“உங்கள் லைசென்ஸ் ரத்தாகும்..” வைரலாகும் வீடியோவிற்கு பின் உள்ள உண்மை நிலவரம்

தமிழகத்தில் சமூக வலைதளங்களில் சமீபமாக வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது அந்த வீடியோவில் வரும் ஒரு டிராபிக் இன்ஸ்பெக்டர் உச்ச நீதிமன்றம் சில விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் லைசன்ஸ்களை ரத்து செய்ய உத்த

தமிழகத்தில் சமூக வலைதளங்களில் சமீபமாக வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது அந்த வீடியோவில் வரும் ஒரு டிராபிக் இன்ஸ்பெக்டர் உச்ச நீதிமன்றம் சில விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் லைசன்ஸ்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

“உங்கள் லைசென்ஸ் ரத்தாகும்..” வைரலாகும் வீடியோவிற்கு பின் உள்ள உண்மை நிலவரம்

அந்த வீடியோவில் அவர் சுப்ரீம் கோர்ட் 6 விதமான விதிமுறைகளை மீறுபவர்களின் டிரைவிங் லைசன்ஸ்களை ரத்து செய்ய அதிகாரம் அளித்துள்ளதாகவும், அதை சாலை பாதுகாப்பு என்ற அமைப்பு மூலம் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

“உங்கள் லைசென்ஸ் ரத்தாகும்..” வைரலாகும் வீடியோவிற்கு பின் உள்ள உண்மை நிலவரம்

மேலும் அவர் தெரிவிக்கையில் மது போதையில் வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல், அதிக வேகத்தில் வாகனம் ஒட்டுதல் மற்றும் மூன்று பேர் ஒரே பைக்கில் செல்லுதல்,

“உங்கள் லைசென்ஸ் ரத்தாகும்..” வைரலாகும் வீடியோவிற்கு பின் உள்ள உண்மை நிலவரம்

சிக்னல்களை மதிக்காமல் செல்லுதல், அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்கள், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லுதல் உள்ளிட்ட விதிமுறை மீறல்களில் ஈடுபடுபவர்கள் லைசென்ஸை ரத்து செய்ய அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார்.

“உங்கள் லைசென்ஸ் ரத்தாகும்..” வைரலாகும் வீடியோவிற்கு பின் உள்ள உண்மை நிலவரம்

இந்த வீடியோ தற்போது தமிழகத்தில் அதிக அளவில் வைரலாகி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த வீடியோவை பார்த்து வருகின்றனர். பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற தளங்களில் இது அதிக அளவில் பரவி வருகிறது. அந்த வீடியோவை நீங்கள் கீழே பார்க்கலாம்

அந்த போலீசார் சொல்லுவது எல்லாம் உண்மையா? அப்படி லைசென்ஸை ரத்து செய்ய அவர்களுக்கு உரிமை உள்ளதா? அப்படி செய்தால் அவர்களால் எப்பொழுது மீண்டும் லைசன்ஸ் எடுக்க இயலும் என்பதை பற்றி கீழே படியுங்கள்.

“உங்கள் லைசென்ஸ் ரத்தாகும்..” வைரலாகும் வீடியோவிற்கு பின் உள்ள உண்மை நிலவரம்

இந்த வீடியோவில் இவர் சொல்வது போல் 6 அல்ல மொத்தம் 17 விதிமுறை மீறல்களில் வாகன ஓட்டிகளின் லைசன்ஸை ரத்து செய்யும் அதிகாரம் போலீசிற்கு இருக்கிறது. இந்த அதிகாரங்கள் முன்னரே இருந்தாலும் அவை சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

“உங்கள் லைசென்ஸ் ரத்தாகும்..” வைரலாகும் வீடியோவிற்கு பின் உள்ள உண்மை நிலவரம்

அதனால் சுப்ரீம் கோர்ட் ஒரு வழக்கில் அவர் குறிப்பிட்ட சில விதிமுறை மீறல்களை குறிப்பிட்டு அவற்றை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தியதே தவிர அதை கட்டாயம் செய்ய வேண்டும் என்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

“உங்கள் லைசென்ஸ் ரத்தாகும்..” வைரலாகும் வீடியோவிற்கு பின் உள்ள உண்மை நிலவரம்

லைசன்ஸை போலீசார் அவ்வளவு எளிதாக ரத்து செய்து விட முடியாது. அதற்கு சட்டப்படி சில விதிமுறை மீறல்களை செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு விதிமுறை மீறலுக்கும் ஒரு பாயிண்ட் உண்டு. 5 பாயிண்ட்களை ஒருவர் பெற்றால் மட்டுமே அவரது லைசன்ஸை ரத்து செய்ய அதிகாரம் உள்ளது.

“உங்கள் லைசென்ஸ் ரத்தாகும்..” வைரலாகும் வீடியோவிற்கு பின் உள்ள உண்மை நிலவரம்

ஒருவர் வாகன சோதனையில் பிடிபடும் போது அவர் செய்த மொத்த விதிமுறை மீறலை கணக்கிட்டு அந்த விதிமுறை மீறலுக்கான பாயிண்ட்டின் எண்ணிக்கை 5ஐ தாண்டும்பட்சத்தில் அவரது லைசன்ஸ் ரத்து செய்யப்படலாம்.

“உங்கள் லைசென்ஸ் ரத்தாகும்..” வைரலாகும் வீடியோவிற்கு பின் உள்ள உண்மை நிலவரம்

அதன் படி எந்தெந்த குற்றங்களுக்கு எத்தனை பாயிண்ட்கள் என பார்க்கலாம் வாருங்கள்

வேகமாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தி அதில் ஒருவருக்கு மரணம் ஏற்பட்டு அந்த வழக்கு 304 ஏ என்ற இந்திய தண்டனை சட்டப்படி நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5 பாயிண்ட்கள் வழங்கப்பட்டு லைசன்ஸ் ரத்து செய்யப்படலாம்.

