மாருதி எஸ்-பிரெஸ்ஸோவிற்கு போட்டியாக பிஎஸ்6 என்ஜினில் அறிமுகமாகும் மஹிந்திரா கேயூவி100

இந்திய அரசாங்கம், 2020 ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து அனைத்து தயாரிப்பு வாகனங்களையும் பிஎஸ்6 தரத்தில் தான் வெளியிட வேண்டும் என உத்தரவு ஒன்றை சமீபத்தில் பிறப்பித்திருந்தது. இதனால் அனைத்து ஆட்டொமொபைல் நிறுவனங்களும் பிஎஸ்6 வாகனங்களுக்கு மாறி வருகின்றன.

அதன்படி பிஎஸ்6-க்கு இணக்கமான கார் மாடல்கள் ஒவ்வொன்றாக அறிமுகமாகியும் சோதனை ஓட்டங்களில் ஈடுப்பட்டும் வருகின்றன. இந்நிலையில், மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தயாரிப்பு வாகனமான கேயூவி100 பிஎஸ்6 தரத்தில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

மாருதி எஸ்-பிரெஸ்ஸோவிற்கு போட்டியாக பிஎஸ்6 என்ஜினில் அறிமுகமாகும் மஹிந்திரா கேயூவி100

இதன் அறிமுகம் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில் மஹிந்திரா நிறுவனம் கேயூவி100-ன் பெட்ரோல் வேரியண்ட்டை மட்டும் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தியுள்ளது. இதன் 1.2 லிட்டர் டீசல் என்ஜினை பிஎஸ்-6க்கு மேம்படுத்தவில்லை.

மாருதி எஸ்-பிரெஸ்ஸோவிற்கு போட்டியாக பிஎஸ்6 என்ஜினில் அறிமுகமாகும் மஹிந்திரா கேயூவி100

இந்நிறுவனம் கடந்த ஜூன் மாதம், பிஎஸ்6-க்கு இணக்கமான டீசல் மற்றும் பெட்ரோல் வேரியண்ட்கள் இன்னும் 3ல் இருந்து 4 மாதங்களில் முழுவதும் தயாரிக்கப்பட்டுவிடும் என கூறியிருந்தது. ஆனால் இந்த கேயூவி100 மாடலில் பெட்ரோல் வேரியண்ட் மட்டும் தான் தற்போது வரை பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

மாருதி எஸ்-பிரெஸ்ஸோவிற்கு போட்டியாக பிஎஸ்6 என்ஜினில் அறிமுகமாகும் மஹிந்திரா கேயூவி100

மஹிந்திரா நிறுவனம், பிஎஸ்6-க்கு இணக்கமான நான்கு விதமான புதிய பெட்ரோல் என்ஜின்களை தனது கார் மற்றும் வர்த்தக வாகனங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1.2 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின், 3 சிலிண்டர்கள் அமைப்பு கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் சிறிய ரக வர்த்தக வாகனங்களில் பயன்படுத்துவதற்கான 625சிசி பெட்ரோல் என்ஜின் ஆகியவை அடங்கும்.

மாருதி எஸ்-பிரெஸ்ஸோவிற்கு போட்டியாக பிஎஸ்6 என்ஜினில் அறிமுகமாகும் மஹிந்திரா கேயூவி100

இந்த நான்கு என்ஜின்களும் மஹிந்திரா நிறுவனத்தின் 8 விதமான பிளாட்ஃபார்ம்களில் உருவாக்கப்படும் கார் மற்றும் வர்த்தக வாகனங்களில் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதில், பிஎஸ்6 தரத்திற்கு இணையாக அப்டேட் செய்யப்பட்ட 3 சிலிண்டர் அமைப்பு கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின்தான் கேயூவி100 எஸ்யூவியில் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மாருதி எஸ்-பிரெஸ்ஸோவிற்கு போட்டியாக பிஎஸ்6 என்ஜினில் அறிமுகமாகும் மஹிந்திரா கேயூவி100

இந்த என்ஜின் ஏற்கனவே எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரில் வழங்கப்பட்டிருந்தாலும், ஆற்றல் வெளிப்படுத்தும் திறனில் சிறிது வேறுபாடு இருக்கும். அதாவது, எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் தற்போது பயன்படுத்தப்படும் பிஎஸ்-4 இணக்கமான 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 110 பிஎச்பி பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

இதுவே இந்த என்ஜின் பிஎஸ்6-க்கு இணக்கமாக மாற்றப்படும் போது வெளியிடும் ஆற்றல் இதை விட கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். தற்சமயம் விற்பனையாகி வரும் கேயூவி100 மாடலில் உள்ள பிஎஸ்4 என்ஜின் 82 பிஎச்பி பவரையும் 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி எஸ்-பிரெஸ்ஸோவிற்கு போட்டியாக பிஎஸ்6 என்ஜினில் அறிமுகமாகும் மஹிந்திரா கேயூவி100

மஹிந்திரா நிறுவனத்தின் விலை குறைவான பிஎஸ்6 காராக விற்பனையாகவுள்ள கேயூவி100 பெட்ரோல் மாடல் கண்டிப்பாக இந்நிறுவனத்திற்கு இன்னும் அதிகமான பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட்களை அறிமுகப்படுத்த உதவி புரியும். கேயூவி100 பிஎஸ்4 மாடல் கடந்த மாதத்தில் வெறும் 183 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. ஆதலால் இந்த பிஎஸ்6 மாடலின் மீது தான் மஹிந்திரா நிறுவனம் முழு நம்பிக்கை வைத்துள்ளது.

1 லிட்டர் பெட்ரோல் பிஎஸ்6 என்ஜினுடன் விற்பனையாகி வரும் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ மாடலுக்கு கிட்ட ஒத்து போவதை போல 1.2 லிட்டர் பெட்ரோல் பிஎஸ்6 என்ஜினுடன் கேயூவி100 வெளியாகவுள்ளதால், இந்த கார் நிச்சயமாக எஸ்-பிரெஸ்ஸோ அளவிற்கு வாடிக்கையாளர்கள் இடையே பிரபலமடையும். கேயூவி100 மாடலின் டீசல் வேரியண்ட்டையும் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்த மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
2020 Mahindra KUV100 BS6 petrol spied testing. Its will be rival to Maruti S Presso
Story first published: Saturday, November 9, 2019, 18:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X