கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மாருதி ஆல்ட்டோ கே10 கார் அறிமுகம்!

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய மாருதி ஆல்ட்டோ கே10 கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மாருதி ஆல்ட்டோ கே10 கார் அறிமுகம்!

புதிய AIS-145 பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணையாக மாருதி ஆல்ட்டோ கே10 கார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி, மாருதி ஆல்ட்டோ கே10 காரில் இப்போது ஓட்டுனருக்கான ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்,, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மாருதி ஆல்ட்டோ கே10 கார் அறிமுகம்!

ஏற்கனவே இதில் சில பாதுகாப்பு அம்சங்கள் ஆப்ஷனலாக வழங்கப்பட்ட நிலையில், தற்போது நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக வழங்கப்படுகின்றன. இந்த கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக ஆல்ட்டோ கே10 காரின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மாருதி ஆல்ட்டோ கே10 கார் அறிமுகம்!

இதுவரை ரூ.3.38 லட்சம் முதல் ரூ.4.43 லட்சம் வரையிலான விற்பனை செய்யப்பட்டு வந்த மாருதி ஆல்ட்டோ கே10 கார் தற்போது ரூ.3.65 லட்சம் முதல் ரூ.4.44 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும். ஆனால், இதுகுறித்து மாருதி இணையதளத்தில் எந்த அப்டேட்டும் இதுவரை செய்யப்படவில்லை.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மாருதி ஆல்ட்டோ கே10 கார் அறிமுகம்!

எனினும், புதிதாக முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த புதிய மாடல்தான் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிகிறது. அதேவேளையில், மாருதி ஆல்ட்டோ 800சிசி மாடலின் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாததால், வரும் அக்டோபர் மாதம் வரை மாருதி ஆல்ட்டோ 800 கார் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மாருதி ஆல்ட்டோ கே10 கார் அறிமுகம்!

இதனிடையே, புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. எஸ்யூவி ஸ்டைலில் இருக்கும் அந்த சிறிய ரக கார் மாடல் ஓரிரு மாதங்களில் களமிறக்கப்படும்.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மாருதி ஆல்ட்டோ கே10 கார் அறிமுகம்!

ஆனால், அந்த புதிய கார் ஆல்ட்டோ காருக்கு மாற்றாக நிலைநிறுத்தப்படுமா அல்லது புதிய விலை ரகத்தில் நிலைநிறுத்தப்படுமா என்பது இன்னும் ஓரிரு மாதங்களில் தெரிந்துவிடும். அது ரெனோ க்விட் கார் போன்ற ஸ்டைலில் இருப்பதும் கவனிக்கத்தக்க விஷயம்.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மாருதி ஆல்ட்டோ கே10 கார் அறிமுகம்!

வடிவமைப்பு, எஞ்சின் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை. புதிய விதிமுறைகளுக்கு ஒப்பாக பாதுகாப்பு அம்சங்கள் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளன. பேஸ் வேரியண்ட்டுகளில்தான் அதிக பாதுகாப்பு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், விலை உயர்வு அதிகம் இருக்கிறது. டாப் வேரியண்ட்டுகளில் ஏற்கனவே பல வசதிகள் இருந்ததால், விலையில் அதிக தாக்கம் இல்லை.

Most Read Articles
English summary
Maruti Suzuki has launched the New Alto K10 with AIS-145 safety complaint variants in India.
Story first published: Friday, April 12, 2019, 12:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X