சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி பற்றிய 8 முக்கிய விஷயங்கள்!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ குழுமம் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்தது. அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கும் புதிய எஸ்யூவி மாடல் வாடிக்கையாளர்களின் ஆவலைத் தூண்டி இருக்கிறது. இந்த எஸ்யூவி பற்றிய முக்கிய விஷயங்களை பார்க்கலாம்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி பற்றிய 8 முக்கிய விஷயங்கள்!

பிரம்மாண்ட மாடல்

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியானது 4,500 மிமீ நீளம் கொண்டது. நேரடி போட்டியாளராக கருதப்படும் ஜீப் காம்பஸ் எஸ்யூவியைவிட இது 105 மிமீ கூடுதல் நீளம் கொண்டது. ஆனால், டாடா ஹாரியர் எஸ்யூவியைவிட 98 மிமீ குறைவான நீளம் கொண்டதாக இருக்கும். எனினும், டாடா ஹாரியருக்கு அடுத்து வடிவில் பிரம்மாண்ட மாடல் இதுவாகத்தான் இருக்கும்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி பற்றிய 8 முக்கிய விஷயங்கள்!

வீல்பேஸ்

டாடா ஹாரியருக்கு அடுத்து இந்த எஸ்யூவிதான் மிக நீளமான வீல்பேஸ் கொண்ட மாடல். இந்த எஸ்யூவி 2,730 மிமீ வீல் பேஸ் பெற்றிருக்கிறது. எனவே, உட்புறத்தில் மிக சிறப்பான இடவசதியை அளிக்கும். அத்துடன், 230 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருப்பதும் கவனிக்த்தக்க விஷயமாக இருக்கும். இந்திய சாலைகளுக்கு ஏற்ற எஸ்யூவியாக இருக்கும்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி பற்றிய 8 முக்கிய விஷயங்கள்!

வடிவமைப்பு

பிரெஞ்சு கார்களுக்கே உரித்தான அந்த மொழுக்கையான டிசைன் தாத்பரியங்களை கார் முழுவதும் காண முடிகிறது. இந்த செக்மென்ட்டில் மிக வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட எஸ்யூவி மாடலாக இருக்கும். ஹெட்லைட், டெயில் லைட்டுகள் பிளவுபட்ட க்ளஸ்ட்டர்களுடன் காட்சி தருகின்றன. முக அமைப்பு கூட வித்தியாசமான தோற்றத்தை பெற்றிருக்கிறது.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி பற்றிய 8 முக்கிய விஷயங்கள்!

பெரிய அலாய் சக்கரங்கள்

இந்திய மாடலில் 18 அங்குல அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட இருப்பதாக தெரிகிறது. அலாய் வீல்கள் மிக கவர்ச்சியாக இருக்கின்றன. கருப்பு வண்ண பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்களில் ஆங்காங்கே சிவப்பு வண்ண அலங்கார விஷயங்கள் கவர்கின்றன.

MOST READ:புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவிரி துவங்கியது!

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி பற்றிய 8 முக்கிய விஷயங்கள்!

இன்டீரியர்

வெளிப்புறத்தை விட உட்புறம் வெகுவாக கவரும் வகையில் மிக நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பெரும்பான்மையான பகுதிகளை லெதர் மூலமாக போர்த்தப்பட்டுள்ளது பிரிமீயமாக இருக்கிறது. அத்துடன், உட்புற வடிவமைப்பும் மிகச் சிறப்பாக இருக்கிறது. வெளி்பபுறத்தைவிட உட்புறத்தை பார்ப்பவர்களை வசியம் செய்துவிடும் இந்த சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி பற்றிய 8 முக்கிய விஷயங்கள்!

சிறப்பு தொழில்நுட்பங்கள்

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சாதனத்துடன் ஓட்டுனருக்கு பல்வேறு தொழில்நுட்ப தகவல் உதவிகளை வழங்கும் டிரைவர் அசிஸ்ட் சிஸ்டமும் கொடுக்கப்பட இருக்கிறது. இதனால், காரை பாதுகாப்பாக இயக்குவதற்கான வாய்ப்பை வழங்கும்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி பற்றிய 8 முக்கிய விஷயங்கள்!

