கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய இந்தியா வரும் புதிய ஆடி இ டிரான் எலெக்ட்ரிக் கார்!

சொகுசு கார் தயாரிப்பில் பிரபலமான ஆடி கார் நிறுவனம் இ டிரான் என்ற எலெக்ட்ரிக் காரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஆடி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையுடன் இ டிரான் வர இருக்கிறது.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய இந்தியா வரும் புதிய ஆடி இ டிரான் எலெக்ட்ரிக் கார்!

இந்த நிலையில், யூரோ என்சிஏபி அமைப்பின் கிராஷ் டெஸ்ட்டில் ஆடி இ டிரான் கார் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்று அசத்தி இருக்கிறது. வலதுபக்க மற்றும் இடது பக்க ஸ்டீயரிங் வீல் கொண்ட இரண்டு மாடல்களுக்குமே இந்த கிராஷ் டெஸ்ட் மதிப்பீடு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய இந்தியா வரும் புதிய ஆடி இ டிரான் எலெக்ட்ரிக் கார்!

ஆடி இ டிரான் கார் கிராஷ் டெஸ்ட் ஆய்வில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் அதிகபட்சமாக 38 புள்ளிகளுக்கு 34.9 என்ற புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது. அதேபோன்று, சிறியவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களில் அதிகபட்சமான 48 புள்ளிகளுுக்கு 34.4 புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது. பாதசாரிகளுக்கான பாதுகாப்பு அம்சங்களில் 13க்கு 10 என்ற புள்ளிகளை பெற்றுள்ளது.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய இந்தியா வரும் புதிய ஆடி இ டிரான் எலெக்ட்ரிக் கார்!

கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்பட்ட ஆடி இ டிரான் எலெக்ட்ரிக் காரில் முன்புற மற்றும் சைடு ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டு இருந்தன. சீட் பெல்ட் ரிமைன்டர்கள், லோடு லிமிட்டர்கள், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள், ஆட்டோனாமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் சிஸ்டம், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், லேன் கீப் அசிஸ்ட் ஆகியவை இந்த காரில் இடம்பெற்றுள்ளன.

ஆடி இ டிரான் எலெக்ட்ரிக் கார் அண்மையில்தான் இந்தியாவில் பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வரும் நவம்பர் மாதம் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக ஆடி நிறுவனத்தின் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய இந்தியா வரும் புதிய ஆடி இ டிரான் எலெக்ட்ரிக் கார்!

இந்த புதிய எலெக்ட்ரிக் காரில் இரண்டு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆடி நிறுவனத்தின் பிரத்யேக க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது. இந்த காரின் மின்மோட்டார்கள் இணைந்து அதிகபட்சமாக 360 பிஎஸ் பவரையும், 561 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கின்றன.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய இந்தியா வரும் புதிய ஆடி இ டிரான் எலெக்ட்ரிக் கார்!

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 6.6 வினாடிகளில் எட்டிவிடும். இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கும் பூஸ்ட் மோடில் வைத்து இயக்கும்போது கூடுதலாக 48 பிஎஸ் பவரையும், 103 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். இதனால், 0 -100 கிமீ வேகத்தை 5.7 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமையை பெறும். மணிக்கு 200 கிமீ வேகம் வரை செல்லும்.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய இந்தியா வரும் புதிய ஆடி இ டிரான் எலெக்ட்ரிக் கார்!

ஆடி இ டிரான் காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 400 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக இதன் பேட்டரியை 30 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும். பிரேக் பிடிக்கும்போது வெளிப்படும் ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி சேமிக்கும் தொழில்நுட்பமும் உள்ளது.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய இந்தியா வரும் புதிய ஆடி இ டிரான் எலெக்ட்ரிக் கார்!

இந்த காரில் ஏர் சஸ்பென்ஷன் அமைப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. டிரைவிங் மோடுக்கு தக்கவாறு கிரவுண்ட் கிளியரன்ஸ் மாறிக் கொள்ளும். குறிப்பாக, ஆஃப்ரோடு மோடில் வைத்து இயக்கும்போது கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகரிக்கும்.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய இந்தியா வரும் புதிய ஆடி இ டிரான் எலெக்ட்ரிக் கார்!

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சைடு மிரர்களுக்குபதிலாக கேமராக்கள் மூலமாக திரையில் பார்க்கும் வசதி, கஸ்டமைஸ் செய்யும் வசதியுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட ஏராளமான அம்சங்களை பெற்றுள்ளது. இந்த காரில் 4 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பி அண்ட் ஓ சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய இந்தியா வரும் புதிய ஆடி இ டிரான் எலெக்ட்ரிக் கார்!

புதிய ஆடி இ டிரான் எலெக்ட்ரிக் கார் ரூ.1 கோடி விலையில் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும். ஆண்டுக்கு 200 கார்கள் என்ற விற்பனை இலக்குடன் ஆடி நிறுவனம் இ டிரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காரை இந்தியாவில் களமிறக்க உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
Audi’s all-electric e-tron SUV has recieved a 5-star safety rating from the Euro NCAP.
Story first published: Saturday, July 6, 2019, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X