டொயோட்டா- சுசுகி கூட்டணியில் உருவாகும் இரண்டாவது கார்...

மாருதி சுசுகி நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் விட்டாரா பிரெஸ்ஸா மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை அறிமுகப்படுத்தவுள்ளது. இது குறித்த தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

டொயோட்டா- சுசுகி கூட்டணியில் உருவாகும் இரண்டாவது கார்...

உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் பல அப்டேட்களுடன் களமிறங்கவுள்ள இந்த விட்டரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் கார், டொயோட்டா- மாருதி சுசுகியின் கூட்டணியில் அறிமுகமாகும் இரண்டாவது காராக விளங்கவுள்ளது. இதற்கு முன்னதாக டொயோட்டாவின் க்ளான்ஸா மாடல் மாருதியின் பலேனோ மாடலை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்தது.

டொயோட்டா- சுசுகி கூட்டணியில் உருவாகும் இரண்டாவது கார்...

விட்டாரா பிரெஸ்ஸா மாடலின் அடுத்த தலைமுறை கார் அறிமுகமாவதற்கு குறைந்தது இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகும் என கூறப்படுகிறது. அதுவரை விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு இந்திய சந்தையில் இருக்கும் வரவேற்பு குறையாமல் பார்த்து கொள்வதற்காக தான் இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் அறிமுகமாகவுள்ளது.

டொயோட்டா- சுசுகி கூட்டணியில் உருவாகும் இரண்டாவது கார்...

தொழிற்நுட்ப அம்சங்கள் மட்டுமில்லாமல் என்ஜின் தேர்விலும் கூடுதலாக பெட்ரோல் வேரியண்ட்டை இந்த காரில் மாருதி நிறுவனம் சேர்க்கவுள்ளது. இதற்காக விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் வெர்சனின் இந்த பெட்ரோல் வேரியண்ட்டில் 1.3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படவுள்ளது.

டொயோட்டா- சுசுகி கூட்டணியில் உருவாகும் இரண்டாவது கார்...

இந்த பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது, மாருதி சுசுகி நிறுவனம் தற்சமயம் தனது மாடல் கார்களை ஒவ்வொன்றாக பிஎஸ்6 தரத்திற்கு மாற்றி வருகிறது. இவ்வாறு மாற்றப்படும் கார்களில் பெட்ரோல் என்ஜினை மட்டுமே பொருத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டொயோட்டா- சுசுகி கூட்டணியில் உருவாகும் இரண்டாவது கார்...

டீசல் வேரியண்ட்களை வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்து தயாரிக்கவும் முடிவெடுத்துள்ளது. இதனால் தான் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்டு வருகின்ற மற்ற மாருதி சுசுகி கார்களான சியாஸ், எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 மாடல்களில் நான்கு-சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினை பொருத்தி சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தி வருகிறது.

டொயோட்டா- சுசுகி கூட்டணியில் உருவாகும் இரண்டாவது கார்...

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 104.7 பிஎச்பி பவரையும் 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் வழங்கப்படவுள்ளன.

டொயோட்டா- சுசுகி கூட்டணியில் உருவாகும் இரண்டாவது கார்...

பிஎஸ்6 என்ஜின்களை 2019 ஏப்ரல் மாதத்திலேயே மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகம் செய்துவிட்டது. பிஎஸ்6 அப்டேட் உடன் கூடுதலாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சனால் இந்திய சந்தையில் விட்டாரா பிரெஸ்ஸாவின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டு தான் இருக்க போகிறது.

Most Read Articles
English summary
2020 Vitara Brezza Facelift Could Be 2nd Rebadged Car From Toyota-Suzuki Alliance
Story first published: Monday, December 9, 2019, 19:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X