ஆச்சரியமா இருக்கே... இரவு 10 மணிக்கு மேல் கார் கதவை படாரென மூட கூடாது... ஏன் தெரியுமா?

கார்கள் பற்றி உங்களுக்கு தெரியாத பல்வேறு ஆச்சரியமான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஆச்சரியமா இருக்கே... இரவு 10 மணிக்கு மேல் கார் கதவை படாரென மூட கூடாது... ஏன் தெரியுமா?

கார்கள் இல்லாத உலகை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. கார்கள் நம் வாழ்வில் இரண்டற கலந்து விட்டன. கார்களின் வரலாறு மிகவும் பெரியது. ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரை கார்கள் பல்வேறு பரிணாம வளர்ச்சிகளை கண்டுள்ளன. இன்றைய கால கட்டத்தில் கிடைக்கும் நவீன கார்களில் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன.

ஆச்சரியமா இருக்கே... இரவு 10 மணிக்கு மேல் கார் கதவை படாரென மூட கூடாது... ஏன் தெரியுமா?

அத்துடன் அவை மிகவும் பாதுகாப்பானதாகவும் மாறி விட்டன. இன்னும் சில ஆண்டுகளில் கார்கள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாகலாம். இப்படி நம் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத கார்கள் பற்றி உங்களுக்கு தெரியாத பல்வேறு ஆச்சரியமான தகவல்களை எல்லாம் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஆச்சரியமா இருக்கே... இரவு 10 மணிக்கு மேல் கார் கதவை படாரென மூட கூடாது... ஏன் தெரியுமா?

1. உலகின் முதல் ஆட்டோமொபைல் கடந்த 1885ம் ஆண்டு கார்ல் பென்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த மோட்டார் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 16 கிலோ மீட்டர்கள். இதில், சிங்கிள் சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் இன்ஜின் கிடைமட்டமாக பொருத்தப்பட்டிருந்தது. இது பென்ஸ் பேடடன்ட் மோட்டார்வேகன் என அறியப்பட்டது.

ஆச்சரியமா இருக்கே... இரவு 10 மணிக்கு மேல் கார் கதவை படாரென மூட கூடாது... ஏன் தெரியுமா?

2. கடந்த 1908ம் ஆண்டு ஹென்ரி போர்டால் மாடல் டி உருவாக்கப்பட்டது. பெருந்திரளான மக்களுக்கு கிடைத்த முதல் கார் இதுவே. இந்த காரின் விலை அப்போது மிகவும் குறைவாக இருந்தது. 1908ம் ஆண்டு இந்த காரின் விலை 850 அமெரிக்க டாலர்களாக மட்டுமே இருந்தது. 1925ம் ஆண்டில் 260 அமெரிக்க டாலர்களாக இன்னும் விலை குறைந்தது.

ஆச்சரியமா இருக்கே... இரவு 10 மணிக்கு மேல் கார் கதவை படாரென மூட கூடாது... ஏன் தெரியுமா?

3. கடந்த 1986ம் ஆண்டு உலகில் 500 மில்லியன் கார்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று உலகில் தோராயமாக 1.2 பில்லியன் கார்கள் உள்ளன. அதே சமயம் 2040ம் ஆண்டு உலகில் மொத்தம் 2 பில்லியன் கார்கள் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆராய்ச்சி அமைப்பான பெர்ன்ஸ்டெயின் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆச்சரியமா இருக்கே... இரவு 10 மணிக்கு மேல் கார் கதவை படாரென மூட கூடாது... ஏன் தெரியுமா?

4. ஒரு சராசரி காரில் 30 ஆயிரம் பாகங்கள் இருக்கும்.

5. கார்களின் ஆயுட்காலத்தில் 95 சதவீதம் பார்க்கிங்கிலேயே கழிகிறது.

6. உலக மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் சாலையின் வலது பக்கத்தில்தான் காரை ஓட்டுகின்றனர்.

7. விபத்து அல்லது தாக்கத்தின்போது, வெறும் 30 மில்லிசெகண்ட்களில் ஏர்பேக் விரிவடையும்.

MOST READ: பிரதமருக்கே இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி வாலாட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டர்... நண்பர்களுடன் அட்டகாசம்

ஆச்சரியமா இருக்கே... இரவு 10 மணிக்கு மேல் கார் கதவை படாரென மூட கூடாது... ஏன் தெரியுமா?

8. டிரைவரின் கவனம் திசை திரும்பிய பிறகு சராசரியாக 3 வினாடிகளில்தான் பொதுவாக விபத்துக்கள் நடைபெறுகின்றன.

9. 1960களின் மத்தியில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட மேட் இன் அமெரிக்கா கார்களில் சராசரியாக 24 குறைபாடுகள் இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை பாதுகாப்பு தொடர்புடையவை.

MOST READ: ஆபத்தில் உதவிய ஜீப்: போலீஸார் செய்த நன்றி கடனால் உரிமையாளர் அதிர்ச்சி!

ஆச்சரியமா இருக்கே... இரவு 10 மணிக்கு மேல் கார் கதவை படாரென மூட கூடாது... ஏன் தெரியுமா?

