனைவரும் தங்கள் வாகனத்திற்கான மூன்றாம் நபருக்கான காப்பீட்டை கட்டாயம் எடுத்திருக்க வேண்டும். வாகனத்திற்கான சொந்த சேதாரத்திற்கான காப்பீட்டை எடுப்பதும், எடுக்காமல் இருப்பதும் கட்டாயமில்லை.

இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் வச்சிருக்கீங்களா… உங்க பர்ஸ் காலி... சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

இதில் மூன்றாம் நபருக்கான காப்பீடு என்பது வாகனத்தால் ஏற்படும் தீ விபத்து, வெடிவிபத்து, சாலை விபத்து, மற்றும் ரயில் பாதை விபத்துக்களில் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த இன்சூரன்ஸ் பணம் வழங்கப்படும்.

இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் வச்சிருக்கீங்களா… உங்க பர்ஸ் காலி... சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

அதுவே மூன்றாம் நபருக்கான காப்பீடு மற்றும் சொந்த வாகனத்திற்கான சேதார காப்பீடு என்றால் திருட்டு, வாகனத்திற்கான சேதாரம், பயணிகள் மற்றும் டிரைவர்கள உயிரிழந்தால் அவர்களுக்கான இழப்பீடு மற்றும் மூன்றாம் நபருக்கான காப்பீட்டில் உள்ள பலன்கள் சேர்ந்து கிடைக்கும்.

Most Read Articles
English summary
Uninsured vehicle owners should pay accident compensation. Read in Tamil
Story first published: Friday, September 21, 2018, 15:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X