காரில் ஏற்பட்ட இந்த சிறு கோளாறுதான் 4 பேர் உயிரை பறித்தது? என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

விருதுநகர் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காரில் ஏற்பட்ட இந்த சிறு கோளாறுதான் 4 பேர் உயிரை பறித்தது? என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிர்களை பறிகொடுத்து வரும் நாடுகளில் ஒன்று இந்தியா. இங்கு சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது. சாலை விபத்துக்கள் காரணமாக இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.48 லட்சம். இது கடந்த 2018ம் ஆண்டில் 1.49 லட்சமாக உயர்ந்துள்ளது.

காரில் ஏற்பட்ட இந்த சிறு கோளாறுதான் 4 பேர் உயிரை பறித்தது? என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

குடிபோதை மற்றும் அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவது, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வது போன்ற முக்கியமான காரணங்களால்தான் இந்தியாவில் சாலை விபத்துக்களால் அதிகம் பேர் உயிரிழந்து வருகின்றனர். இதுதவிர அலட்சியம், வாகனங்களில் திடீரென ஏற்படும் பழுது ஆகியவையும் சாலை விபத்துக்களுக்கு காரணங்களாக உள்ளன.

காரில் ஏற்பட்ட இந்த சிறு கோளாறுதான் 4 பேர் உயிரை பறித்தது? என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்து கொண்டுள்ளது. ஆனால் இதற்கு பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. மேற்கண்ட புள்ளி விபரங்கள் அதனை உறுதி செய்கின்றன. எனவே வாகனங்களில் போதுமான பாதுகாப்பு வசதிகளை கட்டாயமாக வழங்க வேண்டும் என வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காரில் ஏற்பட்ட இந்த சிறு கோளாறுதான் 4 பேர் உயிரை பறித்தது? என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் (ABS- Anti-lock Braking System) கட்டாயம் என்ற உத்தரவை இதற்கு உதாரணமாக கூறலாம். 125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து இரு சக்கர வாகனங்களிலும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெறுவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.

காரில் ஏற்பட்ட இந்த சிறு கோளாறுதான் 4 பேர் உயிரை பறித்தது? என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இதுதவிர கார்களில் ஏர் பேக்குகள் (Airbags), ஸ்பீட் வார்னிங் சிஸ்டம் (Speed Warning System), சீட் பெல்ட் ரிமைண்டர் (Seatbelt Reminder) மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் (Rear Parking Sensors) உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இடம்பெறுவது வரும் மாதங்களில் கட்டாயமாகிறது. இப்படிப்பட்ட சூழலில் விருதுநகர் அருகே நடைபெற்ற ஒரு சாலை விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரில் ஏற்பட்ட இந்த சிறு கோளாறுதான் 4 பேர் உயிரை பறித்தது? என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை சேர்ந்தவர் கண்ணன் வேலு. இவர் தனது குடும்பத்தினரான கமலக்கண்ணன், பிந்து மற்றும் பிரேம குமாரி ஆகியோருடன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இதுதவிர இளம்பெண் ஒருவரும் காரில் பயணித்தார். அவரது பெயர் விபரம் வெளியாகவில்லை.

காரில் ஏற்பட்ட இந்த சிறு கோளாறுதான் 4 பேர் உயிரை பறித்தது? என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இது பழைய மாடல் ஃபோர்டு எண்டெவர் (Ford Endeavour) கார் ஆகும். கண்ணன் வேலுதான் காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ராமானுஜபுரம் என்ற இடத்திற்கு அருகே உள்ள மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் (மார்ச் 24) கார் பயணித்து கொண்டிருந்தது.

காரில் ஏற்பட்ட இந்த சிறு கோளாறுதான் 4 பேர் உயிரை பறித்தது? என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

அப்போது திடீரென கண்ணன் வேலுவின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரமாக இருந்த தடுப்பு கம்பி மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில், கண்ணன் வேலு, கமலக்கண்ணன் பிந்து மற்றும் பிரேம குமாரி ஆகிய நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். எனினும் காரில் இருந்த மற்றொரு இளம்பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

காரில் ஏற்பட்ட இந்த சிறு கோளாறுதான் 4 பேர் உயிரை பறித்தது? என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

ஆனால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடைபெற்ற உடன் அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அத்துடன் தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். என்றாலும் 4 பேரின் உயிரை இந்த விபத்து காவு வாங்கி விட்டது.

காரில் ஏற்பட்ட இந்த சிறு கோளாறுதான் 4 பேர் உயிரை பறித்தது? என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இந்த கோர விபத்து தொடர்பாக தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விபத்து நடைபெற்ற இடத்தில் தடுப்பு கம்பிக்கு அருகே எச்சரிக்கை பலகைகள் எதுவும் வைக்கப்படாமல் அலட்சியம் காட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில்தான் அங்கு அதிவேகத்தில் வந்த கார் தடுப்பு கம்பியின் மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளது.