10. உலகின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளராக கடந்த 1980ம் ஆண்டில் ஜப்பான் உருவெடுத்தது. ஆனால் இன்று உலகில் அதிக கார்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது.

11. உலகின் மொத்த கார்களில் கால்வாசியை கிட்டத்தட்ட சீனா என்கிற ஒரு நாடே உற்பத்தி செய்கிறது.

12. ரஷ்யாவில் அழுக்கு படிந்த கார்களை ஓட்டுவது குற்றமாக கருதப்படுகிறது.

MOST READ: 11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்த சூப்பர் கண்ணாடி... இதில் இருக்கும் ஆச்சரியம் என்னவென்று தெரியுமா?

ஆச்சரியமா இருக்கே... இரவு 10 மணிக்கு மேல் கார் கதவை படாரென மூட கூடாது... ஏன் தெரியுமா?

13. லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் தொகையை காட்டிலும் கார்களின் எண்ணிக்கை அதிகம்.

14. புதிய காரை வாங்க அதிகம் செலவு செய்ய வேண்டிய நாடுகளில் ஒன்றாக டென்மார்க் உள்ளது. புதிய கார்களுக்கு டென்மார்க் 150 சதவீத வரியை வசூலிக்கிறது. ஆனால் இதனை 100 சதவீத குறைக்க டென்மார்க் திட்டமிட்டு வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாயின.

ஆச்சரியமா இருக்கே... இரவு 10 மணிக்கு மேல் கார் கதவை படாரென மூட கூடாது... ஏன் தெரியுமா?

15. பென்ஸ் மற்றும் மெர்சிடிஸ் ஆகிய 2 நிறுவனங்களும் 1920ம் ஆண்டு வரை போட்டியாளர்களாகதான் இருந்தன. அதன்பின் இந்த 2 நிறுவனங்களுக்கு இணைக்கப்பட்டு புதிய நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. அதன்பின் மெர்சிடிஸ் பென்ஸ் என்ற பிராண்டின் கீழ் கார்கள் விற்பனை செய்யப்பட தொடங்கின.

16. உலகின் முதல் 4 வீல் டிரைவ் கார் அமெரிக்க ராணுவத்திற்காக கடந்த 1940ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இது ஜீப் என அழைக்கப்பட்டது.

ஆச்சரியமா இருக்கே... இரவு 10 மணிக்கு மேல் கார் கதவை படாரென மூட கூடாது... ஏன் தெரியுமா?

17. கடந்த 1962ம் ஆண்டில், சீட் பெல்ட்களை பயன்படுத்துவது விஸ்கோன்சினில் (அமெரிக்க மாகாணம்) சட்டமாக உருவெடுத்தது. ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கும் சீட் பெல்ட்கள் ஒரு உயிரை காப்பாற்றுகின்றன.

18. ஏர்பேக்குகள் ஒரு பாதுகாப்பு உபகரணமாக கடந்த 1974ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன.

19. டொயோட்டா, மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஹோண்டா மற்றும் ஃபோர்டு ஆகியவை உலகின் மதிப்பு மிகுந்த கார் பிராண்டுகளாக திகழ்கின்றன.

ஆச்சரியமா இருக்கே... இரவு 10 மணிக்கு மேல் கார் கதவை படாரென மூட கூடாது... ஏன் தெரியுமா?

20. ஃபெராரி நிறுவனம் ஒரு நாளைக்கு வெறும் 14 கார்களை மட்டுமே உற்பத்தி செய்கிறது. அதே சமயம் டொயோட்டா நிறுவனம் ஒரு நாளைக்கு 13,000 யூனிட்களை உற்பத்தி செய்கிறது.

21. உலகில் அதிகம் மறுசுழற்சி செய்யப்படும் தயாரிப்பு ஆட்டோமொபைல்கள்தான்.

22. கார் உரிமையாளர்களில் 16 சதவீதம் தங்கள் கார்களை ஒருபோதும் கழுவியதில்லை.

ஆச்சரியமா இருக்கே... இரவு 10 மணிக்கு மேல் கார் கதவை படாரென மூட கூடாது... ஏன் தெரியுமா?

23. உலகிலேயே காரை பார்க்கிங் செய்ய அதிகம் செலவு ஆகும் நகரம் லண்டன்.

24. சுவிட்சர்லாந்தில் இரவு 10 மணிக்கு மேல் கார் கதவை படாரென்ற ஓசையுடன் மூடக்கூடாது. அவ்வாறு மூடினால் அது சட்ட விரோதம். இதனால் எழும் சத்தம் காரணமாக மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்பட கூடாது என்பதற்காகவே இவ்வாறான விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

ஆச்சரியமா இருக்கே... இரவு 10 மணிக்கு மேல் கார் கதவை படாரென மூட கூடாது... ஏன் தெரியுமா?

25. ஜப்பானில் டிரைவரின் திறன்கள் மற்றும் அனுபவத்தை கண்டறியும் வகையில், கார்களில் வெவ்வேறு விதமான ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகின்றன. எனவே இத்தகைய கார்களுக்கு அருகே பயணம் செய்யும்போது மற்ற கார் டிரைவர்களால் இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க முடியும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
25 Interesting Facts About Cars. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X