உங்கள் வருமானத்திற்கு ஏற்ற காரை தேர்வு செய்வதில் குழப்பமா? - காரை எப்படி தேர்வு செய்வது ?

By Balasubramanian

இன்று எல்லோருக்கும் கார் வாங்கும் மனநிலை வந்து விட்டது. கார்கள் சமூகத்தின் அந்தஸ்தாக பார்க்கப்படுவதால் பலர் எவ்வளவு கஷ்டபட்டாவது ஒரு காரை வாங்க வேண்டும் என்று நினைத்து வருகின்றனர். சிலரது வாழ்க்கையின் குறிக்கோளே ஒரு கார் வாங்குவதாகதான் இருக்கிறது.

உங்கள் வருமானத்திற்கு ஏற்ற காரை தேர்வு செய்வதில் குழப்பமா? - வாருங்கள் காரை தேர்வு செய்வது எப்படி என பார்க்கலாம்

இப்படியாக சமூக அஸ்தந்திற்கு தகுதியாக கார் பார்க்கப்படுவதால் இன்று பலர் தங்கள் வருமானத்தை மிஞ்சிய அளவில் கார்களை லோன்கள் மூலம் வாங்கி அதை அடைக்க முடியாமல் திணறி அந்த காருக்காக மற்ற அவசியமான செலவுகளை கூட தவிர்த்து சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர்.

அதை நீங்கள் பயன்படுத்தினாலும் அதற்கான ஒரு பராமரிப்பு செலவும் உங்களுக்கு ஆகும், அதே போல அதை பயன்படுத்தவே இல்லை என்றாலும் அதற்கான பராமரிப்பு செலவு என்று ஒரு தொகை ஆகும். ஆக கார், பைக் போன்ற வாகனங்கள் நமது தேவை, நமது வருமானம் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு வாங்க வேண்டும்.

உங்கள் வருமானத்திற்கு ஏற்ற காரை தேர்வு செய்வதில் குழப்பமா? - வாருங்கள் காரை தேர்வு செய்வது எப்படி என பார்க்கலாம்

பலருக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினால் கார் வாங்கலாம், எவ்வளவு சம்பளத்திற்கு எவ்வளவு தொகையில் கார் வாங்கலாம் என பல கேள்விகள் உள்ளது.

உங்கள் வருமானத்திற்கு ஏற்ற காரை தேர்வு செய்வதில் குழப்பமா? - வாருங்கள் காரை தேர்வு செய்வது எப்படி என பார்க்கலாம்

ஒருவர் எந்த காரை வாங்கலாம் என்பது அவர் சம்பளத்தை மட்டும் அல்ல அவருக்கு இருக்கும் செலவுகளையும் கணக்கில் கொண்டே இருக்கிறது. குடும்பத்தினருக்கு பணம் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் இல்லாத ஒருவர் கார் வாங்கினால் அதே சம்பளம் வாங்கும் ஒரு குடும்பஸ்தரால் அந்த காரை வாங்க முடியாது.

Most Read Article: கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

உங்கள் வருமானத்திற்கு ஏற்ற காரை தேர்வு செய்வதில் குழப்பமா? - வாருங்கள் காரை தேர்வு செய்வது எப்படி என பார்க்கலாம்

அதே நேரத்தில் பலர் தங்கள் வருமானத்தை மிஞ்சிய காரை வாங்கி அதை பாரமரிக்க முடியாமல் கடைசியில் நஷ்டமாகி விடுவார்கள். குறிப்பாக ஒருவர் மாதம் 30 ஆயிரம் வருமானம் உள்ள ஒருவருக்கு ஆல்டோ அல்லது வேகன்-ஆர் கார்களை வாங்கினால் அவரது சம்பளத்தை வைத்து அந்த காருக்கான பராமரிப்பு செலவை சமாளிக்கலாம் என வைத்துக்கொள்வோம்.

உங்கள் வருமானத்திற்கு ஏற்ற காரை தேர்வு செய்வதில் குழப்பமா? - வாருங்கள் காரை தேர்வு செய்வது எப்படி என பார்க்கலாம்

ஆனால் அவர் ஸிப்ட் காரை அவர் வாங்கினால் அவரால் அதை சமாளிப்பது சிரமம், அதே நேரத்தில் அந்த கார் சிறிய விபத்தில் சிக்கினால் கூட அதற்கு ஆகும் செலவை சமாளிக்க அவர் மீண்டும் ஒரு கடன் வாங்க வேண்டியது வரும். அந்தவகையில் மாதம் எவ்வளவு வருமானம் உள்ளவர்கள் எந்த ரக கார்களை வாங்கலாம் என்பதை கீழே பார்க்கலாம் வாருங்கள்.

உங்கள் வருமானத்திற்கு ஏற்ற காரை தேர்வு செய்வதில் குழப்பமா? - வாருங்கள் காரை தேர்வு செய்வது எப்படி என பார்க்கலாம்

15-20 ஆயிரம் வருமானம்

இந்தியாவில் ரூ 15 -20 ஆயிரம் வருமானம் உள்ளவர்கள் கார் வாங்கும் கனவை சில நாட்ளுக்கு ஒத்தி வைக்கலாம். அவர் சொந்த வீட்டில் வசித்துவந்தாலும் கார்களை பராமரிக்க ஆகும் செலவு அதிகமாக இருக்கும்.

உங்கள் வருமானத்திற்கு ஏற்ற காரை தேர்வு செய்வதில் குழப்பமா? - வாருங்கள் காரை தேர்வு செய்வது எப்படி என பார்க்கலாம்

20-30 ஆயிரம் வருமானம்

மாதம் 20-30 ஆயிரம் வருமானம் உள்ள நபர் ஆல்டோ, நானோ, மாருதி 800 போன்ற ரக கார்களை வாங்கலாம். அதையும் அவர்கள் லோனாக வாங்காமல் சிறிது காலம் பணத்தை சேர்ந்து வைத்து அதை கொண்டு கார் வாங்கலாம்.

