10 இருக்கைகளுடன் 2020 ஃபோர்ஸ் ட்ராக்ஸ் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் மாடல் சோதனை ஓட்டம்...

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் 10 இருக்கை அமைப்பை கொண்ட ட்ராக்ஸ் எம்யூவி மாடலை ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தியுள்ளது. இதுகுறித்த முழு தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

10 இருக்கைகளுடன் 2020 ஃபோர்ஸ் ட்ராக்ஸ் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் மாடல் சோதனை ஓட்டம்...

இந்த 2020 பிஎஸ்6 மாடல் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனுக்கு மாற்றப்பட்டுள்ளதால் காரின் முன்புறம் மட்டும் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய மாடலின் வெளிப்புற தோற்றத்தையும், நீளம், அகலம், உயரம் போன்ற பரிமாண அளவுகளையும் தான் இந்த ட்ராக்ஸ் பிஎஸ்6 மாடலும் கொண்டிருப்பதை நம்மால் தீர்மானிக்க முடிகிறது.

10 இருக்கைகளுடன் 2020 ஃபோர்ஸ் ட்ராக்ஸ் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் மாடல் சோதனை ஓட்டம்...

ஆனால் கூடுதலான பாதுகாப்பு அம்சங்களை இந்த புதிய காரில் எதிர்பார்க்கலாம். அதேபோல் முன்புற எல்இடி ஹெட்லைட் மற்றும் பின்புற டெயில் லேம்புகளின் டிசைன்களில் சிறிய மாற்றத்தை ஃபோர்ஸ் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.

10 இருக்கைகளுடன் 2020 ஃபோர்ஸ் ட்ராக்ஸ் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் மாடல் சோதனை ஓட்டம்...

ட்ராக்ஸ் மாடலின் க்ரூஸியர் மற்றும் டூஃபான் வேரியண்ட்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் டீலக்ஸ் வெர்சனுக்கு அப்டேட் செய்யப்பட்டன. ட்ராக்ஸ் மாடலின் இந்த இரு வேரியண்ட்களும் உட்புற இருக்கை அமைப்பு மற்றும் ஏசி பொருத்தப்பட்டுள்ள அமைவுகள் மூலம் தான் வித்தியாசப்படுத்தப்படுகின்றன. அதாவது ட்ராக் க்ரூஸியர் வேரியண்ட் 12 இருக்கைகளுடனும், ட்ராக்ஸ் டூஃபான் வேரியண்ட் 10 மற்றும் 14 இருக்கைகளுடனும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

10 இருக்கைகளுடன் 2020 ஃபோர்ஸ் ட்ராக்ஸ் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் மாடல் சோதனை ஓட்டம்...

இந்த இரு வேரியண்ட்களும் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்டாலும் இவற்றின் ஓட்டுனர் இருக்கை அமைப்பில் எந்த மாற்றமும் கொண்டுவரப்பட போவதில்லை. இந்த வேரியண்ட்களை தவிர்த்து ஃபோர்ஸ் ட்ராக்ஸ் சிறிய காமா ஃபார்மட் மற்றும் ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி வாகனங்களின் ஃபார்மட்டிலும் கிடைக்கிறது.

10 இருக்கைகளுடன் 2020 ஃபோர்ஸ் ட்ராக்ஸ் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் மாடல் சோதனை ஓட்டம்...

ட்ராக்ஸ் மாடல் வெளியிடும் ஆற்றல் மற்றும் பயணிகளை ஏற்றி கொள்ளும் அளவுகளினால் இந்தியா முழுவதும் பிரபலமான மாடலாக திகழ்கிறது. இந்த காரின் ஒட்டு மொத்த பரிமாண அளவுகள் 4832x1790x2055மிமீ ஆகும். இப்படி அதிகமான பரிமாண அளவுகளை கொண்டிருப்பதால், இருக்கை எண்ணிக்கைகளுக்கு கூடுதலாக கூட ஆட்களை ஏற்றி கொள்ளலாம்.

10 இருக்கைகளுடன் 2020 ஃபோர்ஸ் ட்ராக்ஸ் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் மாடல் சோதனை ஓட்டம்...

பிஎஸ்6-க்கு மேம்படுத்தப்பட்டுள்ள ட்ராக்ஸ் மாடல் தற்போதைய மாடலை விட வித்தியாசமான ஆற்றல் அளவை வெளியிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் 1947சிசி டீசல் என்ஜின் 67 பிஎச்பி பவரையும் 175 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது.

10 இருக்கைகளுடன் 2020 ஃபோர்ஸ் ட்ராக்ஸ் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் மாடல் சோதனை ஓட்டம்...

ட்ராக்ஸ் வேரியண்ட்களின் டீலக்ஸ் வெர்சன்கள் 2596சிசி டீசல் என்ஜினை பெற்றுள்ளன. இந்த என்ஜின் 85 பிஎச்பி பவரையும் 230 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த இரு என்ஜின்களும் பின்புற சக்கரங்களை இயக்கும் வகையிலான 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன்களை பெற்றுள்ளன.

10 இருக்கைகளுடன் 2020 ஃபோர்ஸ் ட்ராக்ஸ் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் மாடல் சோதனை ஓட்டம்...

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ட்ராக்ஸ் மாடல் மட்டுமின்றி தனது தயாரிப்பு கார்கள் அனைத்தையும் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யும் வேலையில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகிறது. இந்த வகையில் கடந்த மாதம் ஃபோர்ஸ் நிறுவனத்தின் ட்ராக்ஸ் எஸ்யூவி மற்றும் குர்கா எஸ்யூவி கார்கள் பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
2020 Force Trax BS6 facelift 10 seater MUV – Spied before launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X