2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் கார் விற்பனைக்கு அறிமுகம்

2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் கார் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் கார் விற்பனைக்கு அறிமுகம்

டொயோட்டா நிறுவனத்தின் புதிய TNGA-K என்ற உலகளாவிய சந்தைகளுக்கான கார் உருவாக்க கட்டமைப்பில்தான் இந்த புதிய கார் உருவாக்கப்பட்டுள்ளது. அதிக இடவசதி, சொகுசு மற்றும் சிறப்பான மைலேஜ் ஆகிய அம்சங்களுடன் இந்த புதிய கேம்ரி ஹைப்ரிட் மாடல் வந்துள்ளது.

2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் கார் விற்பனைக்கு அறிமுகம்

மெல்லிய ஹெட்லைட் ஹவுசிங் அமைப்பு, வி வடிவிலான க்ரில் அமைப்பு, பெரிய அளவிலான ஏர்டேம் பகுதிகளுடன் முந்தைய மாடலிலிருந்து பல வேறுபாடுகளுடன் வந்துள்ளது. பழைய மாடலைவிட நீளத்திலும், அகலத்திலும் அதிகரித்துள்ளது. அதேபோன்று, வீல் பேஸ் 50 மிமீ வரை கூடி இருக்கிறது.

2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் கார் விற்பனைக்கு அறிமுகம்

புதிய கேம்ரி ஹைப்ரிட் காகரில் 10 அங்குல ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 அங்குல திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவற்றுடன் நவீன யுக கார் மாடலாக மாறி இருக்கிறது.

2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் கார் விற்பனைக்கு அறிமுகம்

இந்த காரில் 9 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஜேபிஎல் டால்பி ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜர், லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், க்ரூஸ் கன்ட்ரோல், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி உள்ளிட்ட ஏராளமான வசதிகளை பெற்றிருக்கிறது.

2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் கார் விற்பனைக்கு அறிமுகம்

ஓட்டுனர் இருக்கையை 10 வித நிலைகளில் மாற்றிக் கொள்ளக்கூடிய அட்ஜெஸ்ட் வசதியுடன் மெமரி வசதியும் உள்ளது. இந்த காரின் ஈக்கோ டிரைவிங் மோடு மூலமாக அதிகபட்சமான எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கான தொழில்நுட்பமும் உள்ளது.

2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் கார் விற்பனைக்கு அறிமுகம்

புதிய டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் காரில் 2,487சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 178 எச்பி பவரையும், 221 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பழைய மாடலைவிட 18 எச்பி கூடுதல் பவரை பெற்றிருக்கிறது.

2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் கார் விற்பனைக்கு அறிமுகம்

இந்த ஹைப்ரிட் மாடலில் 88 kW திறன் கொண்ட மின் மோட்டார் உள்ளது. பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் இணைந்து அதிகபட்சமாக 208 எச்பி பவரை வெளிப்படுத்தும்.

2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் கார் விற்பனைக்கு அறிமுகம்

இந்த புதிய கேம்ரி ஹைப்ரிட் கார் லிட்டருக்கு 23.27 கிமீ மைலேஜ் வரும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் முக்கிய சிறப்பம்சமே அதிக மைலேஜ் மற்றும் குறைவான மாசு உமிழ்வு திறனை பெற்றிருப்பதுதான்.

2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் கார் விற்பனைக்கு அறிமுகம்

புதிய டொயோட்டா கேம்ரி காரில் 9 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல், பின்புற கேமரா மற்றும் சோனார் சென்சாருடன் கூடிய பார்க்கிங் அசிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது.

2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் கார் விற்பனைக்கு அறிமுகம்

இந்த கார் ரெட் மைக்கா, ஃபான்டம் பிரவுன், பர்னிங் பிளாக், ஆட்டிடியூட் பிளாக், பியர்ல் ஒயிட், சில்வர் மற்றும் கிராஃபைட் என 7 விதமான வண்ணங்களில் கிடைக்கும்.

2019 டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் கார் விற்பனைக்கு அறிமுகம்

புதிய டொயோட்டா கேம்ரி கார் ரூ.36,95 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. ஹோண்டா அக்கார்டு காருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
2019 Toyota Camry Hybrid Launched In India.
Story first published: Friday, January 18, 2019, 12:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X