இன்னும் ஒரு சில நாட்களில் விற்பனைக்கு அறிமுகமாகிறது 2019 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா!

2019 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா கார் இன்னும் ஒரு சில நாட்களில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இன்னும் ஒரு சில நாட்களில் விற்பனைக்கு அறிமுகமாகிறது 2019 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மாடலாக திகழ்ந்து வரும் இன்னோவா கிரிஸ்டா காரை, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. என்றாலும் இந்தியாவின் 7-சீட்டர் எம்பிவி செக்மெண்ட்டில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து கொண்டே செல்கிறது.

இன்னும் ஒரு சில நாட்களில் விற்பனைக்கு அறிமுகமாகிறது 2019 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா!

பிரீமியம் என எடுத்து கொண்டால், கடந்த செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா மராஸ்ஸோ காரின் வாயிலாக டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவிற்கு போட்டி அதிகரிக்கிறது. இதுதவிர மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய தலைமுறை எர்டிகா காரும் விற்பனையில் சக்கை போடு போட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி ரக காராக எர்டிகா உருவெடுத்துள்ளது குறித்து டிரைவ்ஸ்பார்க் தமிழ் வெளியிட்டு செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இன்னும் ஒரு சில நாட்களில் விற்பனைக்கு அறிமுகமாகிறது 2019 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா!

இவ்வாறு போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், அப்டேட் செய்யப்பட்ட 2019 மாடல் இன்னோவா கிரிஸ்டா காரை டொயோட்டா நிறுவனம் வரும் ஏப்ரல் 8ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது வழக்கமான அப்டேட்தான் என்பதால் 2019 இன்னோவா கிரிஸ்டா காரில், பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் இருக்காது என கூறப்படுகிறது. எனினும் கூடுதலான சில வசதிகளையும், ஐவரி இன்டீரியர் கலர் ஆப்ஷனையும் டொயோட்டா நிறுவனம் வழங்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் ஒரு சில நாட்களில் விற்பனைக்கு அறிமுகமாகிறது 2019 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா!

அதேபோல் மெக்கானிக்கலாகவும் எவ்வித மாற்றமும் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. தற்போது உள்ள 2.4 லிட்டர் டீசல், 2.8 லிட்டர் டீசல் மற்றும் 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், முதலாவதாக உள்ள 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 3,400 ஆர்பிஎம்மில் 150 பிஎஸ் பவரையும், 1,400 மற்றும் 2,800க்கு இடைப்பட்ட ஆர்பிஎம்மில் 343 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இதில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது.

இன்னும் ஒரு சில நாட்களில் விற்பனைக்கு அறிமுகமாகிறது 2019 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா!

அதே சமயம் பெரிய 2.8 லிட்டர் ஜிடி சீரிஸ் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 3,400 ஆர்பிஎம்மில் 174 பிஎஸ் பவரையும், 1,200-3,400க்கு இடைப்பட்ட ஆர்பிஎம்மில் 360 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதில், 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. மறுபக்கம் 2.7 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினானது அதிகபட்சமாக 5,200 ஆர்பிஎம்மில் 166 பிஎஸ் பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில், மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் தேர்வுகள் உள்ளன.

இன்னும் ஒரு சில நாட்களில் விற்பனைக்கு அறிமுகமாகிறது 2019 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா!

தற்போதைய நிலையில் 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் லிட்டருக்கு 15.10 கிலோ மீட்டர் மைலேஜையும், 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் லிட்டருக்கு 14.29 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்குகின்றன. அதே சமயம் பெட்ரோல் இன்ஜின் மேனுவல் வேரியண்ட்டில் லிட்டருக்கு 11.25 கிலோ மீட்டர் மைலேஜையும், ஆட்டோமெட்டிக் வேரியண்ட்டில் லிட்டருக்கு 10.75 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்குகிறது. இதிலும் எவ்வித மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் ஒரு சில நாட்களில் விற்பனைக்கு அறிமுகமாகிறது 2019 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா!

அதேபோல் 2019 வெர்ஷன் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரின் விலையிலும் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. தற்போது ரூ.14.93 லட்சம்-ரூ.23.24 லட்சம் வரையிலான விலையில் (எக்ஸ் ஷோரூம்) டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
2019 Toyota Innova Crysta India Launch Details. Read in Tamil
Story first published: Friday, April 5, 2019, 13:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X