கண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100... இந்த பெரும் அதிர்ச்சிக்கு காரணம் ஒரு புகைப்படம்தான்

நீண்ட நெடிய பாரம்பரியம் மிக்க ஜாவா மற்றும் ஆர்எக்ஸ் 100 உள்ளிட்ட பைக்குகள் இந்தியாவில் இருந்து கண்ணீருடன் பிரியாவிடை பெறுகின்றன. இதனால் அதன் உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவை அனைத்திற்கும் ஒரு புகைப்படம்தான் காரணம்.

கண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100...

இந்தியாவின் பெரும்பாலான நகரங்கள் காற்று மாசுபாடு என்ற மிகப்பெரிய பிரச்னையில் சிக்கி தவித்து கொண்டுள்ளன. குறிப்பாக நாட்டின் தலைநகர் டெல்லியில், காற்றின் தரம் அதல பாதாளத்திற்கு சென்றிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100...

காற்று அதிகம் மாசடைந்த டாப்-20 நகரங்களின் பட்டியலை, உலக சுகாதார நிறுவனம் (World Health Organization-WHO), கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. இதில், இந்தியாவில் உள்ள 14 நகரங்கள் இடம்பெற்றிருந்தது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

கண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100...

டெல்லி, வாரணாசி, கான்பூர், ஃபரிதாபாத், கயா, பாட்னா, லக்னோ, ஆக்ரா, முசாபர்பூர், ஸ்ரீநகர், குர்கான், ஜெய்ப்பூர், பாட்டியாலா மற்றும் ஜோத்பூர் ஆகியவைதான் அந்த 14 இந்திய நகரங்கள். இந்த நகரங்களில் காற்றின் தரம் மிக மோசமான நிலையில் உள்ளது.

கண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100...

ஆனால் இந்த நகரங்களில் மட்டும்தான் காற்று அதிகம் மாசுபட்டுள்ளது என நினைத்து விட வேண்டாம். பட்டியலில் இடம்பெறாவிட்டாலும் கூட, இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களிலும், காற்று வெகுவாக மாசடைந்து காணப்படுகிறது.

கண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100...

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து கொண்டு வருவதே காற்று மாசுபாடு பிரச்னைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

கண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100...

ஏனெனில் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையானது, காற்றை வெகுவாக மாசுபடுத்துகிறது. குறிப்பாக 2 ஸ்ட்ரோக் (2 Stroke) வாகனங்கள்தான், இந்தியாவின் காற்று மாசுபாடு பிரச்னைக்கு முக்கியமான காரணமாக உள்ளன.

கண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100...

இதன் காரணமாக இந்தியாவில் 2 ஸ்ட்ரோக் வாகனங்களை உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டது. கடந்த 2010ம் ஆண்டு முதல் இந்த தடை அமலில் உள்ளது. அத்துடன் அதே ஆண்டில் இருந்து, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், புதிய 2 ஸ்ட்ரோக் வாகனங்களை பதிவு செய்யும் பணிகளும் நிறுத்தப்பட்டன.

கண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100...

இதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும், (Regional Transport Office), கடந்த 2010ம் ஆண்டு முதல், புதிய 2 ஸ்ட்ரோக் வாகனங்கள் பதிவு (Registration) செய்யப்படுவது கிடையாது.

கண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100...

ஆனால் 15 ஆண்டுகளுக்கு மேலான 2 ஸ்ட்ரோக் வாகனங்கள் மறுபதிவு (Re-Registration) செய்யப்பட்டு வந்தன. என்றாலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக, பல்வேறு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், 15 ஆண்டுகளுக்கு மேலான 2 ஸ்ட்ரோக் வாகனங்களை மறுபதிவு செய்யும் பணிகளும் நிறுத்தப்பட்டன.

கண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100...

2 ஸ்ட்ரோக் வாகனங்கள் காற்று மாசுபாட்டை ஏற்படுத்துவதுடன், அதிக எரிபொருளை நுகர்கின்றன. அதாவது 2 ஸ்ட்ரோக் வாகனங்கள் இயங்க மிக அதிக அளவிலான எரிபொருள் தேவைப்படும். எனவே எரிபொருளை சிக்கனம் பிடிக்க முடியாமல் போய்விடுகிறது.

கண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100...

ஆனால் இந்தியாவிடம் போதிய அளவிற்கு எரிபொருள் வளம் இல்லை. எனவே சவுதி அரேபியா, ஈரான், ஈராக், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்துதான் இந்தியா எரிபொருளை இறக்குமதி செய்து கொண்டுள்ளது. இதற்கு மிகவும் அதிக செலவு ஆவதால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.

கண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100...

இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில், 2 ஸ்ட்ரோக் வாகனங்கள் அனைத்தும் மிக அதிக அளவிலான எரிபொருளை நுகர்கின்றன. இதுபோன்ற காரணங்களால்தான், 2 ஸ்ட்ரோக் வாகனங்களை ஒதுக்குவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மிக தீவிரமாக எடுத்தது.

கண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100...

