லட்ச கணக்கான வாகனங்களின் ஆர்டிஓ பதிவு ரத்து: ஏன் தெரிஞ்சா கோபப்படுவீங்க... அதிர்ச்சி தகவல்!

1.6 லட்சம் வாகனங்களின் ஆர்டிஓ பதிவு ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

1.6 லட்சம் வாகனங்களின் பதிவு ரத்து: ஆர்டிஓ அதிரடியால் உரிமையாளர்கள் அதிர்ச்சி!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கட்சி மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து, போக்குவரத்து மற்றும் வாகனம் சார்ந்த துறையில் அதிரடி மாற்றங்களைக் மேற்கொண்டு வருகின்றது.

இதில், அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் மற்றும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை என எதுவாக இருந்தாலும் அது சாமானிய மக்களை பாதிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

1.6 லட்சம் வாகனங்களின் பதிவு ரத்து: ஆர்டிஓ அதிரடியால் உரிமையாளர்கள் அதிர்ச்சி!

ஒவ்வொரு புதிய திட்டத்தையும் அறிமுகம் செய்வதற்கு முன்பாக மத்திய அரசு பல காரணங்களைக் கூறுகின்றது. ஆனால், எந்த உள்நோக்கத்தில் அத்திட்டம் கொண்டு வரப்படுகின்றதோ, அது வெற்றியடையாமல் மாறாக பெரும் பின் விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் மாறிவிடுகின்றது.

இதற்கு ஓர் மிகப்பெரிய உதாரணம்தான் ஜிஎஸ்டி வரி விதிப்பு மற்றும் பண மதிப்பிழப்பு.

1.6 லட்சம் வாகனங்களின் பதிவு ரத்து: ஆர்டிஓ அதிரடியால் உரிமையாளர்கள் அதிர்ச்சி!

இதேபோன்று, அண்மையில் அமல்படுத்த புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தால், இந்தியா புதிய பின்விளைவைச் சந்திக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதேசமயம், ஒரு சில மாநிலங்களில் அதன் தாக்கம் வெளிவரவும் ஆரம்பித்துவிட்டது.

உயர்த்தப்பட்ட அபராதத்தின் காரணமாக, மக்கள் (வாகன ஓட்டிகள்) மத்தியில் அச்சம் கலந்த சூழல் நிலவுகின்றது. ஏனெனில், கடந்த 1ம் தேதிக்கு பின்னர் வெளிவரும் அபராதம்குறித்த செய்திகள் அனைத்தும் அதனை மேலும் அதிகரிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.

1.6 லட்சம் வாகனங்களின் பதிவு ரத்து: ஆர்டிஓ அதிரடியால் உரிமையாளர்கள் அதிர்ச்சி!

உதாரணமாக, இதுவரை நாட்டிலேயே யாரும் செலுத்தாத வகையிலான ஓர் அபராதத்தை ஒடிசா மாநில போக்குவரத்துத்துறை அதிகாரிகள், விதிமீறலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநருக்கு வழங்கியிருந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

1.6 லட்சம் வாகனங்களின் பதிவு ரத்து: ஆர்டிஓ அதிரடியால் உரிமையாளர்கள் அதிர்ச்சி!

அதேசமயம், ஒடிசா மாநில மக்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்காரணமாக, அம்மாநில மக்கள் தங்களுடைய சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவதில் இருந்து மாறி, பொது வாகனங்களை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் பின்விளைவாக, எரிபொருள் விற்பனை கடுமையாக சரிவைக் கண்டுள்ளது.

1.6 லட்சம் வாகனங்களின் பதிவு ரத்து: ஆர்டிஓ அதிரடியால் உரிமையாளர்கள் அதிர்ச்சி!

அவ்வாறு, நாள் ஒன்றிற்கு 16 லட்சம் லிட்டர் எரிபொருள் விற்பனை தடைப்பட்டுள்ளது. இதனால், அந்த மாநிலத்திற்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று, அண்மைக் காலங்களாக எரிபொருளால் இயங்கும் வாகனங்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் காரணமாக, இந்திய வாகனத்துறை அதலபாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளது.

1.6 லட்சம் வாகனங்களின் பதிவு ரத்து: ஆர்டிஓ அதிரடியால் உரிமையாளர்கள் அதிர்ச்சி!

இருந்தும் மத்திய அரசு அதன் முடிவில் எந்த மாற்றமும் இன்றி செயல்பட்டு வருகின்றது. அதற்கேற்ப வகையில், சில மாநில அரசுகளும் சில கடுமையான நடவடிக்கைகளை பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு எதிராக மேற்கொண்டு வருகின்றது.

1.6 லட்சம் வாகனங்களின் பதிவு ரத்து: ஆர்டிஓ அதிரடியால் உரிமையாளர்கள் அதிர்ச்சி!

