புதுப்பொலிவுடன் சக்தி வாய்ந்த கூபே ரக காரை களமிறக்கும் போர்ஷே: இதன் ஸ்பெஷல் என்ன...?

சொகுசு கார்களைத் தயாரித்து வரும் போர்ஷே நிறுவனம், தனது எட்டாம் தலைமுறை 911 என்ற ஸ்போர்ட்ஸ் காரை வருகிற 11ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுப்பொலிவுடன் சக்தி வாய்ந்த கூபே ரக காரை களமிறக்கும் போர்ஷே: இதன் ஸ்பெஷல் என்ன...?

சொகுசு கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் போர்ஷே நிறுவனம் தனது எட்டாம் தலைமுறை 911 என்ற ஸ்போர்ட்ஸ் மாடல் காரை வருகின்ற 11ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, இந்த காரின் கர்ரேரா எஸ் மற்றும் கர்ரேரா 4எஸ் மாடல் கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் இதற்கு முன்னதாக மாடலைக்காட்டிலும் நவீன தோற்றத்தைக் கொண்டதாக இருக்கிறது. இதன் பரிணாமம் பெற்ற தோற்றம், கார் சாலையில் செல்லும்போது தனித்துவமான லுக்கைக் வழங்குகிறது.

புதுப்பொலிவுடன் சக்தி வாய்ந்த கூபே ரக காரை களமிறக்கும் போர்ஷே: இதன் ஸ்பெஷல் என்ன...?

இந்த புத்தம் புதிய போர்ஷே 911 காரின் முன்பகுதி ரம்மியமான நளிவுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, உள்ள அந்த நளிவின் முகப்பு பகுதியில் தான் காருக்கான ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை எல்இடி மின்விளக்கைப் பெற்றுள்ளன. இதேபோன்று, இதன் பின்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள டைல் லைட் நீளமான பார் வடிவில் பொருத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த கூபே கார் ஸ்போர்ட்ஸ் லுக்கில் மிகவும் கவர்ச்சியாக காட்சியளிக்கிறது.

புதுப்பொலிவுடன் சக்தி வாய்ந்த கூபே ரக காரை களமிறக்கும் போர்ஷே: இதன் ஸ்பெஷல் என்ன...?

காரின் வடிவமைப்பைப் பொருத்தவரை முந்தைய மாடல்களிலிருந்து பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை. இருப்பினும், இதனை மேலும் அழகுப்படுத்தும் விதமாக சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, காரின் இன்டீரியரிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் கார், முந்தைய மாடலைக் காட்டிலும் சற்று பிரமாண்டமாக இருக்கிறது. அதேபோன்று, காரின் ஹேண்ட்லிங் மற்றும், இடவசதி ஆகியவற்றிற்கு எந்த வகையிலும் குறைவு ஏற்படாதவாறு பார்த்து பார்த்து நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதுப்பொலிவுடன் சக்தி வாய்ந்த கூபே ரக காரை களமிறக்கும் போர்ஷே: இதன் ஸ்பெஷல் என்ன...?

இதைத்தொடர்ந்து, இந்த எட்டாம் தலைமுறை போர்ஷே 911 காரானது முழுமையாக மாற்றியமைக்கப்பட்ட ஹைபிரிட் பவர்டிரைனைக் கொண்டுள்ளது. அவ்வாறு, கர்ரேரா எஸ் மற்றும் கர்ரேரா 4எஸ் மாடலில் மேம்படுத்தப்பட்ட 3.0 லிட்டர் டர்போசார்ஜட் ஃபிளாட் சிக்ஸ் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8-ஸ்பீடு டுயூவல் கிளட்சைக் கொண்ட ஆடோமேடிக் டிரான்ஸ்மிஸனைக் கொண்டு இயங்கும்.

புதுப்பொலிவுடன் சக்தி வாய்ந்த கூபே ரக காரை களமிறக்கும் போர்ஷே: இதன் ஸ்பெஷல் என்ன...?

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 450 பிஎஸ் பவரை 6,500 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். இதேபோன்று 530என்எம் டார்க்கை 2,300-5,000 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். மேலும், இந்த காரின் அனைத்து வீலும் இயங்கும் தன்மைக் கொண்டவை. அந்த வகையில், இந்த கர்ரேரா 4எஸ் மாடல் 0ல் இருந்து 100கிமீ என்ற வேகத்தை 3.6 செகண்டில் தொட்டுவிடும். இது கர்ரேராவை விட 0.1 செகண்ட் குறைவாகும்.

புதுப்பொலிவுடன் சக்தி வாய்ந்த கூபே ரக காரை களமிறக்கும் போர்ஷே: இதன் ஸ்பெஷல் என்ன...?

ஆகையால், கர்ரேரா எஸ்-யைக் காட்டிலும் 4எஸ் சக்தி வாய்ந்ததாக காட்சியளிக்கிறது. இந்த இரு மாடல்களும் முந்தைய ஜென் போர்ஷே 911 மாடலைக் காட்டிலும் 0.4 வேகமானது எனக் கூறப்படுகிறது. இதில் கர்ரேரா எஸ் மாடல் மணிக்கு அதிகபட்சமாக 306 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. கர்ரேரா 4எஸ் மணிக்கு 308கிமீ செல்லக்கூடியது. இவை இரண்டிற்கும் இடையே இரண்டு கிமீ வேகம்தான் வித்தியாசமாக இருக்கிறது.

புதுப்பொலிவுடன் சக்தி வாய்ந்த கூபே ரக காரை களமிறக்கும் போர்ஷே: இதன் ஸ்பெஷல் என்ன...?

மேலும், காரின் இந்திய மதிப்பானது 1.6-1.9 கோடிகள் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இந்த கார் இந்தியச் சந்தையில் விற்பனைக்கு வந்தால், நிஸானின் ஜிடி-ஆர், ஆடி ஆர்8 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸின் ஏஎம்ஜி-ஜிடி ஆகிய கார்களுடன் கடுமையானப் போட்டியைச் சந்திக்கும்.

Source- overdrive.in

Most Read Articles
மேலும்... #போர்ஷே #porsche
English summary
2019 Porsche 911 To Launch In India On 11 April. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X