காரில் ஏற்பட்ட இந்த சிறு கோளாறுதான் 4 பேர் உயிரை பறித்தது? என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

கண்ணன் வேலு அதிவேகத்தில் வந்து கொண்டிருந்ததாக கூறப்படும் சூழலில், கார் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல்களும் வெளியாகியுள்ளன. இதனால் கண்ணன் வேலுவால் வேகத்தை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் போயிருக்கலாம். இது தொடர்பாக போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

காரில் ஏற்பட்ட இந்த சிறு கோளாறுதான் 4 பேர் உயிரை பறித்தது? என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்தியாவில் லட்சக்கணக்கானோரின் உயிரை சாலை விபத்துக்கள் காவு வாங்கி கொண்டிருப்பதற்கு அதிவேகம் ஓர் முக்கிய காரணம். அதிவேகத்தில் பயணிப்பது என்பது சட்டத்திற்கு எதிரான செயல்பாடு மட்டுமல்ல. அது மிகவும் ஆபத்தானதும் கூட. அதிவேகத்தில் பயணிப்பவர்கள் மட்டுமல்லாது இதர வாகன ஓட்டிகளுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும்.

காரில் ஏற்பட்ட இந்த சிறு கோளாறுதான் 4 பேர் உயிரை பறித்தது? என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

இதனை உணர்ந்து கொள்ளாமல் வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் பயணிப்பதால், இந்திய சாலைகள் மிகவும் அபாயகரமானவையாக மாறி வருகின்றன. வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் பயணம் செய்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்ன? அதிவேகத்தில் பயணம் செய்வதை தவிர்ப்பது எப்படி? என்பதை இனி பார்க்கலாம்.

காரில் ஏற்பட்ட இந்த சிறு கோளாறுதான் 4 பேர் உயிரை பறித்தது? என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

நீங்கள் ஆக்ரோஷமாகவோ அல்லது அதீக ஆர்வமாகவோ இருந்தால், அது அதிவேகத்தில் வாகனத்தை இயக்கும்படி உங்களை தூண்டும். எனவே வாகனங்களை இயக்க தொடங்கும் முன்பு 'ரிலாக்ஸ்' செய்து கொள்ளுங்கள். டிரைவிங்கை பொறுத்தவரை சீரான நல்ல மனநிலையில் இருப்பது மிகவும் அவசியமானது. ஸ்டீயரிங் வீலில் கை வைப்பதற்கு முன்பாக அதனை உறுதி செய்து கொள்ளுங்கள்.

காரில் ஏற்பட்ட இந்த சிறு கோளாறுதான் 4 பேர் உயிரை பறித்தது? என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

மென்மையான பாடல்களை கேட்பது, ஆழ்ந்த சுவாசம் எடுத்து கொள்வது ஆகியவற்றின் மூலம் உங்களை நீங்களே ரிலாக்ஸ் செய்து கொள்ள முடியும். அத்துடன் எந்த இடத்திற்கு செல்வதென்றாலும் கொஞ்சம் முன் கூட்டியே புறப்படுங்கள். போதிய நேரமின்மை, தாமதம் ஆகியவையே பெரும்பாலான வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் பயணம் செய்ய முக்கிய காரணம். இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு உங்களை நீங்களே தள்ளி கொள்ளாதீர்கள்.

காரில் ஏற்பட்ட இந்த சிறு கோளாறுதான் 4 பேர் உயிரை பறித்தது? என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

சற்று முன்னதாக புறப்பட்டால், மிதமான வேகத்தில் பயணம் செய்ய முடியும். இதன் மூலம் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்தில் பாதுகாப்பாக சென்றடையலாம். இதுதவிர ஸ்பீடோமீட்டர் (Speedometer) மீது எப்போதும் ஒரு கண் வைத்து கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் அதிவேகத்தில் பயணிப்பது தெரியவந்தால், அதற்கு ஏற்ப வேகத்தை குறைத்து கொள்ள முடியும்.

காரில் ஏற்பட்ட இந்த சிறு கோளாறுதான் 4 பேர் உயிரை பறித்தது? என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

அதிவேகத்தில் பயணம் செய்வதை தவிர்ப்பதற்கு க்ரூஸ் கண்ட்ரோல் (Cruise Control) வசதியை பயன்படுத்தலாம். க்ரூஸ் கண்ட்ரோல் வசதி மூலம் குறிப்பிட்ட வேகத்தை 'செட்' செய்து விட்டால், வாகனம் அதே வேகத்தில் சீராக பயணிக்கும். ஆனால் ஒவ்வொரு கார் பிராண்டிற்கும் ஏற்ப க்ரூஸ் கண்ட்ரோல் செட்டிங்குகள் மாறுபடும். உங்கள் வாகனத்தின் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை எப்படி கையாள்வது? என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

காரில் ஏற்பட்ட இந்த சிறு கோளாறுதான் 4 பேர் உயிரை பறித்தது? என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

ஒவ்வொரு இடத்திலும் எந்த வேகத்தில் பயணிக்க வேண்டும்? என்ற ஸ்பீட் லிமிட் (Speed Limit) நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். அதனை பின்பற்றுங்கள். இன்னும் சொல்லப்போனால் ஸ்பீட் லிமிட்டை காட்டிலும் சற்று மெதுவாக பயணிப்பது இன்னும் சிறந்தது. இதன் காரணமாக நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைவதில் தாமதம் ஏற்படலாம். ஆனால் முன்கூட்டியே கிளம்புவதன் மூலம் இந்த பிரச்னைக்கு முடிவு கட்டலாம்.

Source: Polimer news

Most Read Articles
English summary
4 People Killed In Road Accident Near Virudhunagar: Tips To Avoid Speeding. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X