என்றாலும் கூட இந்திய சாலைகளில் இன்றளவும், 2 ஸ்ட்ரோக் இன்ஜின் கொண்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் ரிக்ஸாக்கள் மிக அதிக அளவில் உலா வந்து கொண்டுதான் இருக்கின்றன. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவை இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக கூறலாம்.

கண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100...

பெங்களூரு நகரில் மட்டும், 2 ஸ்ட்ரோக் இன்ஜின் கொண்ட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரிக்ஸாக்கள் தற்போது இயங்கி வருகின்றன. நாடு முழுக்க கணக்கிட்டால் இதன் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டும் என கூறப்படுகிறது.

கண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100...

இதுதவிர 2 ஸ்ட்ரோக் இன்ஜின் கொண்ட டூவீலர்களும் இந்தியாவில் மிக அதிக அளவில் இயங்கி வருகின்றன. இப்படிப்பட்ட 2 ஸ்ட்ரோக் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ரிக்ஸாக்கள் அனைத்தும் சேர்ந்து, சுத்தமான காற்றை மாசுபடுத்துகின்றன.

கண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100...

ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த பால் ஸ்கேச்சரர் என்ற இன்ஸ்டிடியூட் (Paul Scherrer Institute) சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதில், லாரி, கார்களில் இருந்து வெளிவரும் புகையை காட்டிலும், சிறிய அளவிலான 2 ஸ்ட்ரோக் வாகனங்கள் வெளியிடும் புகை மிகவும் அபாயகரமானது என கூறப்பட்டிருந்தது.

கண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100...

எனவே உலகின் பெரும்பாலான நாடுகள் 2 ஸ்ட்ரோக் வாகனங்களின் சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டன. ஆனால் இந்தியாவில் இன்னும் பல லட்சக்கணக்கான 2 ஸ்ட்ரோக் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், மொபட் ஆகிய டூவீலர்கள் மற்றும் ரிக்ஸாக்கள் இயங்கி கொண்டுள்ளன.

கண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100...

இந்த சூழலில் வட்டார போக்குவரத்து அலுவலரின் உத்தரவு என்ற பெயரில் தற்போது புகைப்படம் ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து 2 ஸ்ட்ரோக் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

கண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100...

இதில், யமஹா ஆர்எக்ஸ் 100/ ஆர்எக்ஸ் 135/ ஆர்எக்ஸ்-இஸட் (RX-Z), கைனடிக் ஹோண்டா, கவாஸாகி - பஜாஜ் என்டூரோ, பஜாஜ் சேட்டக், சுஸுகி ஷோகன்/ சலோன், சுஸுகி மேக்ஸ் 100 ஆர், யெஸ்டி ரோட்கிங் 250/ 350 மற்றும் ஜாவா உள்ளிட்ட 2 ஸ்ட்ரோக் டூவீலர்கள் இடம்பெற்றுள்ளன.

கண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100...

ஆனால் அரசு தரப்பில் இதுகுறித்து எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. எனவே இது புரளியாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. என்றாலும் 2 ஸ்ட்ரோக் வாகனங்களை வைத்திருப்பவர்கள் கலக்கமும், கவலையும் அடைந்துள்ளனர்.

கண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100...

குறிப்பாக 2 ஸ்ட்ரோக் டூவீலர்களை வைத்திருப்பவர்கள்தான் பெரிதும் கவலையடைந்துள்ளனர். மேலே குறிப்பிட்ட டூவீலர்கள் அனைத்தும் 1970 மற்றும் 1980 கால கட்டங்களில், இந்திய சாலைகளில் மிகவும் வெற்றிகரமாக உலா வந்தவை.

கண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100...

இன்றைய நவநாகரீக இளைய தலைமுறையினர் இதுகுறித்து அவ்வளவாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. என்றாலும் பாரம்பரிய மோட்டார் சைக்கிள்கள் மீது அதீத ஆர்வம் கொண்ட இளைய தலைமுறையினர் மத்தியில் இவை தற்போதும் பிரபலமாகதான் உள்ளன.

கண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100...

பாரம்பரியம் மிக்க இந்த பழைய டூவீலர்களை இன்றளவும் பலர் அப்படியே குழந்தைகளை போல் பத்திரமாக பராமரித்து கொண்டு வருகின்றனர். ஏனெனில் கடந்த கால நினைவுகளை கொடுப்பவை என்பதால், பலரது மனதிற்கு இந்த டூவீலர்கள் மிகவும் நெருக்கமானவையாக உள்ளன.

கண்ணீருடன் விடைபெறுகிறது ஜாவா, ஆர்எக்ஸ் 100...

எனவே இத்தகைய டூவீலர்களை வைத்திருப்பவர்கள் அனைவரும் கிளப் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி அவ்வப்போது சந்தித்து கொள்கின்றனர். இதன்மூலம் கடந்த கால நினைவுகளை அசை போடுவதுடன், தங்களுக்கு விருப்பமான மோட்டார் சைக்கிள்களில் சந்தோஷமாக உலாவும் வருகின்றனர். அவர்களைதான் தற்போது பெரும் கவலை தொற்றி கொண்டுள்ளது.

Most Read Articles
English summary
2 Stroke Vehicles Including Yamaha RX100, Jawa, Yezdi Motorcycles To Be Banned From 1st April 2019?. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X