இந்நிலையில், உத்தரபிரதேச அரசு 1.6 லட்சம் தனியார் வாகனங்களின் பதிவை ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை ஆட்டோ எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கையை, மறு பதிவு செய்ய தவறிய வாகனங்கள்மீது மட்டுமே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அம்மாநில வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

1.6 லட்சம் வாகனங்களின் பதிவு ரத்து: ஆர்டிஓ அதிரடியால் உரிமையாளர்கள் அதிர்ச்சி!

இதுகுறித்து ஆர்டிஓ அதிகாரி பஹிஉதின் கூறியதாவது, "மோட்டார் வாகன சட்டத்தின்படி, 15 ஆண்டுகள் பழைய வாகனம் மறு பதிவு செய்வது கட்டாயம். அத்தகைய 1.6 லட்சம் தனியார் வாகனங்களை மறு பதிவு செய்யுமாறு ஆர்டிஓ சார்பில் தகவல் அனுப்பப்பட்டது. ஆனால், இதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆகையால், மறுபதிவு செய்யாத வாகனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வாகனங்கள் சாலை இயக்கப்படுமேயானால், அது சட்ட விரோதமான ஒன்றாகும். ஆகவே, இந்த வாகனங்கள் சாலையில் காணப்படுமானால் அவற்றை உடனடியாக பறிமுதல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

1.6 லட்சம் வாகனங்களின் பதிவு ரத்து: ஆர்டிஓ அதிரடியால் உரிமையாளர்கள் அதிர்ச்சி!

மத்தியபிரதேச அரசின் இந்த அதிரடி உத்தரவு அம்மாநில வாகன ஓட்டிகளின் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்துள்ளது. 15 ஆண்டு கால பழைய வாகனங்கள் சுற்றுப்புற சூழலுக்கு கேடுவிளைப்பதுடன், பாதுகாப்பான பயணத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடலாம் என கூறப்படுகின்றது. இதன்காரணமாக, பழைய வாகனங்களை மறு பதிவு செய்ய மோட்டார் வாகன சட்டம் வலியுறுத்துகின்றது.

1.6 லட்சம் வாகனங்களின் பதிவு ரத்து: ஆர்டிஓ அதிரடியால் உரிமையாளர்கள் அதிர்ச்சி!

ஆகையால், மாநிலம் முழுவதும் இயங்கும் 15 ஆண்டுகளுக்கு அதிகமான வயதுடைய இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் பதிவை ரத்து செய்து மத்தியபிரதேச போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

1.6 லட்சம் வாகனங்களின் பதிவு ரத்து: ஆர்டிஓ அதிரடியால் உரிமையாளர்கள் அதிர்ச்சி!

இந்நிலையில், மேற்கு வங்கம் போக்குவரத்துத்துறையும், இதேமாதிரியான ஓர் அதிரடி நடவடிக்கை பழைய வாகனங்களுக்கு எதிராக மேற்கொள்ள அண்மையில் திட்டம் வகுத்தது. இதற்காக அது கையாண்ட பிரத்யேகமான நடவடிக்கைகுறித்த சுவாரஷ்ய தகவலை கீழே காணலாம்.

1.6 லட்சம் வாகனங்களின் பதிவு ரத்து: ஆர்டிஓ அதிரடியால் உரிமையாளர்கள் அதிர்ச்சி!

மேற்கு வங்க அரசு, அம்மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருக்கும் சரக்கு (வர்த்தக) வாகனங்களை பறிமுதல் செய்ய திட்டமிட்டது.

அதற்கேற்ப வகையில், முன்னதாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் இதுகுறித்து உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது. அதில், கொல்கத்தா பெருநகர பகுதியில் இயங்கும் வர்த்தக ரீதியிலான வாகனங்கள் 15 ஆண்டுகளைக் கடந்தும் பயன்பாட்டில் இருக்கக்கூடாது என கூறியிருந்தது.

1.6 லட்சம் வாகனங்களின் பதிவு ரத்து: ஆர்டிஓ அதிரடியால் உரிமையாளர்கள் அதிர்ச்சி!

ஆனாலும், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பழைய வணிக வாகனங்கள் இன்னும் நகரத்தில் பயன்பாட்டில் இருப்பதாக, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் (MoRTH) சமீபத்தில் அறிக்கைமூலம் தகவல் வெளியிட்டது.

1.6 லட்சம் வாகனங்களின் பதிவு ரத்து: ஆர்டிஓ அதிரடியால் உரிமையாளர்கள் அதிர்ச்சி!

இதைத்தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் போக்குவரத்துத்துறை மேற்கொண்ட தனிப்பட்ட ஆய்விலும், 15 ஆண்டுகளுக்கும் அதிகமான வருடங்கள் பழைய வாகனங்கள் கொல்கத்தாவில் பயன்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. அவை, கொல்கத்தா பெருநகரத்தின் உரிமமின்றியும், சிஎஃப் (certificate of fitness) சான்று மற்றும் பியுசி (pollution under control) இல்லாமலும் இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது.

