புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியா வருவது சந்தேகம்!!

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியா வருவதில் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கின்றன. எனவே, புதிய போலோ கார் குறித்த எதிர்பார்ப்பை வாடிக்கையாளர்கள் கைவிடுவதே ஆகச் சிறந்த வழியாக தோன்றுகிறது. 2020ம் ஆ

By Saravana Rajan

புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியா வருவதில் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கின்றன. எனவே, புதிய போலோ கார் குறித்த எதிர்பார்ப்பை வாடிக்கையாளர்கள் கைவிடுவதே ஆகச் சிறந்த வழியாக தோன்றுகிறது.

 புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியா வருவதில் ஒரே குழப்பம்!!

ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் சிறந்த டிசைன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை பெற்ற மாடல் ஃபோக்ஸ்வேகன் போலோ கார். இந்த காருக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச அளவில் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் அறிமுகம் செய்யப்பட்டது.

 புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியா வருவதில் ஒரே குழப்பம்!!

வடிவமைப்பிலும், வசதிகளிலும் 6ம் தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டது. தற்போது விற்பனையில் உள்ள போலோ கார் PQ25 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட நிலையில், புதிய தலைமுறை போலோ கார் MQB A0 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டது.

 புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியா வருவதில் ஒரே குழப்பம்!!

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் 4,053 மிமீ நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. மேலும், தற்போதைய மாடலில் 280 லிட்டர் பூட் ரூம் இருக்கும் நிலையில், புதிய மாடலில் 351 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. போலோ காரின் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் மிக கவனமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியா வருவதில் ஒரே குழப்பம்!!

எல்இடி ஹெட்லைட்டுகள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆடி கார்களில் இருப்பது போன்ற டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் என பல நவீன யுக அம்சங்களுடன் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

 புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியா வருவதில் ஒரே குழப்பம்!!

இந்த நிலையில், புதிய போலோ கார் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் ன்ற திர்பார்ப்பார்ப்பு எழுந்தது. ஆனால், சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஓர் ஆண்டு நெருங்கும் நிலையில், இந்தியாவில் இந்த கார் அறிமுகம் செய்யப்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

 புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியா வருவதில் ஒரே குழப்பம்!!

இந்த நிலையில், 6ம் தலைமுறை மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்வதை தவிர்க்க அல்லது தாமதப்படுத்த ஃபோக்ஸ்வேகன் முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. தற்போது வடிவமைக்கப்பட்டு இருக்கும் புதிய போலோ கார் MQB A0 உருவாக்கப்பட்டு இருப்பதால், விலை அதிகம் நிர்ணயிக்க வேண்டி இருக்கும். இதனால், இந்தியாவில் வர்த்தக ரீதியில் பின்னடவை சந்திக்கும்.

 புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியா வருவதில் ஒரே குழப்பம்!!

மேலும், இந்தியாவின் ஹேட்ச்பேக் ரக கார் மார்க்கெட்டில் ஏராளமான மாடல்கள் வரிசை கட்டி நிற்பதால், புதிய போலோ காரை அறிமுகம் செய்து சூடுபட்டுக் கொள்வதற்கு ஃபோக்ஸ்வேகன் விரும்பவில்லை.

 புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியா வருவதில் ஒரே குழப்பம்!!

அதேநேரத்தில், இந்தியாவில் குறைவான விலையில் கார்களை MQB பிளாட்ஃபார்மில் உருவாக்குவதற்கான திட்டத்தை ஃபோக்ஸ்வேகன் பரிசீலித்து வருகிறது. இந்த பிளாட்ஃபார்மில் ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு குறைந்தது 2 ஆண்டுகள் பிடிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியா வருவதில் ஒரே குழப்பம்!!

எனவே, 2020ம் ஆண்டில் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ காரை அறிமுகம் செய்யும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும், இந்திய ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டிற்கு அதிக முக்கியத்துவம் தருவதையும் ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா கைவிட முடிவு செய்துள்ளன.

 புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியா வருவதில் ஒரே குழப்பம்!!

அதற்கு பதிலாக, செடான் மற்றும் எஸ்யூவி கார்களை தரமான கட்டமைப்பில் உருவாக்கி வெளியிட முடிவு செய்துள்ளன. இந்த மார்க்கெட்டில் சிறந்த கார்களை அறிமுகம் செய்வதன் மூலமாக தங்களது மார்க்கெட்டை வலுப்படுத்திக் கொள்ளவும் இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன.

Source: ET Auto

Most Read Articles
English summary
German automaker Volkswagen introduced the next generation Polo hatchback in the global markets in 2017. Volkswagen was expected to bring the next-gen Polo to India in 2019. Now, ETAuto reports that Volkswagen may not introduce the new-gen Polo in the Indian market.
Story first published: Sunday, May 27, 2018, 11:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X