இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டி பிடித்தது ரெனால்ட் க்விட்... எப்படி தெரியுமா?

ரெனால்ட் க்விட் கார் இந்தியாவில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டி பிடித்தது ரெனால்ட் க்விட்... எப்படி தெரியுமா?

இந்திய மார்க்கெட்டில் 3 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற புதிய மைல்கல்லை ரெனால்ட் க்விட் தற்போது எட்டியுள்ளது. ரெனால்ட் க்விட் பட்ஜெட் ஹேட்ச்பேக் கடந்த 2015ம் ஆண்டு முதல் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டி பிடித்தது ரெனால்ட் க்விட்... எப்படி தெரியுமா?

ஆனால் இடைப்பட்ட ஆண்டுகளில் ஒரு சில சிறிய அளவிலான அப்டேட்களை மட்டுமே ரெனால்ட் க்விட் பெற்றுள்ளது. இருந்தபோதும் மிக சவாலான விலை, பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளதால் ரெனால்ட் க்விட் 3 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை எட்டி பிடித்துள்ளது.

இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டி பிடித்தது ரெனால்ட் க்விட்... எப்படி தெரியுமா?

ரெனால்ட் க்விட் காரில், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதிகளுடன் கூடிய 7.0 இன்ச் டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்திய மார்க்கெட்டில் இந்த வசதி கிடைக்கும் மலிவான விலை கார்களில் ரெனால்ட் க்விட்டும் ஒன்று.

இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டி பிடித்தது ரெனால்ட் க்விட்... எப்படி தெரியுமா?

இதுதவிர டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ஒன் டச் லேன் சேஞ்ச் இன்டிகேட்டர்கள் உள்ளிட்ட வசதிகளும் ரெனால்ட் க்விட் காரில் வழங்கப்படுகிறது. கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் ரெனால்ட் க்விட் கார் நடப்பாண்டு அப்டேட் செய்யப்பட்டது.

இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டி பிடித்தது ரெனால்ட் க்விட்... எப்படி தெரியுமா?

தற்போது இபிடி உடனான ஏபிஎஸ், டிரைவர் ஏர் பேக், டிரைவர் மற்றும் பாசஞ்சர் சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டி பிடித்தது ரெனால்ட் க்விட்... எப்படி தெரியுமா?

இதில், ஏபிஎஸ் வசதி அனைத்து புதிய கார்களிலும் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே சமயம் எஞ்சிய பாதுகாப்பு வசதிகள், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து கார்களிலும் வரும் ஜூலை 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது.

இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டி பிடித்தது ரெனால்ட் க்விட்... எப்படி தெரியுமா?

ரெனால்ட் க்விட் காரில் 54 எச்பி பவரை வெளிப்படுத்தும் 0.8 லிட்டர் பெட்ரோல் மற்றும் 68 எச்பி பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் பெட்ரோல் என மொத்தம் 2 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டி பிடித்தது ரெனால்ட் க்விட்... எப்படி தெரியுமா?

இந்த இரண்டு இன்ஜின்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அதே சமயம் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனையும் ரெனால்ட் நிறுவனம் வழங்குகிறது.

இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டி பிடித்தது ரெனால்ட் க்விட்... எப்படி தெரியுமா?

தற்போது க்விட் காரின் ஃபேஸ்ஃலிப்ட் வெர்ஷனை களமிறக்கும் பணிகளிலும் ரெனால்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அனேகமாக ரெனால்ட் க்விட் ஃபேஸ்ஃலிப்ட் நடப்பாண்டு இறுதிக்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டி பிடித்தது ரெனால்ட் க்விட்... எப்படி தெரியுமா?

இதுதவிர ட்ரைபர் என்ற புத்தம் புதிய 7 சீட்டம் எம்பிவி கார் ஒன்றையும் ரெனால்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. மிகவும் மலிவான விலையில் எதிர்பார்க்கப்படுவதால், ரெனால்ட் ட்ரைபர் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டி பிடித்தது ரெனால்ட் க்விட்... எப்படி தெரியுமா?

ரெனால்ட் ட்ரைபர் கார் வரும் ஜூன் 19ம் தேதி வெளியிடப்படவுள்ளது. அதனை தொடர்ந்து ஜூலை மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அத்துடன் டஸ்டர் காரின் ஃபேஸ்ஃலிப்ட் வெர்ஷனையும் ரெனால்ட் நிறுவனம் களமிறக்கவுள்ளது.

இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டி பிடித்தது ரெனால்ட் க்விட்... எப்படி தெரியுமா?

இதில், டஸ்டர் காரின் முன்பக்க டிசைன் மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பாதுகாப்பு வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளன. இவை தவிர வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள பிஎஸ்-6 விதிகளுக்கு இணங்கும் வகையிலான இன்ஜின்களும் வழங்கப்படவுள்ளன.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
3 Lakh Units Sold: Renault Kwid Achieves New Milestone In India. Read in Tamil
Story first published: Monday, June 10, 2019, 20:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X