கூடுதலாக 100மிமீ நீளத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ மாடலின் அடுத்த தலைமுறை கார்...

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது ஜிஎல்ஏ மாடலின் புதிய தலைமுறை எண்ட்ரி-லெவல் எஸ்யூவியை அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளது. ஜிஎல்ஏ மாடலின் முதல் தலைமுறைக்கு மாற்றாக வெளிவரும் இந்த மாடலின் முக்கிய அம்சங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

கூடுதலாக 100மிமீ நீளத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ மாடலின் அடுத்த தலைமுறை கார்...

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மற்ற மாடல்களான புதிய ஏ-கிளாஸ், சிஎல்ஏ மற்றும் ஜிஎல்பி எஸ்யூவிகளை போன்று ஜிஎல்ஏ மாடலின் இந்த புதிய தலைமுறை காரும் இந்நிறுவனத்தின் எம்எஃப்ஏ-2 ப்ளாட்ஃபாரமில் தயாரிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக 100மிமீ நீளத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ மாடலின் அடுத்த தலைமுறை கார்...

தற்போதைய ஜிஎல்ஏ மாடலை விட தோற்றம், டிசைன், தொழிற்நுட்பம் என அனைத்திலும் அப்டேட்டாக வெளியாகும் இந்த புதிய தலைமுறையின் நீளம் முந்தைய மாடலை 100 மிமீ கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் வீல்பேஸும் 30 மிமீ அதிகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக பரப்பில் உட்புற கேபினை எதிர்பார்க்கலாம். மேலும் உயரமும் 20 மிமீ குறைவாக உள்ளதால், கார் பார்ப்பதற்கு லக்சரி காரின் தோற்றத்தில் இருக்கும்.

கூடுதலாக 100மிமீ நீளத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ மாடலின் அடுத்த தலைமுறை கார்...

புதிய ஏ-கிளாஸ் மற்றும் ஜிஎல்பி மாடலில் கொடுக்கப்பட்டுள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், சிங்கிள் பைன்னாகிள் உடன் கூடிய இன்போடெயின்மெண்ட் அமைப்பு, காற்றாலையின் அமைப்பில் ஏசி, தோல்களால் நிரப்பப்பட்டுள்ள உட்புற அமைப்பு போன்ற ஏராளமான அம்சங்களை இந்த ஜிஎல்ஏ காரின் உட்புறமும் கொண்டுள்ளது. ஜிஎல்பி மாடலை போன்று இந்த காரிலும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்புற இருக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கூடுதலாக 100மிமீ நீளத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ மாடலின் அடுத்த தலைமுறை கார்...

இயந்திர பாகங்களை பார்த்தால், ஜிஎல்ஏவின் இந்த புதிய தலைமுறை மாடல் மெர்சிடிஸ் நிறுவனத்திற்கே உரிய நான்கு சிலிண்டர் அமைப்புகளை கொண்டுள்ளது. இதன் பெட்ரோல் வேரியண்ட் 1.3 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் என இரு என்ஜின் தேர்வுகளில் கிடைக்கும். இந்த இரு என்ஜின்களின் வெளியிடும் ஆற்றல் முறையே 165 பிஎச்பி மற்றும் 228 பிஎச்பி ஆகவுள்ளது.

கூடுதலாக 100மிமீ நீளத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ மாடலின் அடுத்த தலைமுறை கார்...

இந்த எஸ்யூவி காரின் டீசல் வேரியண்ட் 1.5 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் என்ஜின் தேர்வுகளில் விற்பனையாகவுள்ளது. இதில் 1.5 லிட்டர் என்ஜின் 115 பிஎச்பி பவரையும், 2.0 லிட்டர் என்ஜின் 150 -190 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டவைகளாக இருக்கும்.

கூடுதலாக 100மிமீ நீளத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ மாடலின் அடுத்த தலைமுறை கார்...

6 வேக நிலைகளை வழங்கக்கூடிய மேனுவல், 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 8-ஸ்பீடு ட்யூல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் போன்றவை ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக உள்ளன. இந்த காரில் முன் சக்கர ட்ரைவ் நிலையானதாகும். மெர்சிடிஸ் நிறுவனம் கூடுதலாக பின் சக்கர ட்ரைவ் தேர்வையும் இந்த காரில் வழங்குகிறது. இந்த கூடுதல் தேர்வில் பவர் ஆப்ரேட்டிங் முழுவதும் மாறுப்பட்டதாக இருக்கும்.

கூடுதலாக 100மிமீ நீளத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ மாடலின் அடுத்த தலைமுறை கார்...

அடுத்த ஆண்டின் மத்தியில் இந்த காரில் 218 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட ப்ளக்-இன் ஹைப்ரீட் பெட்ரோல் வேரியண்ட்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த வேரியண்ட்டில் கொடுக்கப்பட இருக்கும் 1.3 லிட்டர் என்ஜினுடன் 15.6 kWh பேட்டரியை கொண்ட எலக்ட்ரிக் மோட்டாரும் இணைக்கப்பட உள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டார் உதவியுடன் கூடுதலாக 60 கிலோமீட்டர் தூரத்திற்கு காரை இயக்கி செல்ல முடியும்.

கூடுதலாக 100மிமீ நீளத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ மாடலின் அடுத்த தலைமுறை கார்...

மேலும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2020ன் இறுதியில் அதிக செயல்திறன் ஆற்றலை கொண்ட ஏஎம்ஜி ஜிஎல்ஏ 35 மற்றும் 45 மாடல்களையும் வெளியிட திட்டமிட்டுள்ளது. ஜிஎல்ஏ மாடலின் இந்த புதிய தலைமுறையின் இந்திய அறிமுகம் குறித்த எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

கூடுதலாக 100மிமீ நீளத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ மாடலின் அடுத்த தலைமுறை கார்...

ஏனெனில் மெர்சிடிஸ் நிறுவனம் தற்சமயம் அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்துவதற்காக ஏ-கிளாஸ் செடான், ஜிஎல்பி, ஜிஎல்இ, ஜிஎல்எஸ், ஜிஎல்சி ஃபேஸ்லிஃப்ட் போன்ற மாடல்களின் தயாரிப்புகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஜிஎல்ஏ புதிய தலைமுறை மாடல், பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மற்றும் வோல்வோ எக்ஸ்சி40 உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக களமிறக்கப்பட உள்ளது.

Most Read Articles
English summary
Next-gen Mercedes-Benz GLA: New details surface
Story first published: Saturday, November 16, 2019, 12:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X