“உங்கள் லைசென்ஸ் ரத்தாகும்..” வைரலாகும் வீடியோவிற்கு பின் உள்ள உண்மை நிலவரம்

செயின் பறிப்பு/ திருட்டு போன்ற குற்றங்களை செய்ய வாகனங்களை பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டால் அவர்களின் விதிமுறை மீறலுக்கு 5 பாயிண்ட் வழங்கி லைசன்ஸ் ரத்து செய்யப்படலாம்.

“உங்கள் லைசென்ஸ் ரத்தாகும்..” வைரலாகும் வீடியோவிற்கு பின் உள்ள உண்மை நிலவரம்

மது போதையில் பொது வாகனங்களால பஸ், கேப்ஸ், ஆட்டோக்களை இயக்கினால் அவர்களது லைசன்ஸையும் ரத்து செய்ய போலீசாருக்கு முழு அதிகாரம் உள்ளது.

“உங்கள் லைசென்ஸ் ரத்தாகும்..” வைரலாகும் வீடியோவிற்கு பின் உள்ள உண்மை நிலவரம்

மது போதையில் நான்கு சக்கர வாகனம், லாரி, சரக்கு வாகனம் உள்ளிட்டவைகளை இயக்கினால் அவர்களின் விதிமுறை மீறலுக்கு 4 பாயிண்ட்கள் வழங்கப்படும்.

“உங்கள் லைசென்ஸ் ரத்தாகும்..” வைரலாகும் வீடியோவிற்கு பின் உள்ள உண்மை நிலவரம்

மது போதையில் இரு சக்கர வாகனம் ஓட்டுதல், அல்லது சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுதல் போன்ற விதிமுறை மீறலுக்கு அவர்களுக்கு 3 பாயிண்ட்கள் வழங்கப்படும்.

“உங்கள் லைசென்ஸ் ரத்தாகும்..” வைரலாகும் வீடியோவிற்கு பின் உள்ள உண்மை நிலவரம்

சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்லுதல், ராங் சைடில் வாகனம் ஓட்டுதல், குறைந்தபட்ச வேகத்திற்கும் குறைவான வேகத்தில் செல்லுதல்,

“உங்கள் லைசென்ஸ் ரத்தாகும்..” வைரலாகும் வீடியோவிற்கு பின் உள்ள உண்மை நிலவரம்

ஆபத்து ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல், வாகனத்தை விட அகலமான அல்லது நீளமான பொருட்களை வாகனத்தில் ஏற்றி செல்லுதல்,

“உங்கள் லைசென்ஸ் ரத்தாகும்..” வைரலாகும் வீடியோவிற்கு பின் உள்ள உண்மை நிலவரம்

சிக்னல்களை மதிக்காமல் செல்லுதல், லேன்களை தொடர்ந்து மாற்றிக்கொண்ட செல்லுதல், பாதுகாப்பு இல்லாத வகையில் வாகனங்களை பராமரித்தல், காற்று மாசு மற்றும் சத்தங்களை சரியாக பராமரிக்காமல் இருத்தல்,

“உங்கள் லைசென்ஸ் ரத்தாகும்..” வைரலாகும் வீடியோவிற்கு பின் உள்ள உண்மை நிலவரம்

விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்தி வைத்தல், இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களை ஓட்டுதல், ஆபத்து நிறைந்த பொருட்களை தகுந்த ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லுதல், அதிக வேகமாக ஆபத்து விளைவிக்கும்படி ஓட்டுதல்

“உங்கள் லைசென்ஸ் ரத்தாகும்..” வைரலாகும் வீடியோவிற்கு பின் உள்ள உண்மை நிலவரம்

மேற்கண்ட விதிமுறை மீறலுக்கு இரண்டு பாய்ண்ட்கள் வழங்கப்படும். ஆட்டோவில் அனுமதிக்கப்பட்ட நபரை தவிர அதிக நபரை ஏற்றி சென்றால் அதற்கு 1 பாயிண்ட் வழங்கப்படும்.

“உங்கள் லைசென்ஸ் ரத்தாகும்..” வைரலாகும் வீடியோவிற்கு பின் உள்ள உண்மை நிலவரம்

மேலே சொன்ன பாயிண்ட்கள் எல்லாம் அந்த அந்த விதிமுறை மீறலுக்கான தண்டனைக்கு அப்பாற்பட்டது. நீங்கள் தொடர்ந்து விதிமுறைகளை மீறனாலோ அல்லது ஒரே முறையில் பல விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு அந்த பாயிண்ட்களின் எண்ணிக்கை 5ஐ தாண்டினாலோ அந்த விதிமுறைகளுக்கான தண்டனை போக உங்களது லைசன்ஸ் ரத்து செய்யப்படும்.

“உங்கள் லைசென்ஸ் ரத்தாகும்..” வைரலாகும் வீடியோவிற்கு பின் உள்ள உண்மை நிலவரம்

உங்கள் லைசன்ஸை ரத்து செய்த பின்பும் நீங்கள் தொடர்ந்து வாகனம் ஓட்டினால் அதற்காக உங்களுக்கு 3 மாதம் வரை சிறை தண்டனை கிடைக்கலாம்.. மேலும் நீங்கள் ஓட்டிய வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.

Most Read Articles
English summary
Your license will got cancelled if u do this.Read in Tamil
Story first published: Wednesday, October 17, 2018, 15:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X