கொட்டும் மழையில் 2020 ஹூண்டாய் க்ரெட்டா சோதனை ஓட்டம்...

ஹூண்டாய் நிறுவனம் தனது அறிமுக மாடலான க்ரெட்டாவை தொடர்ந்து சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் இரவில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்ட இந்த கார் மீண்டும் தற்போது கொட்டும் மழையில் சோதனை ஓட்டத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

கொட்டும் மழையில் 2020 ஹூண்டாய் க்ரெட்டா சோதனை ஓட்டம்...

இந்த முறையும் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த காரின் புகைப்படத்தை தவிர கூடுதல் தகவல்கள் எதுவும் பெரிய அளவில் வெளிவரவில்லை. ஹூண்டாய் நிறுவனத்திற்கே உரிய போல்ட்டான க்ரில் அமைப்பை இந்த கார் பெற்றுள்ளது.

கொட்டும் மழையில் 2020 ஹூண்டாய் க்ரெட்டா சோதனை ஓட்டம்...

இந்த காரின் முன்புறத்தில் எல்இடி டிஆர்எல் ஹெட்லைட் அமைப்பு சிறிது மேலாகவும், மத்தியில் சில விளக்குகளும், கீழே ஃபாக் லேம்ப்கள் என விளக்குகளால் ஜொலிக்கும் விதத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கூறியதுபோல், பக்கவாட்டு அமைப்பு இந்த 2020 க்ரெட்டாவில் தற்போதைய மாடலை விட சிறிது மாற்றத்துடன் உள்ளது.

கொட்டும் மழையில் 2020 ஹூண்டாய் க்ரெட்டா சோதனை ஓட்டம்...

பின்பக்கம் முழுவதும் வித்தியாசமான பாகங்களை கொண்டுள்ளது. அதாவது, பின்புற டெயில்லேம்ப் ப்ளாக் ட்ரிம் உடன் இரண்டாக பிளவுப்பட்டது போல் உள்ளது. இந்த டெயில்லைட்டுடன் கூடுதலாக இரு லைட்கள் இணைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் 2020 ஹூண்டாய் க்ரெட்டா தற்போதைய மாடலை விட தடிமனாக, வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் விதத்திலான வெளிப்புற தோற்றத்தை கொண்டுள்ளது.

கொட்டும் மழையில் 2020 ஹூண்டாய் க்ரெட்டா சோதனை ஓட்டம்...

காரின் உட்புறத்தில் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் இணைக்கும் வசதி கொண்ட 10.4 இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் அமைப்புடன் உள்ள டேஸ்போர்டு என தற்போதைய க்ரெட்டா காரை விட ஏகப்பட்ட உட்புற தொழிற்நுட்பங்களை இந்த கார் கொண்டுள்ளது.

கொட்டும் மழையில் 2020 ஹூண்டாய் க்ரெட்டா சோதனை ஓட்டம்...

காரின் உட்புறத்தை சுற்றிலும் லைட்டிங் அமைப்பு, 360டிகிரிக்கு சுழலக்கூடிய கேமிரா, கேமிராவை ஒரே பக்கம் மட்டும் காட்டு விதத்தில் மாற்ற சென்ட்ரல் கண்ட்ரோல் ஸ்க்ரீன், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், எலக்ட்ரிக் சன்ரூஃப், ட்யூல்-ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல் என பல அம்சங்கள் உள்ளன.

கொட்டும் மழையில் 2020 ஹூண்டாய் க்ரெட்டா சோதனை ஓட்டம்...

சீனாவில் சில மாதங்களுக்கு முன்பே ஐஎக்ஸ்25 என்ற பெயரில் அறிமுகமாகிவிட்ட இந்த காரில் ஹூண்டாய் மோதல் எச்சரிக்கை ப்ரேக் என கூடுதல் சில ப்ரேக் அமைப்புகளை வழங்கியுள்ளது. ஆனால் இவை எல்லாம் இந்தியாவில் அறிமுகமாகும்போது கொடுக்கப்படாது என்றே கூறப்படுகிறது.

கொட்டும் மழையில் 2020 ஹூண்டாய் க்ரெட்டா சோதனை ஓட்டம்...

சீனாவில் 10.58- 13.68 மில்லியன் யுவனில் இந்த 2020 க்ரெட்டா கார் ஐஎக்ஸ்25 என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இது முந்தைய க்ரெட்டா மாடலை விட 4,000 யுவன் குறைவாகும். இதே விலை உத்தியை தான் 2020 க்ரெட்டா விற்பனையிலும் ஹூண்டாய் நிறுவனம் பின்பற்றும் என தெரிகிறது.

கொட்டும் மழையில் 2020 ஹூண்டாய் க்ரெட்டா சோதனை ஓட்டம்...

கியா செல்டோஸின் ஃப்ளாட்ஃபார்ம் மற்றும் என்ஜின் தேர்வுகளை அப்படியே கொண்டுள்ள இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் வேரியண்ட்கள் பிஎஸ்6 தரத்தில் வழங்கப்படவுள்ளன. இந்த என்ஜின்களுடன் இணைக்கப்படவுள்ள ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளும் கியா செல்டோஸ் மாடலில் இருந்து பின்பற்றப்பட்டுள்ளது.

கொட்டும் மழையில் 2020 ஹூண்டாய் க்ரெட்டா சோதனை ஓட்டம்...

அந்த வகையில் இந்த காரின் இரு என்ஜின் தேர்வுகளுக்கும் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் யூனிட்டும், கூடுதலாக டீசல் வேரியண்ட்டிற்கு மட்டும் டார்க்-கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும், பெட்ரோல் வேரியண்ட்டிற்கு சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அமைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த 2020 ஹூண்டாய் க்ரெட்டா காரின் இந்திய அறிமுகம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் எதிர்பார்க்கலாம்.

English summary
2020 Hyundai Creta Spotted In India, Launch Expected In February
Story first published: Monday, December 2, 2019, 19:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X