2019 மஸராட்டி க்வாட்ரோபோர்ட்டே மாடலின் முதல் காரை வாங்கிய இந்தியர்: விலை தெரிந்தால் அதிர்ச்சி உறுதி!

மஸராட்டி நிறுவனத்தின் 2019 க்வாட்ரோபோர்ட்டே மாடல் காரை அந்த நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. விலையுயர்ந்த இந்த காரை இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விலையுயர்ந்த 2019 மஸராட்டி க்வாட்ரோபோர்ட்டே மாடலின் முதல் காரை வாங்கிய இந்தியர்: விலை எவ்வளவு தெரிந்தால் அதிர்ச்சி உறுதி!

இத்தாலி நாட்டைச் சார்ந்த மஸராட்டி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம், க்வாட்ரோபோர்ட்டே என்னும் அதிநவீன சொகுசு காரை விற்பனைக்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. இரண்டு வேரியண்டில் வெளிவந்துள்ள இந்த கார் அதிகபட்சமாக 11 விதமான வண்ணத் தேர்வுகளில் சந்தையில் கிடைக்கின்றது.

இந்த காரின் 2019ம் ஆண்டின் மாடலை அந்த நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. புதிதாக அப்கிரேட் செய்யப்பட்டுள்ள இந்த காரின் இண்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் டிசைன் மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, புதிய கலர் மற்றும் வீல் ஆகியவற்றின் டிசைன் புதிதாக மெருகேற்றப்பட்டுள்ளது.

விலையுயர்ந்த 2019 மஸராட்டி க்வாட்ரோபோர்ட்டே மாடலின் முதல் காரை வாங்கிய இந்தியர்: விலை எவ்வளவு தெரிந்தால் அதிர்ச்சி உறுதி!

இந்த புத்தம் புதிய 2019 க்வாட்ரோபோர்ட்டே மாடலின் முதல் காரை இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் வாங்கியிருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த தொழிலதிபரின் பெயரை குறிப்பிடாமல் டெல்லியைச் சேர்ந்தவர் என்ற தகவலை மட்டும் மஸராட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த காரின் முன்பகுதியில் அல்பைரி வடிவத்திலான வெர்டிக்கல் குரோம் ரிப் கூறுகளைக் கொண்ட மூன்று டைமென்ஸ்னல் கிரில் அமைப்பைக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் கவர்ச்சியை இது மேலும் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது. தற்போது வெளிவந்திருக்கும் காரில் புதிதாக ரோஷோ பொடெண்டெ மற்றும் புளு நோபிள் ஆகிய இரண்டு புதிய வண்ணங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இத்துடன் மொத்தம் பத்து வண்ணக் கலவைகளில் இந்த கார் சந்தையில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

MOST READ: 5 நட்சத்திரம் பெற்ற இந்தியாவின் முதல் பாதுகாப்பான காருக்கு கிடைத்த வெகுமதி: உற்சாகத்தில் டாடா!

விலையுயர்ந்த 2019 மஸராட்டி க்வாட்ரோபோர்ட்டே மாடலின் முதல் காரை வாங்கிய இந்தியர்: விலை எவ்வளவு தெரிந்தால் அதிர்ச்சி உறுதி!

மஸராட்டி 2019 க்வாட்ரோபோர்ட்டே மாடலின் இண்டீரியர் டிசைனானது சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதன் இருக்கைகள் பியானோ ஃபியரே லெதரைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது, காரில் அமர்ந்து பயணிப்பவர்களுக்கு சொகுசான மற்றும் மிருதுவமான அனுபவத்தை வழங்கும். இதேபோன்ற லெதர் அமைப்பு கதவுகளிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு காரின் லக்ஸுரி தன்மையை மேலும் அதிகரித்து காண்பிக்கிறது.

விலையுயர்ந்த 2019 மஸராட்டி க்வாட்ரோபோர்ட்டே மாடலின் முதல் காரை வாங்கிய இந்தியர்: விலை எவ்வளவு தெரிந்தால் அதிர்ச்சி உறுதி!

இந்த காரில் ஹர்மன் கார்டோன் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஸ்டாண்டர்டு மற்றும் வில்கின்ஸ் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் ஆப்ஷனாக கிடைக்கும். மேலும், காரில் மொத்தம் 15 ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. க்வாட்ரோபோர்ட்டே காரில் எம்டிசி மற்றும் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கிளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு கன்ட்ரோல்களை எளிதில் கட்டுப்படுத்தலாம்.

இந்த புத்தம் புதிய மஸராட்டி க்வாட்ரோபோர்ட்டே சொகுசு காரில் ஆட்புளூ எனப்படும் தொழில்நுட்பம் பொருந்திய 3.0 லிட்டர் வி6 டர்போசார்ஜ்ட் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 275பிஎஸ் பவரை 4,000 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும் மற்றும் 600என்எம் டார்க்கில் 2,000 முதல் 2,600ஆர்பிஎம் பவரை வெளிப்படுத்தும். இதன் சைலென்ஸர் மஸராட்டிக்கே உறித்தான சவுண்டை வெளிப்படுத்துகிறது.

MOST READ: 2 மகள்களுடன் இளம்பெண் தீயில் கருகி பலியானதற்கு காரணம் இதுதான்... திடுக்கிடும் தகவல்கள் வெளியானது...

விலையுயர்ந்த 2019 மஸராட்டி க்வாட்ரோபோர்ட்டே மாடலின் முதல் காரை வாங்கிய இந்தியர்: விலை எவ்வளவு தெரிந்தால் அதிர்ச்சி உறுதி!

இந்த எஞ்ஜின் ஆட்டோ மற்றும் மேனுவல் மோடைக் கொண்ட, 8 ஸ்பீடு இஸட்எஃப் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காரில் புதிதாக 'பி' என்ற பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது. இது, பார்க்கிங் மோடிற்கு பயன்படுத்தும் விதமாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தம் புதிய மஸராட்டி க்வாட்ரோபோர்ட்டே சொகுசு காரானது இந்தியாவில் ரூ. 1.74 கோடி என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

Most Read Articles

மேலும்... #மஸராட்டி #maserati
English summary
2019 Maserati Quattroporte Car's First Buyer From Delhi. Read In Tamil.
Story first published: Thursday, March 14, 2019, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X