வால்வோ கார் நிறுவனத்துடன் கைகோர்க்கிறது கூகுள்

வால்வோ நிறுவனம் கூகுள் நிறுவனத்துன் இனைந்து தனது புதிய ஆண்ட்ராய்டு இன்போடெயின்மெண்டை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வால்வோ மற்றும் கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது.

By Balasubramanian

வால்வோ கார் வாடிக்கையாளர்கள் தங்கள் காரில் பல தகவல்களை பெற கூகுள் மற்றும் வால்வோ நிறுவனங்கள் தயாரித்த ஆப்ஸ்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆப்ஸ்களை பயன்படுத்த வசதியாக ஆண்ட்ராய்டு இன்போடெயிண்ட்மெண்ட் சிஸ்டத்தை இனி தயார் செய்யும் கார்களில் பொருத்த முடிவு செய்துள்ளது.

வால்வோ கார் நிறுவனத்துடன் கைகோர்க்கிறது கூகுள்

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கான தேவைகள், ஆஃபர்களை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். மேலும் தகவல்களை மேம்படுத்திகொண்டே இருக்க முடியும்.

வால்வோ கார் நிறுவனத்துடன் கைகோர்க்கிறது கூகுள்

இதுகுறித்து வால்வோ நிறுவன மூத்த தலைவர் ஹென்ரிக் கிரீன் கூறுகையில் : " வால்வோவுடன் கூகுளை இணைப்பது மூலம் பெரும் மாற்றம் ஏற்படும் என நம்புகிறோம். விரைவில் வால்வோ டிரைவர்கள் நேரடியாக அவர்களுக்கு தேவையான வாகன பயணத்தை எளிதாக்கும் பல ஆப்ஸ்களை கையாள முடியும். " என கூறினார்.

வால்வோ கார் நிறுவனத்துடன் கைகோர்க்கிறது கூகுள்

மேலும் வால்வோ காரின் அடுத்த மாடல்களில் கூகுள் மேப், இணைப்படுகிறது. இது லைவ் டிராபிக் டேட்டாவுடன் வருவதால் டிராபிக்கான இடங்கள் குறித்து டிரைவருக்கு முன்பே தகவல் அனுப்ப முடியும். மேலும் கூகுள் மேப்பே அவருக்கு அந்த ரூட்டிற்கு பதிலாக வேறு ஒரு ரூட்டை பரிந்துரை செய்யும்.

வால்வோ கார் நிறுவனத்துடன் கைகோர்க்கிறது கூகுள்

வால்வோ மற்றும் கூகுள் நிறுவனத்தின் இணைப்பு குறித்து கடந்த 2017ம் ஆண்டே பேச்சுவார்த்தை நடந்தது. தற்போது இணைப்பு உறுதியாகியுள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் முழு ஆண்ட்ராய்ட் வசதியுடனான கார் விற்பனைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

வால்வோ கார் நிறுவனத்துடன் கைகோர்க்கிறது கூகுள்

தற்போது வால்வோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்க இன்னும் அதிகமாக உதவ வேறு நிறுவனங்களின் சேவையையும் நாடியுள்ளது. மேலும் தனது நிறுவனங்களில் சாப்ட்வேர் இன்ஜினியர்களை கொண்டு பல பயனுள்ள ஆப்ஸ்களை உருவாக்கும் பணியிலும் இறங்கியுள்ளது.

வால்வோ கார் நிறுவனத்துடன் கைகோர்க்கிறது கூகுள்

இந்த இண்போடெயின்மென்ட் சிஸ்டம் செயல்பாட்டிற்கு வந்தால் இந்த சிஸ்டத்திற்காவே காரின் விற்பனையும் அதிகரிக்க கூடும்.

Most Read Articles
மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo Cars to embed Google Assistant, Google Play Store and Google Maps in next-generation infotainment system. Read in Tamil
Story first published: Tuesday, May 8, 2018, 18:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X