வால்வோ நிறுவனத்தின் புதிய டி5 டர்போசார்ஜ் இன்ஜின் உடன் கார்கள் அறிமுகம்

வால்வோ நிறுவனம் புதிய டி5 டர்போ சார்ஜ் பெட்ரோல் இன்ஜின தயாரித்துள்ளது. இந்த இன்ஜின் சிறந்த பெர்பாமென்ஸ் மற்றும் மைலேஜை வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது இந்த இன்ஜின் லண்டனில் மட்டும்

By Balasubramanian

வால்வோ நிறுவனம் புதிய டி5 டர்போ சார்ஜ் பெட்ரோல் இன்ஜின தயாரித்துள்ளது. இந்த இன்ஜின் சிறந்த பெர்பாமென்ஸ் மற்றும் மைலேஜை வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது இந்த இன்ஜின் லண்டனில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வால்வோ நிறுவனத்தின் புதிய டி5 டர்போசார்ஜ் இன்ஜின் உடன் கார்கள் அறிமுகம்

வால்வோ நிறுவனம் பெர்பாமென்ஸ் மற்றும் திறனை அதிகரிக்கும் வகையில் பெரிய ரக கார்களுக்கான டி5 டர்போ சார்ஜ் இன்ஜின் என்ற இன்ஜினை தயாரித்துள்ளது. இதை எஸ்90, வி 90, வி90 க்ராஸ் கண்ட்ரி, எக்ஸ்சி90 எஸ்யூவி ஆகிய கார்களுக்கு பொருத்த திட்டமிட்டுள்ளது.

வால்வோ நிறுவனத்தின் புதிய டி5 டர்போசார்ஜ் இன்ஜின் உடன் கார்கள் அறிமுகம்

இந்த இன்ஜின் என்பது 2.0 லிட்டர் 4 சிலிண்டர் யூனிட் ஆகும். இதில் அலுமினியம் மற்றும் அலுமினியம் ஆலாய் ஆகியவை அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலே வழங்கப்பட்ட கார் பட்டியலில் இந்த இன்ஜின் பொருத்தப்பட்டு தற்போது லண்டனில் டீலர்ஷிப்களுக்கு வந்துள்ளது.

வால்வோ நிறுவனத்தின் புதிய டி5 டர்போசார்ஜ் இன்ஜின் உடன் கார்கள் அறிமுகம்

இது குறித்து வால்வோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கூறுகையில் :" இந்த டி5 பெட்ரோல் இன்ஜினை எஸ்90, வி90, எக்ஸ்சி90 ஆகிய ரேஞ்ச் கார்களில் பயன்படுத்துவது வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதன் சிறந்த பெர்பாமென்ஸ் வாடிக்கையாளர்களை கவர்கிறது. இதன் விற்பனையும் அமோகமாக இருக்கும் என நம்புகிறோம்."

வால்வோ நிறுவனத்தின் புதிய டி5 டர்போசார்ஜ் இன்ஜின் உடன் கார்கள் அறிமுகம்

இந்த டி5 டர்போ சார்ஜ் இன்ஜின் 250 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் அதிகபட்சமாக வெளிப்படுத்துகிறது. மேலும் இந்த இன்ஜின் சிறப்பான மைலேஜை வழங்குவதோடு மட்டும் இல்லாமல் குறைந்த அளவு புகையை உமிழ்ந்துவருகிறது.

வால்வோ நிறுவனத்தின் புதிய டி5 டர்போசார்ஜ் இன்ஜின் உடன் கார்கள் அறிமுகம்

மேலும் இந்த இன்ஜின் முன்பக்கம் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன்களை வழங்கும் அமைப்பு கொண்டது. மேலும் இதில் பொருத்தப்பட்ட வேரியபிள் வேல்யூ சிஸ்டம் ஒட்டு மொத்த திறன் மற்றும் காரின் ஒட்டு மொத்த திறன், இன்ஜின் கம்பஷன்கண்ட்ரோல், பவர் குறைவதை தடுப்பது, இன்ஜினிற்குள் ஏற்படும் உராய்வு ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது.

வால்வோ நிறுவனத்தின் புதிய டி5 டர்போசார்ஜ் இன்ஜின் உடன் கார்கள் அறிமுகம்

மேலும் இந்த காரில் பொருத்தப்பட்ட சிங்கிள் க்ரோல் டர்போ சார்ஜர் எக்ஸன் வழியாக வெளியேறும் புகையில் அதிகமாக காற்றை இணைத்து விரைவாக வெளியேற வழி வகுக்கிறது. இதில் இணைக்கப்படும் காற்று டிரைவர் ஆக்ஸிலரேட்டரை அழுத்தும் அழுத்தத்திற்கு ஏற்ப மாற்றப்படுகிறது.

வால்வோ நிறுவனத்தின் புதிய டி5 டர்போசார்ஜ் இன்ஜின் உடன் கார்கள் அறிமுகம்

வால்வோ எஸ் 90 காரில் டி5 இன்ஜின் தற்போது ஒரு ஆப்ஷனாக அதன் என்ட்ரி லெவல் மாடல்களான மொமெண்டம், மற்றும் மொமெண்டம் ப்ரோ ஆகிய மாடல்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த காரில் டி4 பெட்ரோல், மற்றும் D4 மற்றும் D5 பவர் பிளஸ் டீசல், மற்றும் T8 டுவின் இன்ஜின் பெட்ரோல் எலெக்டரிக் ஹைபிரிட் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo Adds T5 Petrol Option To S90, V90 And XC90. Read in Tamil
Story first published: Wednesday, August 8, 2018, 18:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X