2020 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஏழு இருக்கை மற்றும் பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

2020ஆம் ஆண்டில் அறிமுகமாகவுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாடல் பிஎஸ்6-க்கு மாற்றப்பட்ட என்ஜினுடன் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க மறைப்பால் மூடப்பட்டுள்ள இந்த கார் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளதால் பிஎஸ்6 உமிழ்வு சோதனை கருவிகளுடன் இந்த கார் காட்சியளிக்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்களையும் வீடியோ ஒன்றையும் இந்த செய்தியில் காண்போம்.

2020 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஏழு இருக்கை மற்றும் பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

இந்த சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் 2020 மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் முக்கியமான டிசைன் மாற்றங்கள் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது தெரிய வருகிறது. மேலும் முன்புற க்ரில், ஆறு செங்குத்தான ஸ்லேடுகளை கொண்டிருப்பதும் இந்த சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் தெரிகிறது.

2020 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஏழு இருக்கை மற்றும் பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

ஹெட்லைட் அமைப்பு வேறொரு மாடலுடையது போல் தெரிகிறது. இதனால் விற்பனை எக்ஸ்யூவி500 கார் படத்தில் காட்டப்பட்டிருக்கும் ஹெட்லைட்டை கொண்டிருக்காது. உயர்தர கார்களில் காணப்படும் கதவு ஹேண்டில்ஸ் உடன் இந்த புதிய எக்ஸ்யூவி500 கார் விற்பனைக்கு வரவுள்ளது.

2020 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஏழு இருக்கை மற்றும் பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

உட்புறத்தில், ப்ளூடுத் மற்றும் ஆடியோ கண்ட்ரோல்களை கொண்ட ஃப்ளாட்-பாட்டம் ஸ்டேரிங் வீல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், டிஜிட்டல் எம்ஐடி, மறைப்பால் மூடப்பட்ட நிலையில் மிக பெரிய தொடுத்திரையுடன் கூடிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றை இந்த பிஎஸ்6 எக்ஸ்யூவி500 கார் கொண்டுள்ளது.

2020 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஏழு இருக்கை மற்றும் பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

இதுதவிர உட்புற பாகங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளதால் கூடுதல் தகவல்களை பெற முடியவில்லை. இருப்பினும் தற்போதைய கேபின் அமைப்பை விட வித்தியாசமான மற்றும் அப்டேட்டான கேபினை இந்த புதிய எக்ஸ்யூவி500 காரில் எதிர்பார்க்கலாம்.

2020 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஏழு இருக்கை மற்றும் பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

ஏற்கனவே கூறியதுபோல், சோதனை ஓட்டத்தில் இந்த கார் பிஎஸ்6 உமிழ்வு கருவிகளுடன் காணப்படுவதால், இந்த புதிய கார் பிஎஸ்6 என்ஜினுடன் தான் இயக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. பிஎஸ்6-க்கு இணக்கமான 2.0 லிட்டர் டீசல் என்ஜினுடன் இந்த கார் வெளியாகவுள்ளது.

2020 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஏழு இருக்கை மற்றும் பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

மஹிந்திரா நிறுவனம் இந்த எக்ஸ்யூவி500 பிஎஸ்6 காரை 2020ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இருப்பினும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் புதிய மாசு உமிழ்வு விதி இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால், அதற்கு முன்பாக இந்த கார் அறிமுகமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

2020 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஏழு இருக்கை மற்றும் பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

வாடிக்கையாளர் இப்போதெல்லாம் காரில் உள்ளே அதிக இடம் மற்றும் இருக்கைகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதனால் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது பிரபல மாடல்களில் 7 இருக்கை வெர்சன்களை தயாரித்து வருகின்றன. அந்த வகையில் மஹிந்திரா நிறுவனமும் எக்ஸ்யூவி300 மாடலின் 7 இருக்கை வெர்சனை தயாரித்துள்ளது. அடுத்த ஆண்டில் அறிமுகமாகவுள்ள இந்த காரை பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

2020 மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஏழு இருக்கை மற்றும் பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...

எக்ஸ்யூவி300 மாடலை போல் மூன்று வரிசை, ஏழு இருக்கைகளுடன் தயாராகியுள்ள இந்த எக்ஸ்யூவி500 மாடல் அறிமுகத்திற்கு பிறகு டாடா க்ராவிட்டாஸ் மற்றும் எம்ஜி ஹெக்டரின் 7 இருக்கை வெர்சன்களுடன் போட்டியிடவுள்ளது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Spy Pics: New Mahindra XUV500 Spotted Testing; Features Third Row Seats & BS-VI Compliant Engine
Story first published: Tuesday, December 3, 2019, 19:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X