மாஸ் ஓபனிங் கிடைத்ததால் வால்வோ XC 40 கார் விலை திடீர் உயர்வு.. 2 புதிய வேரியண்ட்களும் அறிமுகம்..

புதிதாக லான்ச் செய்யப்பட்ட வால்வோ எக்ஸ்சி 40 காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், அதன் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் எக்ஸ்சி 40 காரின், 2 புதிய வேரியண்ட்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

By Arun

புதிதாக லான்ச் செய்யப்பட்ட வால்வோ எக்ஸ்சி 40 காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், அதன் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் எக்ஸ்சி 40 காரின், 2 புதிய வேரியண்ட்களையும் வால்வோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பலத்த வரவேற்பு காரணமாக வால்வோ XC 40 கார் விலை திடீர் உயர்வு.. 2 புதிய வேரியண்ட்களும் அறிமுகம்..

சுவீடன் நாட்டை சேர்ந்த வால்வோ நிறுவனம், இந்தியாவில் லக்ஸரி கார்களை விற்பனை செய்து வருகிறது. வால்வோ கார்களில் காணப்படும் உச்சகட்ட பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக, இந்தியாவில் அதன் விற்பனை கிடுகிடுவென அதிகரித்து கொண்டே வருகிறது.

பலத்த வரவேற்பு காரணமாக வால்வோ XC 40 கார் விலை திடீர் உயர்வு.. 2 புதிய வேரியண்ட்களும் அறிமுகம்..

2018ம் ஆண்டின் முதல் பாதியில் (ஜனவரி-ஜூன்), வால்வோ நிறுவனம் இந்தியாவில், 1,242 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 33 சதவீத வளர்ச்சியாகும். முன்னெப்போதும் வால்வோ நிறுவனம் இந்தியாவில் இவ்வளவு கார்களை விற்பனை செய்தது இல்லை.

பலத்த வரவேற்பு காரணமாக வால்வோ XC 40 கார் விலை திடீர் உயர்வு.. 2 புதிய வேரியண்ட்களும் அறிமுகம்..

இந்த சூழலில், காம்பேக்ட் எஸ்யூவி வகை மாடலான புதிய எக்ஸ்சி 40 (XC 40) காரை, வால்வோ நிறுவனம் கடந்த ஜூலை 4ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த காருக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. அனைத்து வால்வோ டீலர்ஷிப்களிலும், எக்ஸ்சி 40 காருக்கான புக்கிங் குவிந்து வருகிறது.

பலத்த வரவேற்பு காரணமாக வால்வோ XC 40 கார் விலை திடீர் உயர்வு.. 2 புதிய வேரியண்ட்களும் அறிமுகம்..

வால்வோ நிறுவனம் எக்ஸ்சி 40 காரில், R-Design என்ற ஒரே ஒரு வேரியண்ட்டை மட்டுமே அறிமுகம் செய்திருந்தது. இதன் விலை 39.9 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் எக்ஸ்சி 40 காரின் R-Design வேரியண்ட்டுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பலத்த வரவேற்பு காரணமாக வால்வோ XC 40 கார் விலை திடீர் உயர்வு.. 2 புதிய வேரியண்ட்களும் அறிமுகம்..

இதனால் எக்ஸ்சி 40 காரின் R-Design வேரியண்ட்டின் விலையை 39.9 லட்ச ரூபாயில் இருந்து 42.9 லட்ச ரூபாயாக உயர்த்தி, அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது வால்வோ நிறுவனம். முதல் 200 கார்களுக்கான ஆர்டரை வால்வோ நிறுவனம் பெற்ற பிறகு விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பலத்த வரவேற்பு காரணமாக வால்வோ XC 40 கார் விலை திடீர் உயர்வு.. 2 புதிய வேரியண்ட்களும் அறிமுகம்..

அத்துடன் எக்ஸ்சி 40 காரின், 2 புதிய வேரியண்ட்களையும் வால்வோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. D4 மொமண்டம், D4 இன்ஸ்கிரிப்ஷன் என்ற அந்த 2 புதிய வேரியண்ட்களுக்கான புக்கிங்களும் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது.

பலத்த வரவேற்பு காரணமாக வால்வோ XC 40 கார் விலை திடீர் உயர்வு.. 2 புதிய வேரியண்ட்களும் அறிமுகம்..

எக்ஸ்சி 40 R-Design வேரியண்ட்டின் விலை 42.9 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், D4 மொமண்டம் வேரியண்ட் 39.9 லட்ச ரூபாய், D4 இன்ஸ்கிரிப்ஷன் வேரியண்ட் 43.9 லட்ச ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த வரவேற்பு காரணமாக வால்வோ XC 40 கார் விலை திடீர் உயர்வு.. 2 புதிய வேரியண்ட்களும் அறிமுகம்..

2 புதிய வேரியண்ட்களுக்கான புக்கிங் தற்போது தொடங்கப்பட்டு விட்டது. ஆனால் டெலிவரி இந்த மாத இறுதியில்தான் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 3 வேரியண்ட்களிலும், 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது.

பலத்த வரவேற்பு காரணமாக வால்வோ XC 40 கார் விலை திடீர் உயர்வு.. 2 புதிய வேரியண்ட்களும் அறிமுகம்..

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 190 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லது. இதில், 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. எக்ஸ்சி 40 காரின் விற்பனை இந்தியாவில் சூடுபிடித்துள்ளதால், வால்வோ நிறுவனம் உற்சாகமடைந்துள்ளது.

பலத்த வரவேற்பு காரணமாக வால்வோ XC 40 கார் விலை திடீர் உயர்வு.. 2 புதிய வேரியண்ட்களும் அறிமுகம்..

இதுகுறித்து வால்வோ கார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சார்லெஸ் ப்ரம்ப் கூறுகையில், ''புதிதாக லான்ச் செய்யப்பட்ட எக்ஸ்சி 40 காருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. இது எங்களுக்கான நல்ல தொடக்கம்'' என்றார்.

Most Read Articles
மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo XC 40 Car Price Increased: Now Two More Variants also Available. Read in tamil
Story first published: Tuesday, July 17, 2018, 11:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X