ஏன்னா இது வாலிப வயசு.. இந்தியர்கள் சீட் பெல்ட் அணிய மறுப்பதன் அதிர்ச்சிகரமான காரணங்கள்..

காரில் பயணிக்கும் அனைவரும், பாதுகாப்பு காரணங்களுக்காக சீட் பெல்ட் அணிவது அவசியம். ஆனால் இந்திய மக்கள் பலர், சீட் பெல்ட் அணிவதே இல்லை.

By Arun

காரில் பயணிக்கும் அனைவரும், பாதுகாப்பு காரணங்களுக்காக சீட் பெல்ட் அணிவது அவசியம். ஆனால் இந்திய மக்கள் பலர், சீட் பெல்ட் அணிவதே இல்லை. இதனால் இந்தியர்கள் ஏன் சீட் பெல்ட் அணிவதில்லை? என்பது தொடர்பான சர்வே ஒன்றை மாருதி சுசூகி நடத்தியது. ஆச்சரியமும், அதிர்ச்சியும் அளிக்கும் அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியர்கள் சீட் பெல்ட் அணிய மறுப்பதற்கு இதுதான் காரணம்.. அதிர்ச்சியளிக்கும் சர்வே முடிவுகள்..

கோழைகள் தாங்க சீட் பெல்ட் போடுவாங்க!

சீட் பெல்ட் அணிவது தங்களுக்கு நன்றாக இருக்காது என்று சிலர் நினைக்கின்றனர். சீட் பெல்ட் அணிவதால், அவர்கள் இமேஜ் பாதிக்கப்படுகிறதாம்! இதை விட ஆச்சரியம் அளிக்கும் வகையில், சீட் பெல்ட் அணிவதால், கோழைகள் போன்ற உணர்வு ஏற்படுவதாகவும் ஒரு சிலர் தெரிவித்துள்ளனர்.

இந்தியர்கள் சீட் பெல்ட் அணிய மறுப்பதற்கு இதுதான் காரணம்.. அதிர்ச்சியளிக்கும் சர்வே முடிவுகள்..

சர்வேயில் பங்கேற்றவர்களில் 40 சதவீதம் பேர் மேற்கண்ட பதில்களை கூறியுள்ளனர். நாங்கள் சீட் பெல்ட் அணிய தொடங்கி விட்டால், எங்களுடன் பயணிப்பவர்கள், எங்களை சாதுவான குணம் கொண்டவர்கள் என நினைத்து விடுகின்றனர் என அவர்கள் கூறியிருப்பது ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது.

இந்தியர்கள் சீட் பெல்ட் அணிய மறுப்பதற்கு இதுதான் காரணம்.. அதிர்ச்சியளிக்கும் சர்வே முடிவுகள்..

ஏன்னா இது வாலிப வயசு!

பொதுவாக இளம் தலைமுறையினர் சீட் பெல்ட் அணிவதே இல்லை. இது சர்வேயில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வேயில் கலந்து கொண்டவர்களில், சிங்கிளாக வசிக்கும் திருமணம் ஆகாத 80 சதவீதம் பேர், சீட் பெல்ட் அணிய மாட்டோம் என கூறியுள்ளனர்.

இந்தியர்கள் சீட் பெல்ட் அணிய மறுப்பதற்கு இதுதான் காரணம்.. அதிர்ச்சியளிக்கும் சர்வே முடிவுகள்..

திருமணம் ஆகி குழந்தைகள் உள்ள 66 சதவீதம் பேரும், திருமணம் ஆகி குழந்தைகள் இல்லாத 50 சதவீதம் பேரும் சீட் பெல்ட் அணிய மாட்டோம் என்ற பதிலையே தெரிவித்துள்ளனர். சீட் பெல்ட் அணிவதில் வயதும் முக்கிய பங்கு வகிப்பது இதன்மூலமாக தெரியவருகிறது.

இந்தியர்கள் சீட் பெல்ட் அணிய மறுப்பதற்கு இதுதான் காரணம்.. அதிர்ச்சியளிக்கும் சர்வே முடிவுகள்..

சட்டை கசங்குது பாஸ்!

சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 32 சதவீதம் பேர், சீட் பெல்ட் அணிவதால் தங்கள் உடை கசங்கி விடுகிறது என கூறியுள்ளனர்! உடை கசங்குகிறது என்ற இந்த ஒரே ஒரு காரணத்தால் மட்டுமே, நாங்கள் சீட் பெல்ட் அணிவது இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியர்கள் சீட் பெல்ட் அணிய மறுப்பதற்கு இதுதான் காரணம்.. அதிர்ச்சியளிக்கும் சர்வே முடிவுகள்..

உடை கசங்குகிறது என்பதுதான் உங்கள் பிரச்னை என்றால், சீட் பெல்ட் குஷன்கள், இதற்கு தீர்வாக இருக்கும். சீட் பெல்ட் குஷன்கள் சந்தையில் எளிதாக கிடைக்கின்றன. உடை கசங்குவதில் இருந்து, இந்த குஷன்கள் பாதுகாக்கும்.

இந்தியர்கள் சீட் பெல்ட் அணிய மறுப்பதற்கு இதுதான் காரணம்.. அதிர்ச்சியளிக்கும் சர்வே முடிவுகள்..

சட்டம் என்ன சொல்கிறது தெரியுமா?

இந்தியாவில் சீட் பெல்ட் அணிந்து ஒருவர் பயணிப்பதை பார்ப்பதே அரிது. அதிலும் குறிப்பாக, பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணிந்திருப்பதை பார்ப்பது என்பது அரிதிலும் அரிது. இந்தியாவின் சட்ட திட்டங்கள்தான் இதற்கு காரணம்.

இந்தியர்கள் சீட் பெல்ட் அணிய மறுப்பதற்கு இதுதான் காரணம்.. அதிர்ச்சியளிக்கும் சர்வே முடிவுகள்..

டிரைவர் மற்றும் கோ-டிரைவர் ஆகியோர் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்றுதான் இந்திய சட்டம் சொல்கிறது. எனவே சட்டத்தின் அடிப்படையில் பார்த்தால், பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணிய தேவையில்லைதான்.

இந்தியர்கள் சீட் பெல்ட் அணிய மறுப்பதற்கு இதுதான் காரணம்.. அதிர்ச்சியளிக்கும் சர்வே முடிவுகள்..

பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற விதி இந்திய சட்டத்தில் தற்போதைக்கு இல்லை. கடுமையான சட்டம் கொண்டு வந்தால் கூட, பொதுமக்களை பின்பற்ற வைப்பது கடினம். நிலைமை அப்படி இருக்கையில், சட்டமே கடுமையாக இல்லாதபோது என்ன செய்வது?

இந்தியர்கள் சீட் பெல்ட் அணிய மறுப்பதற்கு இதுதான் காரணம்.. அதிர்ச்சியளிக்கும் சர்வே முடிவுகள்..

இதற்காக நீங்கள் சீட் பெல்ட் அணியாமல் இருக்க வேண்டாம். ஏனெனில் விபத்து நேரிடும்போது, சீட் பெல்ட் அணியாதவர்கள், முன் இருக்கையிலோ அல்லது முன் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் மீதோ சென்று மோதி விடும் அபாயம் உள்ளது. இதனால் படுகாயங்களோ, உயிரிழப்போ ஏற்படலாம்.

இந்தியர்கள் சீட் பெல்ட் அணிய மறுப்பதற்கு இதுதான் காரணம்.. அதிர்ச்சியளிக்கும் சர்வே முடிவுகள்..

என்னமோ சொல்றாங்க.. எங்களுக்கு நம்பிக்கை இல்ல!

சர்வேயில் கலந்து கொண்டவர்களின் 34 சதவீதம் பேர், சீட் பெல்ட் தேவையற்றது என தெரிவித்துள்ளனர். அதாவது காயங்கள் ஏற்படுவதில் இருந்து சீட் பெல்ட் தங்களை பாதுகாக்கும் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லையாம்.

இந்தியர்கள் சீட் பெல்ட் அணிய மறுப்பதற்கு இதுதான் காரணம்.. அதிர்ச்சியளிக்கும் சர்வே முடிவுகள்..

உண்மையில் சீட் பெல்ட் எப்படி வேலை செய்கிறது? என்பதே அவர்களுக்கு தெரிவது இல்லை. குறிப்பாக பின் இருக்கையில் அமர்பவர்கள், சீட் பெல்ட் தங்களை எந்த விதத்திலும் காப்பாற்றாது என நினைக்கின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாததே அவர்களின் இத்தகைய எண்ணத்திற்கு காரணம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Why Indians Hate Using Seatbelts. Read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X