1.6 லட்சம் வாகனங்களின் பதிவு ரத்து: ஆர்டிஓ அதிரடியால் உரிமையாளர்கள் அதிர்ச்சி!

இதுபோன்ற வாகனங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்மூலம் 15 ஆயிரம் வர்த்தக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதற்காக அமைக்கப்பட்ட டிஜிட்டல் செக்போஸ்ட்டுகளாலேயே இத்தனை எண்ணிக்கையிலான வாகனங்கள்பிடிபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1.6 லட்சம் வாகனங்களின் பதிவு ரத்து: ஆர்டிஓ அதிரடியால் உரிமையாளர்கள் அதிர்ச்சி!

மேலும், இந்த டிஜிட்டல் செக்போஸ்ட்டுகளை தற்போது வரை பயன்படுத்தி வருவதாக போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த செக்போஸ்ட்டுகள் மூலம், பழைய வாகனங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

1.6 லட்சம் வாகனங்களின் பதிவு ரத்து: ஆர்டிஓ அதிரடியால் உரிமையாளர்கள் அதிர்ச்சி!

ஆனால், நகரத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தி வருவதாக கூறப்படுகின்றது.

இந்த வாகனங்கள் கொல்கத்தா வீதிகளில் செல்வதைத் தடுக்காவிட்டால், மாசுபாட்டை எதிர்த்துப் போராடும் நகரத்தின் நம்பிக்கை இழக்கப்படும் என சுற்றுச்சூழல் நல ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

1.6 லட்சம் வாகனங்களின் பதிவு ரத்து: ஆர்டிஓ அதிரடியால் உரிமையாளர்கள் அதிர்ச்சி!

மேலும், இதுகுறித்து பசுமை ஆர்வலரான சுபாஷ் தத்தா கூறுகையில், "மாநிலத்தின் அனைத்து முக்கிய பகுதிகளிலும், டீசலால் இயங்கும் வாகனங்களே அதிகம் பயன்பாட்டில் இருக்கின்றன. மாநிலத்தில் இயங்கும் வாகனங்களில் 99 சதவீதம் டீசல் வாகனங்களாகவே இருக்கின்றன. இவை, காற்றில் நஞ்சை கலந்து வருகின்றன. இந்த வாகனங்கள் முறையான ஆவணங்களின்றி மாநிலத்தில் இயங்குவது, நிர்வாக சீர்கேட்டை விளக்கும் வகையில் அமைந்துள்ளது" என கருத்து தெரிவித்தார்.

1.6 லட்சம் வாகனங்களின் பதிவு ரத்து: ஆர்டிஓ அதிரடியால் உரிமையாளர்கள் அதிர்ச்சி!

மேலும், பேசிய அவர், "கடந்த 2015 மற்றும் 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடத்தப்பட்ட சாதாரண ஆய்வில், சுமார் 1,98,393 வாகனங்கள் அதிகளவு மாசை வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இந்த வாகனங்களிடம் இருந்து ரூ. 2.8 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. அதேசமயம், இந்த வாகனங்கள் அனைத்தும் 15 வருடங்களுக்கும் குறைவான வயதுடையவாகும். அப்படியானால், 15 ஆண்டுகளுக்கும் அதிகமாக பயன்பாட்டில் இருக்கும் வாகனங்கள் எந்த அளவிற்கு மாசினை வெளிப்படுத்தும்" என்ற கேள்வியையும் அவர் முன் வைத்தார்.

1.6 லட்சம் வாகனங்களின் பதிவு ரத்து: ஆர்டிஓ அதிரடியால் உரிமையாளர்கள் அதிர்ச்சி!

டிஜிட்டல் செக்போஸ்ட்டுகள் நவீன திறன்கொண்ட கேமிராக்கள்மூலம் இயங்குகின்றன. இவை, கொல்கத்தா பெருநகர பகுதியின் வாகன பதிவு டேட்டாபேஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆகையால், எந்தவொரு வாகனமும் நகரத்தில் நுழைய அல்லது வெளியேறும்போது, அவற்றின் நம்பர் பிளேட்டுகள் ஸ்கேன் செய்யப்படுகின்றது. அவ்வாறு கிடைக்கப்படும் தரவைக் கொண்டு வாகனம் புதியதா... அல்லது பழையதா என ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.

1.6 லட்சம் வாகனங்களின் பதிவு ரத்து: ஆர்டிஓ அதிரடியால் உரிமையாளர்கள் அதிர்ச்சி!

அவ்வாறு, ஆய்வு மெற்கொள்ளும்போது, அந்த வாகனம் 15 ஆண்டுகளுக்கும் பழமையானவையாக இருப்பின், உடனடியாக அவை பறிமுதல் செய்யப்பட்டு, அதன் உரிமையாளர்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கையானது வரும் காலகட்டத்தில் தீவிரப்படுத்த இருப்பதாகவும் அவர் கூறினார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
1.6 Lakh Vehicles Registration Suspends UP RTO. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X