உங்கள் வருமானத்திற்கு ஏற்ற காரை தேர்வு செய்வதில் குழப்பமா? - வாருங்கள் காரை தேர்வு செய்வது எப்படி என பார்க்கலாம்

30-40 ஆயிரம் வருமானம்

30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் வரை வருமானம் உள்ளவர்கள் வேகன்-ஆர், சான்டரோ, ஐ10, சென், போன்ற எண்ணற்ற கார்கள் உங்களுக்காக மார்கெட்டில் உள்ளது, அதில் உங்களுக்கு ஏற்ற காரை நீங்கள் தேர்வு செய்து அந்த கார்களை வாங்கலாம். அதற்கான பராமரிப்பு செலவை உங்களால் நீங்கள லோனில் வாங்கினாலும் தாங்கும் பொருளாதாரம் ஒரளவிற்கு இருக்கும்.

Most Read Article: சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய விதி.. கார், பைக் விலை உயர்ந்தது..

உங்கள் வருமானத்திற்கு ஏற்ற காரை தேர்வு செய்வதில் குழப்பமா? - வாருங்கள் காரை தேர்வு செய்வது எப்படி என பார்க்கலாம்

40-50 ஆயிரம் வருமானம்

மாதம் சுமார் 50 ஆயிரம் வரை சம்பளம் பெறுபவர்கள் பெட்ரோல் அல்லது டீசல் ரக ஸிப்ட் போன்ற கார்களை வாங்கலாம், அந்த காரை லோனாக அல்லாமல் பணமாக கொடுத்து வாங்கினால் மாதம் நீங்கள் இஎம்ஐ கட்டும் பணத்திற்கு இந்த காருக்கு பராமரிப்பு செலவை செய்து விடலாம்.

உங்கள் வருமானத்திற்கு ஏற்ற காரை தேர்வு செய்வதில் குழப்பமா? - வாருங்கள் காரை தேர்வு செய்வது எப்படி என பார்க்கலாம்

50-60 ஆயிரம் வருமானம்

மாருதி ஸிப்ட் கார் வாங்க ஏற்ற வருமானம் இது தான். மாதம் உங்களுக்கு இந்த வருமானத்தில் உள்ளவர்களுக்கு லோனில் கூட ஸிப்ட் காரை வாங்கலாம்.

உங்கள் வருமானத்திற்கு ஏற்ற காரை தேர்வு செய்வதில் குழப்பமா? - வாருங்கள் காரை தேர்வு செய்வது எப்படி என பார்க்கலாம்

60-70 ஆயிரம் வருமானம்

டிசையர், மான்ஸா, இன்டிகோ, ஸ்கோடா ஃபேபியா, ஃபோக்ஸ்வாகன் போலோ, போலிரோ என எண்ணற்ற கார் ஆப்ஷன்கள் இந்த ரக வருமானம் உடையவர்களுக்கு இருக்கிறது. இதில் உங்கள் தேவையை பூர்த்தி செய்யும் கார் எது என்பதை அறிந்த அந்த காரை தேர்ந்தேடுப்பது தான் சிறந்த யோசனையாக இருக்கும்.

உங்கள் வருமானத்திற்கு ஏற்ற காரை தேர்வு செய்வதில் குழப்பமா? - வாருங்கள் காரை தேர்வு செய்வது எப்படி என பார்க்கலாம்

70 ஆயிரம் - 1 லட்சம்

இந்த ரக வருமானம் உள்ளவர்களுக்கு காரை நீங்கள் லோனில் வாங்குவதை தவிருங்கள், முடிந்தளவு கார்களை முழுமையாக பணம் செலுத்தி வாங்க முடிவு செய்யுங்கள், கார்களுக்காக லோன் வாங்கி அதை அடைக்க மாத மாதம் உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை இழக்க வேண்டாம்.

உங்கள் வருமானத்திற்கு ஏற்ற காரை தேர்வு செய்வதில் குழப்பமா? - வாருங்கள் காரை தேர்வு செய்வது எப்படி என பார்க்கலாம்

உங்களுக்க கார் ஆப்ஷனாக வேன்டோ, லினியா, ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, எஸ்எக்ஸ் 4 ஆகிய கார்களை தேர்வு செய்யலாம் ஸ்கார்ப்பியோ, சபாரி, இன்னோவா போன்ற கார்களை வாங்கும் போது அதற்கான தேவை உங்களுக்கு இருக்கிறதா என்பதை மனிதில் கொண்டு காரை வாங்குங்கள்

உங்கள் வருமானத்திற்கு ஏற்ற காரை தேர்வு செய்வதில் குழப்பமா? - வாருங்கள் காரை தேர்வு செய்வது எப்படி என பார்க்கலாம்

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷன்கள் எல்லாம் எல்லோருக்கும் பொருந்தாது. ஒவ்வொருவருக்கும் அவரது வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் இருந்து கொண்டே தான் இருக்கும்.மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷன்கள் பொதுவானது தான். இந்த ஆப்ஷனை உங்கள் வருமானத்திற்கு ஏற்றபடி செயல்படுத்த முடியுமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

Most Read Article: சட்டத்தில் இல்லாத புதிய விதியை உருவாக்கி அபராதம் விதித்த போலீசார்.. வாகன ஓட்டிகளே உஷார்..

Most Read Articles

மேலும்... #எப்படி #how to
English summary
What car should brought with my income. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X