முதன் முதலாக கேமிராவின் கண்களில் சிக்கிய புதிய ஸ்கார்ப்பியோ: அதுவும் நம்ம சென்னைக்கு மிக அருகில்!

மஹிந்திரா நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை ஸ்கார்ப்பியோவை சென்னை அடுத்துள்ள செங்கல்பட்டில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளது. இந்த காரை முதல் முறையாக சாலையில் வைத்து டெஸ்ட் செய்யும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

முதன் முதலாக கேமிராவின் கண்களில் சிக்கிய புதிய ஸ்கார்ப்பியோ: அதுவும் நம்ம சென்னைக்கு மிக அருகில்!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம், நடப்பு ஆண்டில் வரப்போகும் க்ராஷ் டெஸ்ட் விதிமுறைகள் மற்றும் அடுத்த ஆண்டில் அமலுக்கு வரவிருக்கும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப, அதன் தயாரிப்புகளை மேம்படுத்தும் பணயில் ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில், கடந்த 8 மாதங்களில் எக்ஸ்யூவி300, மராத்ஸோ, ஆல்ட்ராஸ், புதுப்பிக்கப்பட்ட டியுவி300 உள்ளிட்ட பல்வேறு மேம்படுத்தப்பட்ட மாடல்களை அந்த நிறுவனம் அறிமுகம் செய்தது.

முதன் முதலாக கேமிராவின் கண்களில் சிக்கிய புதிய ஸ்கார்ப்பியோ: அதுவும் நம்ம சென்னைக்கு மிக அருகில்!

இதைத்தொடர்ந்து, மஹிந்திரா நிறுவனம், அதன் எஸ்யூவி ரகத்திலான ஸ்கார்ப்பியோ காரையும் புதிய விதிகளுக்கு ஏற்ப தயார் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புதுப்பிக்கப்பட்ட ஸ்கார்ப்பியோ காரை அந்த நிறுவனம் பரிசோதனைச் செய்து வருவதாகவும் தககவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு, காரை டெஸ்டிங்கில் ஈடுபடுத்தும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

முதன் முதலாக கேமிராவின் கண்களில் சிக்கிய புதிய ஸ்கார்ப்பியோ: அதுவும் நம்ம சென்னைக்கு மிக அருகில்!

ஸ்கார்ப்பியோ காரை முன்னதாக அந்த நிறுவனம், கடந்த 2017ம் ஆண்டில்தான் கடைசியாக புதுப்பித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, தற்போது வெளிவரவிருப்பது மூன்றாம் தலைமுறையாகும் ஸ்கார்ப்பியோவாகும். இசட்101 என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த எஸ்யூவி, மராத்ஸோவுக்கு அடுத்தபடியாக மஹிந்திரா நார்த் அமெரிக்கன் டெக்னிக்கல் சென்டர் மற்றும் மஹிந்திரா ரிசர்ச் வாலி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இரண்டாவது மாடல்.

முதன் முதலாக கேமிராவின் கண்களில் சிக்கிய புதிய ஸ்கார்ப்பியோ: அதுவும் நம்ம சென்னைக்கு மிக அருகில்!

மஹிந்திராவின் இந்த புதிய ஸ்கார்ப்பியோ, தற்போது விற்பனையில் இருக்கும் மடாலுக்கு வழங்கப்பட்டுள்ள அதே லேடர் ஃப்ரேம் கட்டுமானம்தான் வழங்கப்பட்டுள்ளது. இது இந்த எஸ்யூவிக்கு கட்டுமஸ்தான தோற்றத்தை வழங்குகின்றது. அதேசமயம், சிறப்பான ஏரோடைனமிஸுக்கு பெறுவதற்காக, மூன்றாம் தலைமுறை ஸ்கார்ப்பியோ சற்று குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸைப் பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

முதன் முதலாக கேமிராவின் கண்களில் சிக்கிய புதிய ஸ்கார்ப்பியோ: அதுவும் நம்ம சென்னைக்கு மிக அருகில்!

மஹிந்திராவின் இந்த புதிய தலைமுறை ஸ்கார்ப்பியோ முழுவதுமாக ஸ்டிக்கர்களால் மறைக்கப்பட்டிருந்தாலும் சில தகவல்கள் கேமிராக்கள் மூலம் நமது கண்களில் சிக்கியுள்ளன. அந்தவகையில், தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைக்கு காட்டிலும், இது சற்று பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

முதன் முதலாக கேமிராவின் கண்களில் சிக்கிய புதிய ஸ்கார்ப்பியோ: அதுவும் நம்ம சென்னைக்கு மிக அருகில்!

அதேசமயம் தொழில்நுட்ப வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில், காரின் முகப்பு பகுதியில் புதிய வடிவிலான ஹெட்லைட், 7 ஸ்லாட் ரேடியேட்டர் கிரில் ஆகியவை புது வடிவம் பெற்றுள்ளன. அதேபோன்று, இதன் பின்பகுதியில் புது வடிவிலான கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. இது, பழைய மாடலில் அப்ரைட் டிசைனில் பொருத்தப்பட்டிருந்தது. இதுபோன்ற, புதிய பாகங்கள் மற்றும் டிசைன்களால் புதிய தலைமுறை ஸ்கார்ப்பியோ சற்று அசத்தலாக காட்சியளிக்கிறது.

முதன் முதலாக கேமிராவின் கண்களில் சிக்கிய புதிய ஸ்கார்ப்பியோ: அதுவும் நம்ம சென்னைக்கு மிக அருகில்!

முந்தைய ஸ்கார்ப்பியோவில் அதிக சிறப்பம்சங்கள் மற்றும் இடவசதி இருந்தாலும், தரம் என்பது ஒரு குறைவாகவே இருந்து வந்தது. ஆகையால், அப்கமிங் மாடலில் இந்த குறை தீர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இந்த புதிய தலைமுறை காரில், தற்போதைய தலைமுறையினருக்கு ஏற்ப ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ தொழில்நுட்பத்துடன் கூடிய டச் ஸ்க்ரீன் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதன் முதலாக கேமிராவின் கண்களில் சிக்கிய புதிய ஸ்கார்ப்பியோ: அதுவும் நம்ம சென்னைக்கு மிக அருகில்!

மேலும், புதிய பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப, கடைசி வரிசையில் இருக்கும் இருக்கைகள் முன்பக்கத்தைப் பார்த்தவாறு அமைக்கப்படலாம்.

மஹிந்திராவின் இந்த புதிய தலைமுறை ஸ்கார்ப்பியோவில் புத்தம் புதிய 2.0 லிட்டர் பிஎஸ்-6 எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. இது, முழுக்க முழுக்க அலுமினியத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளதால், தற்போதைய மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் 2.2 லிட்டர் mHawk டீசல் இன்ஜினைக்காட்டிலும் 80கிலோ குறைவான எடையைப் பெற்று இருக்கின்றது.

முதன் முதலாக கேமிராவின் கண்களில் சிக்கிய புதிய ஸ்கார்ப்பியோ: அதுவும் நம்ம சென்னைக்கு மிக அருகில்!

அது மட்டுமின்றி, இந்த எஞ்ஜின் 170ஹெச் பவரையும், 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இந்த எஞ்ஜின்தான் அடுத்த தலைமுறை தார் மற்றும் எக்ஸ்யூவி500 எஸ்யூவி மாடல்களில் பொருத்தப்பட உள்ளன. மேலும், இது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் தயாராகி வருகின்றது.

image source: Motor Vikatan & ACI

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Next-Gen Mahindra Scorpio Spied First Time. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X