இதர அம்சங்கள்

இந்த காரில் 12.3 அங்குல முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற இருக்கிறது. தவிரவும், 360 டிகிரி கேமரா, ஹீட்டடு சைடு மிரர்கள், பனோரமிக் சன்ரூஃப், கார்னரிங் லைட்டுகள், கீ லெஸ் என்ட்ரி என தொழில்நுட்ப வசதிகளின் பட்டியல் நீள்கிறது.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி பற்றிய 8 முக்கிய விஷயங்கள்!

எஞ்சின் ஆப்ஷன்கள்

வெளிநாடுகளில் இரண்டு பெட்ரோல் மற்றும் இரண்டு விதமான டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதேபோன்று, 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 8 ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கொடுக்கப்படுகிறது. 130 பிஎஸ் பவரை அளிக்கும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 180 பிஎஸ் பவரை அளிக்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்கள் உள்ளன.

MOST READ:புதிய டர்போ எஞ்சினுடன் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் சோதனை!

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி பற்றிய 8 முக்கிய விஷயங்கள்!

டீசல் மாடலில் 130 பிஎஸ் பவரை அளிக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 176 பிஎஸ் பவரை அளிக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த மாடல்கள் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வெளிநாடுகளில் கிடைக்கிறது. இதில், 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் இந்தியாவிற்கு பயன்படுத்தபடலாம்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி பற்றிய 8 முக்கிய விஷயங்கள்!

விசேஷ சஸ்பென்ஷன்

இந்த எஸ்யூவியில் விசேஷ ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் அமைப்பு உள்ளது. ஷாக் அப்சார்பர் இரண்டு நிலைகளில் கட்டுப்படுத்தும் ஹைட்ராலிக் சிஸ்டத்தை பெற்றிருப்பதால், அதிர்வுகள் குறைவாக சொகுசான பயணத்தை அளிக்கும். குலுங்கல்களை இந்த ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் அமைப்பு உள்வாங்கிக் கொள்ளும்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி பற்றிய 8 முக்கிய விஷயங்கள்!

பாதுகாப்பு அம்சங்கள்

வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள மாடலில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், எமர்ஜென்ஸி பிரேக்கிங், அடாப்டிவ் ஹெட்லைட்டுகள், பார்க்கிங் அசிஸ்டென்ஸ், டிரைவர் அசிஸ்ட், லேன் மானிட்டரிங் சிஸ்டம் என ஏராளமான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை பெற்றிருக்கிறு. இந்திய மாடலில் குறைந்தது 6 ஏர்பேக்குகள் வழங்கப்படலாம். இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இடம்பெறும்.

MOST READ:கிராமப்புறங்களை குறிவைத்த டிவிஎஸ் நிறுவனத்தின் திட்டம் வெற்றி... 7 மாதங்களில் எட்டிய மைல்கல் இதுதான்

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி பற்றிய 8 முக்கிய விஷயங்கள்!

மேட் இன் தமிழ்நாடு

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியானது சென்னை அருகே திருவள்ளுரில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது. இதற்கான எஞ்சின்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன் பாகங்களை உற்பத்தி செய்யும் ஆலை சில மாதங்களுக்கு முன் ஓசூரில் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆக மொத்தத்தில் இது மேட் இன் தமிழ்நாடு கார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி பற்றிய 8 முக்கிய விஷயங்கள்!

அறிமுகம் எப்போது?

அடுத்த ஆண்டு இரண்டாவது அரையாண்டு காலத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதாவது, பண்டிகை காலத்திற்கு முன்னதாக விற்பனைக்கு வந்துவிடும். ஜீப் காம்பஸ், டாடா ஹாரியர், ஹூண்டாய் டூஸான் உள்ளிட்ட எஸ்யூவிகளுடன் போட்டி போடும். 2021ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒரு புதிய கார் மாடலை சிட்ரோன் பிராண்டில் அறிமுகப்படுத்த பிஎஸ்ஏ குழுமம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #சிட்ரோவன்
English summary
Ten things you should know about the all new Citroen C5 Aircross SUV for India.
Story first published: Thursday, April 4, 2019, 11:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X