இங்கிலாந்து இளவரசர் ஹாரி பயன்படுத்திய "உலகின் மிக அழகான கார்" விரைவில் விற்பனைக்கு வருகிறது

இங்கிலாந்து இளவரசர் தனது திருமணத்திற்காக பயன்படுத்திய உலகிலேயே அழகான காரை ஜாக்குவார் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இந்த கார் வரும் 2020ம் ஆண்டு இந்திய மதிப்பில் சுமார் ரூ 2.84 கா

By Balasubramanian

இங்கிலாந்து இளவரசர் தனது திருமணத்திற்காக பயன்படுத்திய உலகிலேயே அழகான காரை ஜாக்குவார் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இந்த கார் வரும் 2020ம் ஆண்டு இந்திய மதிப்பில் சுமார் ரூ 2.84 காேடி மதிப்பில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் முற்றிலும் சுற்றுசுழலுக்கு கேடு விலைவிக்காத வகையில் ஜீரோ எமிஷன், இ-டைப் காராக தயாரிக்கப்படுகிறது.

இளவரசர் ஹாரி யபன்படுத்திய உலகின் அழகான கார் விற்பனைக்க வருகிறது.

இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கு கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. மேக்கன் மார்கெல் என்ற அமெரிக்க நடிகையை அவர் திருமணம் செய்தார். அவர்களது திருமணம் ராயல் வெட்டிங் ஆக நடந்தது. இவர்களது திருமணத்தில் இவர்கள் உடுத்தியிருந்த ஆடை, டயனாவின் மோதிரம், ஜாகுவார் நிறுவனம் தயாரித்த உலகின் மிக அழகான கார் ஆகியன குறிப்பிடத்தகுந்த அம்சங்களாக இடம் பெற்றிருந்தன.

இளவரசர் ஹாரி யபன்படுத்திய உலகின் அழகான கார் விற்பனைக்க வருகிறது.

இவர்கள் பயன்படுத்திய இந்த காரை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக தற்போது ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் அறிவித்துள்ளது. இது இ-டைப் கான்செப்ட் ஜீரோ ரக காராகும். இந்த கார் இயற்கையை மாசு படுத்தாத வண்ணம் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இளவரசர் ஹாரி யபன்படுத்திய உலகின் அழகான கார் விற்பனைக்க வருகிறது.

முதன்முதலாக இந்த கார் 1968ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. ஜாகுவார் நிறுவனம் இதை வின்டேஜ் பாடி ஸ்டைலில் கிளாசிக் ஸ்போர்ட்ஸ் கார் மாடலில் உருவாக்கியது. இந்த கார் உருவாக்கப்பட்டபோது இது உலகின் மிக அழகான காராக பார்க்கப்பட்டது.

இளவரசர் ஹாரி யபன்படுத்திய உலகின் அழகான கார் விற்பனைக்க வருகிறது.

1968ம் ஆண்டு இந்த காரை எரிபொருள் கொண்டு பயன்படும் காராவே வடிவமைத்திருந்தனர். தற்போது இந்த காரை இ-டைப் காராக ஜாக்குவாகர் நிறுவனம் மாற்றியுள்ளது. அதேநேரத்தின் இந்த காரை ஜாகுவார் நிறுவனம் காரின் வெளிப்புறத்தோற்றத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் காரின் இன்ஜின் மற்றும் ஸ்பேர் ஸ்பார்ட்ஸ்களை மட்டும் மாற்றி இதை வெளியிட உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இளவரசர் ஹாரி யபன்படுத்திய உலகின் அழகான கார் விற்பனைக்க வருகிறது.

இதில் ஜக்குவார் நிறுவனம் 1948-1992ம் ஆண்டுகளுக்கு இடைபட்ட காலத்தில் தயாரித்த எக்ஸ் கே என்ற இன்ஜினை இதில் பயன்படுத்தவுள்ளது. இந்த கார் 6-7 மணி நேரத்தில் முழு சார்ஜ் பெற்று சுமார் 273 கி.மீ. (170மைல்) வரை பயணிக்கும். மேலும் இந்த காரின் பிக்கப் என்பது 0-100 கி.மீ வேகத்தை சுமார் 5.5 நொட்டியில் தொட்டு விடும். இந்த காரின் மொத்த எடை 1360 கிலோவாகும்.

இளவரசர் ஹாரி யபன்படுத்திய உலகின் அழகான கார் விற்பனைக்க வருகிறது.

இந்த காரில் ஜாகுவார் நிறுவனம் பல புதிய தொழிற்நுட்பங்களை புகுத்தவுள்ளது. இதில் இம்ப்ரஷிவ் டச் ஸ்கிரின், ஸ்மார்ட் எல்.இ.டி ஹெட்லைட், ஆகிய அம்சங்கள இந்த கார் கொண்டுள்ளது.

இளவரசர் ஹாரி யபன்படுத்திய உலகின் அழகான கார் விற்பனைக்க வருகிறது.

இந்த காரில் 40 கி.வாட்ஸ் லித்தியம் இயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி மூலம் எலெக்ட்ரிக் இன்ஜின் பவர் பெற்று செயல்படும். இந்த இன்ஜின் எலெக்டரிக் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் பெருத்தப்பட்டுள்ளது புதிய பிராப்ஃசாப்ட் காருக்கான டிரைவ்வை வழங்குகிறது.

இளவரசர் ஹாரி யபன்படுத்திய உலகின் அழகான கார் விற்பனைக்க வருகிறது.

தற்போது ஜாகுவார் நிறுவனம் இதில் எத்தனை எண்ணிக்கையில் வாகனங்களை தயாரிக்கவுள்ளது. என்பது குறித்த தகவல் எதையும் வெளியிடவில்லை. இந்த கார் சுமார் 3,50,000 யூரோ அதாவது இன்றைய இந்திய மதிப்பில் ரூ 2.84 கோடி வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளவரசர் ஹாரி யபன்படுத்திய உலகின் அழகான கார் விற்பனைக்க வருகிறது.

இந்த கார் 1955,1956 மற்றும் 1957 ஆகிய ஆண்டுகளில் லே மேன்ஸ் கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற கார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார் வரும் 2020ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்...

Most Read Articles
மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Price harry's wedding car & most beautiful of the world hitting road soon. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X