விரைவில் இந்தியர்களை மனதை கொள்ளை கொள்ள வரும் மாருதி சுஸூகி கார்கள்

இந்தியாவின் அதிக கார்களை விற்கும் கார் நிறுவனமான மாருதி சுஸூகி நிறுவனம் ஒட்டு மொத்த கார் விற்பனையில் பாதி கார்கள் மாருதி சுஸூகி நிறுவனத்தின் கார்கள் தான்.

By Balasubramanian

இதையடுத்து மாருதி நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களையும் விற்பனையை தக்க வைக்க அவ்வப்போது தங்கள் கார்களில் சில மாற்றங்களை செய்து ரிலீஸ் செய்து வருகின்றனர். இச்செய்தியில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மாருதி சுஸூகி நிறுவனத்தின் கார்கள் குறித்து பார்க்கலாம்.

விரைவில் இந்தியர்களை மனதை கொள்ளை கொள்ள வரும் மாருதி சுஸூகி கார்கள்

மாருதி சுஸூகி சியஸ்

மாருதி சுஸூகி சியஸ் கார் சர்வதேச அளவில் ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டாலும், இந்தியாவில் புதிய லுக்கில் ரிலீஸ் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்த கார் டிசைன் செய்யப்பட்டு விட்ட நிலையில், அதற்கான டெஸ்டிங் இப்பொழுது நடக்கிறது. அவ்வப்போது டெஸ்டிங் செய்யும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகி வருகிறது.

விரைவில் இந்தியர்களை மனதை கொள்ளை கொள்ள வரும் மாருதி சுஸூகி கார்கள்

இந்த காரில் முன் பக்கத்திலும் பின் பக்கத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மாருதி நிறுவனம் தயாரித்த புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த கார் அடிக்கடி டெஸ்டிங் செய்யப்படுகிறது. பழைய காரில் 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இருந்தது. மேலும் புதிய காரில் ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் டிசைன் மாற்றப்பட்டுள்ளது.

விரைவில் இந்தியர்களை மனதை கொள்ளை கொள்ள வரும் மாருதி சுஸூகி கார்கள்

மாருதி எர்டிகா

சுஸூகி நிறுவனம் ஏற்கனவ இந்தோனேஷியாவில் எர்டிகா காரின் புதிய வெர்ஷனை வெளியிட்டுவிட்டது. இந்த கார் தான் விரைவில் இந்தியாவிற்கும் வரவுள்ளது. இந்த கார் ஹார்ட்டெக்ட் தளத்தில் உருவாக்கப்படுகிறது. பெலினோ மற்றும் புதிய ஸிப்ட் கார்கள் எல்லாம் இந்த தளத்தில் தான் உருவாக்கப்படுகிறது.

விரைவில் இந்தியர்களை மனதை கொள்ளை கொள்ள வரும் மாருதி சுஸூகி கார்கள்

புதிதாக வரவுள்ள இந்த எர்டிகா எம்பிவி ரக கார் பழைய மாடலை விட சற்று நீளமாக வடிவமைக்கப்படுகிறது. இதிலும் மாருதியின் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்பொருத்தப்படுகிறது. சியஸ் காரில் பொருத்தப்படும் அதே இன்ஜின் தான் இதிலும் பொருத்தப்படுகிறது. இந்த காரில் பிளஸ் இன்டீரியர், ஆட்டோ கியர், மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது.

விரைவில் இந்தியர்களை மனதை கொள்ளை கொள்ள வரும் மாருதி சுஸூகி கார்கள்

மாருதி வேக்ன் ஆர்

இந்த புதிய வேகன் ஆர் கார் தற்போது விற்பனை செய்யப்படும் கார்களில் இருந்து பெரும் மாற்றங்களை கொண்டுள்ளது. இந்த டிசைன் முழுவதும் ஜப்பானில் விற்பனையாகும் காரின் மாடலை ஒத்து டிசைன் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான டிசைன்கள் அப்படியே தான் இருக்கவிருக்கிறது.

விரைவில் இந்தியர்களை மனதை கொள்ளை கொள்ள வரும் மாருதி சுஸூகி கார்கள்

இந்த கார் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் 67 பிஎச்பி பவரும், 90 என்எம் டார்க் திறனும் கொண்டிருக்கிறது. இந்த காரில் டிரைவருக்கான ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஆகியவற்றுடன் வருகிறது. ஏபிஎஸ் 2019ம் ஆண்டும் முதல் அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம் இந்த கார் 2019ம் ஆண்டு விற்பனைக்கு வரலாம் என தெரிகிறது.

விரைவில் இந்தியர்களை மனதை கொள்ளை கொள்ள வரும் மாருதி சுஸூகி கார்கள்

மாருதி ஆல்டோ

மாருதி நிறுவனம் ஆல்டோ காரை தற்போது ரீ டிசைன் செய்து வருகிறது. இதுவரைஅந்த கார் எப்படி இருக்கும் என்ற எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. சர்வதேச டிசைனில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இந்தியாவில் ரிலீஸ் செய்யப்படும் என தெரிகிறது. மேலும் இன்ஜினிலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் இந்தியர்களை மனதை கொள்ளை கொள்ள வரும் மாருதி சுஸூகி கார்கள்

கடைசியாக ரிலீஸ் செய்யப்பட்ட ஜப்பானில் உள்ள ஆல்டோ காரில் 660 சிசி இன்ஜின் உடன் 51 பிஎச்பி பவரும், 63 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்தியாவில் ரிலீஸ் செய்யப்படும் கார் சிறந்த மைலேஜ் மற்றும் விற்பனையை அதிகரிக்கும் சில அம்சங்களுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் இந்தியர்களை மனதை கொள்ளை கொள்ள வரும் மாருதி சுஸூகி கார்கள்

மாருதி விட்டாரா ப்ரீஸ்ஸா பெட்ரோல்

மாருதி விட்டாரா ப்ரீஸ்ஸா கார் இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. ஆனால் அதில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை. டீசல் இன்ஜின் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. விட்டாரா ப்ரீஸ்ஸாவில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் 2019ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் இந்தியர்களை மனதை கொள்ளை கொள்ள வரும் மாருதி சுஸூகி கார்கள்

இந்த கார் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஹெபிரிட் சிஸ்டம் உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோ ஹைபிரிட் சிஸ்டம் இருப்பதால் நல்ல மைலேஜ் கிடைக்கும். காம்பெக்ட் எஸ்யூவி ரக காரில் சிறந்த காராக இந்த கார் இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. இந்தியர்களிடம் ஆட்டோ கியர் கார்களுக்கு மவுசு; வரும் காலத்தில் மேனுவல் கியர் காணமல் போகுமாம்
  2. யமஹா எராக்ஸ் 155 ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்!!
  3. முதல்வரின் ரூ.1.75 கோடி ரேஞ்ச் ரோவரின் ரகசியங்கள் லீக்.. இந்த கார்தான் அதிர்ஷ்டத்தை கொடுக்குதாம்...
  4. இந்தியாவில் புதிய ஃபோக்ஸ்வேகன் கார்களை தயாரிக்கும் பொறுப்பை ஏற்கும் ஸ்கோடா!!
  5. சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை - முழு விபரங்கள்
Most Read Articles
English summary
upcoming maruthi suzuki cars. Read in Tamil
Story first published: Saturday, June 23, 2018, 16:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X