மாயம் இல்லே.. மந்திரம் இல்லே.. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் டூவீலராக மாறிய அதிசயம்!

By Arun

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் காரின் 2 சக்கரங்களை மட்டும் பயன்படுத்தி, 1 மைல் தூரத்தை மிக வேகமாக கடந்த டிரைவர் என்ற சாதனையை டெர்ரி கிராண்ட் என்பவர் படைத்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாயம் இல்லே.. மந்திரம் இல்லே.. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் டூவீலராக மாறிய அதிசயம்!

இங்கிலாந்து நாட்டின் மேற்கு சசக்ஸ் பகுதியில் உள்ள குட்வுட் ஹவுஸில், குட்வுட் ஃபெஸ்டிவல் ஆப் ஸ்பீடு (Goodwood Festival of Speed) ஈவெண்ட் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் கடைசி அல்லது ஜூலை தொடக்கத்தில், குட்வுட் ஃபெஸ்டிவல் ஆப் ஸ்பீடு நடைபெறுவது வழக்கம்.

மாயம் இல்லே.. மந்திரம் இல்லே.. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் டூவீலராக மாறிய அதிசயம்!

இதில் அரங்கேறும் கார் ஸ்டண்ட்கள் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் இருக்கின்றன. இதனால் குட்வுட் ஃபெஸ்டிவல் ஆப் ஸ்பீடு ஈவெண்டிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே செல்கிறது.

மாயம் இல்லே.. மந்திரம் இல்லே.. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் டூவீலராக மாறிய அதிசயம்!

இதன்படி 2018ம் ஆண்டுக்கான குட்வுட் ஃபெஸ்டிவல் ஆப் ஸ்பீடு ஈவெண்ட், கடந்த 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற்றது. இதில், புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் (Range Rover Sport SVR) கார் மூலமாக புதிய உலக சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது.

மாயம் இல்லே.. மந்திரம் இல்லே.. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் டூவீலராக மாறிய அதிசயம்!

வெறும் இரண்டு சக்கரங்களின் மூலமாக மட்டும் பயணித்து 1 மைல் தூரத்தை மிக வேகமாக கடந்த கார் என்ற பெருமையை புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் கார் பெற்றுள்ளது. இந்த சாதனையை ஸ்டண்ட் டிரைவரான டெர்ரி கிராண்ட் என்பவர் படைத்துள்ளார்.

மாயம் இல்லே.. மந்திரம் இல்லே.. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் டூவீலராக மாறிய அதிசயம்!

மிகவும் புகழ்பெற்ற ஸ்டண்ட் டிரைவரான டெர்ரி கிராண்ட், புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் காரை 2 சக்கரங்களின் மூலமாக மட்டும் இயக்கி, 1 மைல் தூரத்தை வெறும் 2 நிமிடம் 24 வினாடிகளில் கடந்துள்ளார். அவரின் சாதனை வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இதற்கு முன்பாக 2 சக்கரங்களின் மூலமாக 1 மைல் தூரத்தை 2 நிமிடம் 55 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்து வந்தது. 2011ம் ஆண்டு நடைபெற்ற குட்வுட் ஃபெஸ்டிவல் ஆப் ஸ்பீடு ஈவெண்டில்தான் இந்த சாதனை படைக்கப்பட்டிருந்தது.

மாயம் இல்லே.. மந்திரம் இல்லே.. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் டூவீலராக மாறிய அதிசயம்!

அந்த சாதனையை படைத்தது வேறு யாரும் அல்ல. தற்போது சாதனை படைத்துள்ள அதே டெர்ரி கிராண்ட்தான் அந்த சாதனையையும் படைத்திருந்தார். அதாவது தனது முந்தைய சாதனையை தற்போது அவரே முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

மாயம் இல்லே.. மந்திரம் இல்லே.. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் டூவீலராக மாறிய அதிசயம்!

முந்தைய சாதனையுடன் ஒப்பிடுகையில், தற்போது 31 வினாடிகளுக்கு முன்னதாகவே டெர்ரி கிராண்ட் இலக்கை எட்டிவிட்டார். இதுதவிர மேலும் சுமார் 25 கின்னஸ் உலக சாதனைகளை தற்போது கைவசம் வைத்திருக்கும் அற்புதமான டிரைவர்தான் டெர்ரி கிராண்ட்.

மாயம் இல்லே.. மந்திரம் இல்லே.. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் டூவீலராக மாறிய அதிசயம்!

அவர் எவ்வளவு கவனமாக காரை ஓட்டுகிறார்? என்பதை அவரது முகத்தில் பார்க்க முடிகிறது. டெர்ரி கிராண்ட் அடுத்த முறை ஒரு சக்கரத்தின் மூலமாக காரை ஓட்டி வேறு ஏதேனும் உலக சாதனை படைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!!

மாயம் இல்லே.. மந்திரம் இல்லே.. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் டூவீலராக மாறிய அதிசயம்!

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் கார் மிகவும் புகழ்பெற்ற பெர்பார்மென்ஸ் எஸ்யூவி வகை கார்களில் ஒன்று. இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து 60 எம்பிஎச் (Miles per hour) என்ற வேகத்தை வெறும் 4.3 வினாடிகளிலேயே எட்டி விடும் திறன் வாய்ந்தது.

மாயம் இல்லே.. மந்திரம் இல்லே.. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் டூவீலராக மாறிய அதிசயம்!

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் காரின் டாப் ஸ்பீடு 174 எம்பிஎச் (இந்த திறன்கள் அனைத்தும் 4 சக்கரங்களும் தரையில் இருக்கும்போது!). சாதனை படைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் காரில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டிருந்தது.

மாயம் இல்லே.. மந்திரம் இல்லே.. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் டூவீலராக மாறிய அதிசயம்!

அதாவது தரையில் இருந்த இரண்டு சக்கரங்களுக்கு அதிக அளவிலான பவர் செல்லும் வகையில் காரில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதன்மூலம் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் காரை டெர்ரி கிராண்ட் கிட்டத்தட்ட டூவீலராக மாற்றி விட்டார் என்றே சொல்லலாம்!

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. ஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ! லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது
  2. 8 ஆயிரம் உயிர்களை காவு கொடுத்து விட்டு சேலம்-சென்னை 8 வழி சாலையா? அதிர்ச்சியளிக்கும் புள்ளி விபரம்
  3. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விலை 3 சதவீதம் ஏற்றம்..!
Most Read Articles

மேலும்... #ரேஞ்ச் ரோவர்
English summary
Watch Range Rover Sport SVR Car Run On Two Wheels. Read in tamil
Story first published: Wednesday, July 18, 2018, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X