எல்இடி ஹெட்லைட்டுடன் இரவில் 2020 ஹூண்டாய் க்ரெட்டா சோதனை ஓட்டம்...

ஹூண்டாய் கடந்த மாதத்தில் க்ரெட்டா மாடலின் அடுத்த தலைமுறை காரை ஐஎக்ஸ்25 என்ற பெயரில் சீனாவில் வெளியிட்டது. இது முழுக்க சீனா வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற ஸ்டைலில் இருந்ததால் இந்த க்ரெட்டாவின் புதிய தலைமுறை கார் இந்தியாவில் சில டிசைன் மாற்றங்களுடன் தான் வெளியாகும் என கூறியிருந்தோம்.

எல்இடி ஹெட்லைட்டுடன் இரவில் 2020 ஹூண்டாய் க்ரெட்டா சோதனை ஓட்டம்...

அதன்படியே ஐஎக்ஸ்25 காரை விட சிறிது வித்தியாசமான வெளிப்புற டிசைனுடன் இந்த 2020 ஹூண்டாய் க்ரெட்டா கார் தற்போது சோதனை ஓட்டத்தில் ஈடுப்பட்டுள்ளது. முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் இரவில் இந்த கார் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தாலும் இந்த காரில் ஏற்படுத்தப்பட்டுள்ள சில அப்டேட்கள் தெரிய வருகின்றன.

எல்இடி ஹெட்லைட்டுடன் இரவில் 2020 ஹூண்டாய் க்ரெட்டா சோதனை ஓட்டம்...

கிட்டத்தட்ட சீனாவின் ஐஎக்ஸ்25 மாடலின் தோற்றத்தையே கொண்டுள்ள இந்த புதிய காரில் குறிப்பிட்ட இரு பகுதிகள் மட்டும் மாற்றம் அடைந்துள்ளன. ஐஎக்ஸ்25 காரில் இருந்த தேன்கூடு அமைப்பிலான க்ரிலுக்கு பதிலாக வேறொரு டிசைனில் க்ரில் கொடுக்கப்பட்டிருப்பது சோதனை ஓட்ட புகைப்படங்களை பார்க்கும்போது தெரிய வருகிறது.

எல்இடி ஹெட்லைட்டுடன் இரவில் 2020 ஹூண்டாய் க்ரெட்டா சோதனை ஓட்டம்...

மற்றொரு மிக பெரிய வித்தியாசம் காரின் அலாய் சக்கரங்களின் டிசைன். எம்ஜி ஹெக்டரில் உள்ளது போன்ற பனோராமிக் சன்ரூஃப் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு கியா நிறுவனத்தின் செல்டோஸ் மாடலில் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எல்இடி ஹெட்லைட்டுடன் இரவில் 2020 ஹூண்டாய் க்ரெட்டா சோதனை ஓட்டம்...

இரவில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதால் இதன் ஹெட்லைட்ஸ் அமைப்பில் எந்த மாற்றமும் சீனாவின் ஐஎக்ஸ்25 மாடலில் இருந்து ஏற்படுத்தவில்லை என்பது மிக தெளிவாக தெரிகிறது. கார் முழுவதும் மறைக்கப்பட்டுள்ளதால் இதுதவிர இந்த சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலமாக எந்த தகவல்களையும் அறிய முடியவில்லை.

எல்இடி ஹெட்லைட்டுடன் இரவில் 2020 ஹூண்டாய் க்ரெட்டா சோதனை ஓட்டம்...

ஆனால் நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி இந்த காரின் உட்புறத்தில் 10 இன்ச் தொடுத்திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம் போன்றவை கொடுக்கப்பட்டிருக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

எல்இடி ஹெட்லைட்டுடன் இரவில் 2020 ஹூண்டாய் க்ரெட்டா சோதனை ஓட்டம்...

இந்த புதிய க்ரெட்டா காரின் என்ஜின் தேர்வுகளில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றன. ட்ரான்ஸ்மிஷன் அமைப்புகளாக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் கொடுக்கப்படவுள்ளன.

எல்இடி ஹெட்லைட்டுடன் இரவில் 2020 ஹூண்டாய் க்ரெட்டா சோதனை ஓட்டம்...

ஹூண்டாய் நிறுவனம் இந்த புதிய க்ரெட்டாவின் அடுத்த தலைமுறை காரை 5 இருக்கை அமைப்பில் வடிவமைத்துள்ளது. இதன் அறிமுகத்திற்கு பின்னர் இதன் 7 இருக்கை வெர்சனும் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த க்ரெட்டாவின் 7 இருக்கை வெர்சன் மூலமாக தான் ஹெக்டரின் 6 இருக்கை வெர்சன், 7 இருக்கை ஹெரியர் மற்றும் 2020ல் அறிமுகமாகவுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி500 போன்ற மாடல்களுடன் போட்டியிட ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

எல்இடி ஹெட்லைட்டுடன் இரவில் 2020 ஹூண்டாய் க்ரெட்டா சோதனை ஓட்டம்...

இந்நிறுவனம் க்ரெட்டா மாடலை 2015ல் அறிமுகப்படுத்தியது. இதன் ஃபேஸ்லிஃப்ட் வேரியண்ட்டை 2017ல் அறிமுகப்படுத்தியது. இதனால் 2015லிருந்து 2018ஆம் ஆண்டு வரை க்ரெட்டா மாடல் குறைந்தது 10,000 யூனிட்களாவது ஒவ்வொரு மாதமும் விற்பனையாகிவிடும்.

எல்இடி ஹெட்லைட்டுடன் இரவில் 2020 ஹூண்டாய் க்ரெட்டா சோதனை ஓட்டம்...

இந்த நிலையில் தான் ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டாவின் முதல் அப்டேட் வெர்சனாக இந்த புதிய மாடலை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதனால் க்ரெட்டாவின் ஆதிக்கம் அதன் பிரிவில் தொடர்ந்து நீடிக்கவுள்ளது என்பது நிச்சயம்.

Most Read Articles
English summary
2020 Hyundai Creta spied at night – LED headlight and DRL revealed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X