நான் வளர்கிறேனே மம்மி... இந்தியாவில் வால்வோ கார்கள் விற்பனை கிடுகிடுவென உயர்வு...

2018ம் ஆண்டின் முதல் பாதியில், வால்வோ நிறுவனத்தின் கார்களின் விற்பனை, 33 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கான காரணங்கள் குறித்த தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

By Arun

2018ம் ஆண்டின் முதல் பாதி முடிவடைந்து விட்டது. இந்த ஆண்டின் முதல் பாதியில், இந்தியாவில் விற்பனையான கார்களின் புள்ளி விபரங்கள் வரிசையாக வெளியாகி வருகின்றன. இதில், லக்ஸரி கார் நிறுவனங்களான பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் ஆகியவை வளர்ச்சியை சந்தித்துள்ளன.

நான் வளர்கிறேனே மம்மி... இந்தியாவில் வால்வோ கார்கள் விற்பனை கிடுகிடுவென உயர்வு...

ஜெர்மனி நிறுவனங்களான பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் ஆகியவற்றை போன்று சுவீடனை சேர்ந்த வால்வோ நிறுவனத்தின் கார்களின் விற்பனையும் இந்தியாவில் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி-ஜுன் வரையிலான முதல் அரையாண்டில் 1,242 கார்களை வால்வோ நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

நான் வளர்கிறேனே மம்மி... இந்தியாவில் வால்வோ கார்கள் விற்பனை கிடுகிடுவென உயர்வு...

இது கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி-ஜுன் வரையிலான முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 33 சதவீத வளர்ச்சியாகும். மொத்தம் விற்பனையான 1,242 கார்களில் புதிய XC60 மாடலின் விற்பனை மட்டும் 25 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் வளர்கிறேனே மம்மி... இந்தியாவில் வால்வோ கார்கள் விற்பனை கிடுகிடுவென உயர்வு...

வால்வோ கார்களின் விற்பனை வளர்ச்சி கிடுகிடுவென அதிகரிக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. S90 மாடலை இந்தியாவில் அசெம்பிள் செய்வது, சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் விரிவாக்கம் என இதற்கான காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

நான் வளர்கிறேனே மம்மி... இந்தியாவில் வால்வோ கார்கள் விற்பனை கிடுகிடுவென உயர்வு...

வால்வோ நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் XC40 (எக்ஸ்சி 40) கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த கார் R-Design என்ற ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டும் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது.

நான் வளர்கிறேனே மம்மி... இந்தியாவில் வால்வோ கார்கள் விற்பனை கிடுகிடுவென உயர்வு...

ஆனால் சிகப்பு, வெள்ளை மற்றும் நீலம் என மூன்று வண்ணங்களில் இந்த கார் விற்பனையாகி வருகிறது. 39.9 லட்ச ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் வால்வோ XC40 கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நான் வளர்கிறேனே மம்மி... இந்தியாவில் வால்வோ கார்கள் விற்பனை கிடுகிடுவென உயர்வு...

2018ம் ஆண்டின் 2வது பாதியிலும் இந்த உத்வேகத்தை தொடர வேண்டும் என விரும்புவதாக வால்வோ கார் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சார்லஸ் ஃப்ரம்ப் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட XC40 புதிய வாடிக்கையாளர் கட்டமைப்பை உருவாக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நான் வளர்கிறேனே மம்மி... இந்தியாவில் வால்வோ கார்கள் விற்பனை கிடுகிடுவென உயர்வு...

இந்தியாவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆனபோதிலும், வால்வோ நிறுவனம் இங்கு கார்களை அசெம்பிள் செய்யாமல்தான் இருந்து வந்தது. எனினும் 2017ம் ஆண்டில்தான் வால்வோ நிறுவனம் இங்கு கார்களை அசெம்பிள் செய்ய தொடங்கியது.

நான் வளர்கிறேனே மம்மி... இந்தியாவில் வால்வோ கார்கள் விற்பனை கிடுகிடுவென உயர்வு...

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள வால்வோ டிரக்ஸ் பிளாண்டில், அந்நிறுவனம் கார்களை அசெம்பிள் செய்கிறது. XC90தான் முதன் முதலாக இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்ட வால்வோ கார். நடப்பாண்டில் S90 செடான் கார்களை இங்கு அசெம்பிள் செய்ய தொடங்கியுள்ளது வால்வோ.

நான் வளர்கிறேனே மம்மி... இந்தியாவில் வால்வோ கார்கள் விற்பனை கிடுகிடுவென உயர்வு...

இந்த வகையில் XC60 காரும் மிக விரைவாக இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுவதால், அதன் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நான் வளர்கிறேனே மம்மி... இந்தியாவில் வால்வோ கார்கள் விற்பனை கிடுகிடுவென உயர்வு...

இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்ட ஹைபிரிட் காரை 2020ம் ஆண்டில் லான்ச் செய்யவும் வால்வோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்பின் ஓராண்டு கழித்து, அதாவது 2021ம் ஆண்டில் எலக்ட்ரிக் காரை களமிறக்கவும் வால்வோ முயன்று வருகிறது.

Most Read Articles
மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo car sales increased by 33 percent in india. Read in tamil
Story first published: Monday, July 9, 2018, 19:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X